தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்குப் படிப்படியாக நிரந்தரக் குடியுரிமை

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்குப் படிப்படியாக நிரந்தரக் குடியுரிமை பெற்றுத் தரப்படும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தஞ்சையில் நடந்த திருமண விழா ஒன்றில் பேசிய போதே துணை முதல்வர் ஸ்டாலின் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
"தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் முதல்வர் கருணாநிதி உத்தரவுப்படி அமைச்சர்கள் ஒன்றிணைந்து அண்மையில் ஆய்வு நடத்தினோம். அமைச்சர்களின் ஆய்வு அறிக்கையில் சுட்டிக் காட்டியதைவிடக், கூடுதலாக இலங்கை அகதிகளின் மறுவாழ்வுக்கு முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார்.
தமிழகத்தில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் நல்வாழ்விலும் முதல்வர் அக்கறை செலுத்தி வருகிறார். தமிழகத்தில் தற்போது மக்களால் உருவாக்கப்பட்ட, மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஆட்சியே நடைபெற்று வருகிறது.
அரிய பல திட்டங்களை நிறைவேற்றி, தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற மாபெரும் தலைவராக முதல்வர் கருணாநிதி உயர்ந்துள்ளார்.
பெண்களால்தான் குடும்பத்திலும், சமுதாயத்திலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று கருதித்தான் இந்த ஆட்சியில் பெண்களுக்கு ஏற்ற நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.
அடுத்த ஆண்டு கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கவிருக்கின்ற இந்தத் தருணத்தில், புதிதாகத் திருமணம் முடிக்கும் தம்பதிகள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயரைச் சூட்ட வேண்டும்" என்றார்.
0 Response to "தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்குப் படிப்படியாக நிரந்தரக் குடியுரிமை"
แสดงความคิดเห็น