ஆப்கானுக்கு கூடுதல் துருப்புக்கள் : ஒபாமா ஆலோசனை

இது தொடர்பாக நான்கு வழிகள் ஆராயப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை கூறுகிறது. இவையனைத்தும் கூடுதல் படையினரை அங்கு அனுப்புவதை மையமாகக் கொண்டவை என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஆப்கானுக்கு 30,000 முதல் 45,000 துருப்புக்களை அனுப்ப வேண்டும் என்ற யோசனைக்குத்தான் கூடுதலான ஆதரவு இருப்பதாக பிபிசி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் ஒபாமா தூர கிழக்கு நாடுகளுக்கான தனது பயணத்தை அடுத்த வாரம் முடித்துத் திரும்பும்வரை இது தொடர்பான முடிவு அறிவிக்கப்படாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
0 Response to "ஆப்கானுக்கு கூடுதல் துருப்புக்கள் : ஒபாமா ஆலோசனை"
แสดงความคิดเห็น