பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில தங்கம் கடத்த முயன்றவர் கைது

இலங்கை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 30 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் தப்பிச் செல்ல முயன்ற 45 வயதான இந்தியப் பிரஜை ஒருவரை சுங்கத் திணைக்கள விசாரணைப் பிரிவு அதிகாரிகள் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
சென்னையிலிருந்து இலங்கைக்கு வந்த விமானம் இன்று அதிகாலை 3.00 மணியளவில் தரையிறங்கியவுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் நடமாடியதைக் கண்ட அதிகாரிகள் அந்நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது அவரிடம் சுமார் 1 கிலோகிராம் நிறையுடைய தங்க ஆபரணங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணமாகவுள்ளதாக சந்தேக நபர் அதிகாரிகளிடம் கூறியுள்ளதுடன் தப்பிச்செல்லவும் முயன்றுள்ளார்.
இவர் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக சுங்கத் திணைக்கள அதிகாரி ஒருவர் எமது இணையத்தளத்திற்குவா தெரிவித்தார்.
0 Response to "பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில தங்கம் கடத்த முயன்றவர் கைது"
แสดงความคิดเห็น