jkr
แสดงบทความที่มีป้ายกำกับ அதிபர் பராக் ஒபாமா แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ அதிபர் பராக் ஒபாமா แสดงบทความทั้งหมด

அல்-கொய்தா எங்கிருந்தாலும் அமெரிக்கா ஒழித்துக் கட்டும் : ஒபாமா


அல்-கொய்தா தீவிரவாதிகள் உலகின் எந்த இடத்தில் இருந்துகொண்டு சதி திட்டங்களைத் தீட்டினாலும் அவர்களை அமெரிக்கா ஒழித்துக்கட்டும் என அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார்.

தற்போது ஹவாயில் விடுமுறையை கழித்து வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்க மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார்.

டெட்ராய்ட் நகருக்குச் சென்ற அமெரிக்க விமானத்தை நடுவானில் தகர்க்கத் தீவிரவாதிகள் தீட்டிய திட்டம் முறியடிக்கப்பட்ட பின்பு முதல்தடவையாக நாட்டுமக்களுக்கு ஆற்றிய இந்த உரையில் ஒபாமா மேலும் கூறியதாவது:

"டெட்ராய்ட் விமானத்தை தகர்க்கும் சதி திட்டத்தைத் தீவிரவாதிகள் நிறைவேற்றியிருந்தால் அப்பாவிகள் 300 பேர் கொல்லப்பட்டிருப்பார்கள். இந்தச் சதியில் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறிய முழு அளவிலான விசாரணை நடந்து வருகிறது.

இதற்கு காரணமானவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இந்தத் தாக்குதல் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் எமக்கு விடை கிடைக்கவில்லை.

ஆனால், அமெரிக்கா தன் பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொள்வது மட்டுமின்றி அதற்கு மேலும் நடவடிக்கை எடுக்கும் என்பதை, அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கத் திட்டமிடும் கூட்டத்திற்குப் புரிய வைக்கவேண்டும்.

அவர்கள் உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ஆஃப்கானிஸ்தானோ, பாகிஸ்தானோ, ஏமனோ, சோமாலியாவோ- எந்த இடத்தில் இருந்து அமெரிக்காவுக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டினாலும் அவர்களைத் தோற்கடித்து, ஒழித்துக்கட்ட வேண்டும்.

டெட்ராய்ட் சம்பவத்தைப் பொறுத்தவரை இரண்டு விதமான விசாரணைகளை மேற்கொள்ளச் சொல்லியிருக்கிறேன்.

ஒன்று, தெரிந்த மற்றும் சந்தேகத்துக்கு இடமான தீவிரவாதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களைப் பட்டியலிட்டு தொடர்ந்து கண்காணிப்பது.

இதன்மூலம் அவர்கள் நம் நாட்டுக்குள் நுழைவதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்திவிட இயலும். டெட்ராய்ட் விமானத்தில் கைது செய்யப்பட்டவன் நிச்சயம் இந்த பட்டியலில் இருந்திருக்க வேண்டும்.

அடுத்தது, விமான நிலையங்களில் சோதனை தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் நடைமுறை கொள்கைகளை மறு ஆய்வு செய்யவேண்டும்.

இவ்வளவு ஆபத்தான மருந்துகளை அவனால் எப்படி விமானத்தில் கொண்டுவர முடிந்தது? எதிர்காலத்தில் இதுபோன்ற தவறு நடக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என ஆராய உத்தரவிட்டுள்ளேன்".

இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

திபெத் சீனாவின் ஒரு பகுதி - ஒபாமா திடீர் அங்கீகாரம்


பெய்ஜிங்: திபெத் சீனா வின் ஒருங்கிணைந்த பகுதி என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா திடீரென அங்கீகாரம் அளித்துள்ளார்.

சீனாவில் விஜயம் செய்து வரும் ஒபாமா பெய்ஜிங்கில் சீன அதிபர் ஹூ ஜின்டாவோவை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி திபெத் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதேசமயம், சீனாவுக்கும், திபெத்த்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு விரைவில் பேச்சுவார்த்தைகள் தொடங்க வேண்டும் என்பதையும் அமெரிக்கா விரும்புகிறது.

இந்தத் தலைமுறையின் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்கா மீளுவதற்கு சீனாவின் ஒத்துழைப்பும் உதவியுள்ளது என்றார்.

பின்னர் ஹூ பேசுகையில், சீனாவின் இறையாண்மை குறித்த விவகாரங்களில் அமெரிக்கா சிறப்பான நிலையை வெளிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சி தருகிறது. இதற்காக அதிபர் ஒபாமாவை நாங்கள் பாராட்டுகிறோம்.

ஒரே சீனா என்ற தத்துவத்தை அமெரிக்க அதிபர் வலியுறுத்துவதையே திபெத் குறித்த அவரது கருத்து வெளிப்படுத்துகிறது என்றார்.

முன்னதாக சமீபத்தில் தலாய் லாமா வாஷிங்டன் வந்தபோது அவரை பார்க்க மறுத்து விட்டார் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திபெத்தை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஆப்கானுக்கு கூடுதல் துருப்புக்கள் : ஒபாமா ஆலோசனை

ஆப்கானில் உள்ள துருப்புக்களின் எண்ணிக்கை குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக தனது பாதுகாப்பு குழுவுடன் முக்கிய கூட்டம் ஒன்றை ஒபாமா நடத்திவருகிறார்.

இது தொடர்பாக நான்கு வழிகள் ஆராயப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை கூறுகிறது. இவையனைத்தும் கூடுதல் படையினரை அங்கு அனுப்புவதை மையமாகக் கொண்டவை என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஆப்கானுக்கு 30,000 முதல் 45,000 துருப்புக்களை அனுப்ப வேண்டும் என்ற யோசனைக்குத்தான் கூடுதலான ஆதரவு இருப்பதாக பிபிசி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் ஒபாமா தூர கிழக்கு நாடுகளுக்கான தனது பயணத்தை அடுத்த வாரம் முடித்துத் திரும்பும்வரை இது தொடர்பான முடிவு அறிவிக்கப்படாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அமெரிக்காவின் எப்.பி.ஐ. சேவைக்கு ஒபாமா பாராட்டு


தீவிரவாத ஒழிப்பிலும் அதுதொடர்பான நடவடிக்கைகளிலும் அமெரிக்க அரசின் நீதித்துறை, எப்.பி.ஐ. ஆகியவற்றின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை. இவர்களால்தான் தீவிரவாத அச்சுறுத்தலையும் தாண்டி அமெரிக்கா வெற்றி நடை போட முடிகிறது என்று பாராட்டியுள்ளார் அதிபர் பராக் ஒபாமா.

நியூயோர்க் நகருக்கு வந்த ஒபாமா, அங்குள்ள சிட்டி சென்டருக்கு விஜயம் செய்தார். அங்குள்ள ஊழியர்களிடையே அவர் பேசுகையில்,

"நீதித்துறை, எப்பிஐ அதிகாரிகள் அடங்கிய அதிரடிப் படையினரின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டுக்குரியவை.

இவர்களின் தியாகம் மற்றும் முயற்சிகளால்தான் இன்று தீவிரவாத அச்சுறுத்தலைத் தாண்டி அமெரிக்கா தொடர்ந்து வெற்றி நடை போட முடிகிறது. தீவிரவாதிகளின் கட்டமைப்புகளைத் தகர்க்க முடிகிறது.

குறிப்பாக நியூயோர்க் எப்பிஐ அலுவலகத்தின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டுக்குரியவை. அவர்களின் துரிதமான நடவடிக்கையால், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி அமெரிக்கர்களைக் கொல்ல நஜிபுல்லா ஜாஸி திட்டமிட்டிருந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது" என்றார்.

நியூயோர்க் நகரைத் தாக்க ஜாஸி தலைமையிலான குழுவினர் திட்டமிட்டிருந்ததாக எப்பிஐ கூறுகிறது. ஜாஸி தவிர மேலும் 3 பேரை அது தேடி வருகிறது. இந்த மூன்று பேரும் ரசாயானப் பொருட்களைக் கடத்தி வந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த மாதம் அகமது அப்சாலி என்ற இமாம் ஒருவரை எப்பிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

ஒபாமா நியூயோர்க் வரும்போது தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்றும் கூறப்படுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அதிபர் ஒபாமா நடனம்

அதிபர் ஒபாமா ஒபபாமாவை நடனம் ஆடவைத்த நங்கை
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates