jkr

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, நிலுவை ஜனவரியில் கிட்டும்


அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் சம்பள உயர்வு வழங்கப்படும். இந்த தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்துள்ளார். இவ்வருடத்தின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான நிலுவைப் பணமும் ஜனவரி மாதம் வழங்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

எனவே, நாட்டின் அத்தியாவசிய சேவைகளை ஸ்தம்பிதமடையச் செய்யும் ஒரு சிலரின் சதித்திட்ட வலையில் சிக்கிவிடவேண்டாம் என்று அரசாங்கம், தொழிலாளர் வர்க்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஊடகத்துறை அமைச்சில் நேற்று புதன்கிழமை காலை நடைபெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் கூறுகையில்,

"2009 ஆம் ஆண்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்க முடியாது என்று நாங்கள் இவ்வருட ஆரம்பத்தில் தெரிவித்திருந்தோம். அரச ஊழியர்களும் அதனை புரிந்துகொண்டு வீதிக்கு இறங்காமல் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். எனவே அடுத்த ஜனவரி மாதம் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்படும். மேலும் இவ்வருடத்தின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான நிலுவைப் பணமும் வழங்கப்படும். இதனை ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சிரமங்களை புரிந்த நிலையிலேயே இந்த சம்பள அதிகரிப்பை வழங்குகின்றோம். எனவே முக்கியமாக இம்மாதம் 10 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை தொழிலாளர் வர்க்கம் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். நாட்டின் அத்தியாவசிய சேவைகளை குழப்பி அவற்றை ஸ்தம்பிதமடையச் செய்யும் சதித்திட்டம் ஒன்றில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அந்த வலையில் சிக்கிவிடவேண்டாம் என்று தொழிலாளர் வர்க்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். தேர்தல் கால தந்திர நடவடிக்கை ஒன்றில் ஈடுபட சிலர் முயற்சிக்கின்றனர்"என்றார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, நிலுவை ஜனவரியில் கிட்டும்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates