அம்பாறை மாவட்டம் கல்முனை மருதமுனைப் பகுதியில் முதலை

அம்பாறை மாவட்டம் கல்முனை மருதமுனைப் பகுதியில் முதலை ஒன்றினை பிரதேச மக்கள் பிடித்துள்ளனர். குறித்த பகுதியிலுள்ள குளமொன்றிலிருந்து மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதிக்கு வந்தபோதே இன்று அதிகாலையில் குறித்த முதலையினைப் பிரதேச மக்கள் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முதலையானது பிரதேசத்திலுள்ள மக்களைத் தாக்க முற்பட்ட போதே மடக்கிப் பிடிக்கப்பட்டதோடு பின்னர் விலங்குகள் சரணாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
0 Response to "அம்பாறை மாவட்டம் கல்முனை மருதமுனைப் பகுதியில் முதலை"
แสดงความคิดเห็น