சென்னை வந்த கப்பலில் அணு ஆயுதங்களா?

சென்னை: மால்டாவில் பதிவு செய்யப்பட்ட சரக்குக் கப்பலில் அணு ஆயுதப் பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்து அந்தக் கப்பலை நடுக் கடலில் தடுத்து நிறுத்தி சென்னை க்கு வரவழைத்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கார்லான்ட் என்ற கப்பல் விசாகப்பட்டனத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், நேற்று மாலை சென்னை துறைமுகத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், பேசிய நபர், சம்பந்தப்பட்ட கப்பலில், அணு சக்திப் பொருட்கள் இருப்பதாக கூறினார்.
இதையடுத்து அந்தக் கப்பலைத் தொடர்பு கொண்ட அதிகாரிகள், உடனடியாக சென்னை துறைமுகத்திற்கு வருமாறு உத்தரவிட்டனர்.
மேலும் கடலோரக் காவல் படையினரும் கப்பலை நோக்கி விரைந்தனர். அந்தக் கப்பல் தற்போது சென்னை துறைமுக எல்லைக்குள் வந்துள்ளது.
இதையடுத்து கல்பாக்கம் அணு மின் நிலையத்திலிருந்து நிபுணர்கள் குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கப்பலில் முழுமையாக சோதனையிடவுள்ளனர்.
கதிரியக்கப் பொருட்கள் எதுவும் இல்லை என்று உறுதியானவுடன்தான் இந்தக் கப்பல் மீண்டும் கிளம்பிச் செல்ல அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Response to "சென்னை வந்த கப்பலில் அணு ஆயுதங்களா?"
แสดงความคิดเห็น