இன்று சர்வதேச நீரிழிவு தினம் (சிறப்புக் கட்டுரை)

மாறிவரும் வரும் மிலேனிய யுகத்தில் நோய்களும் புதுப்புது வடிவத்தில் மக்களை வருத்திய வண்ணமாகவே உள்ளன. மனிதன் போராடி வெற்றி பெறுவதும் தோல்வியுறுவதுமான ஒரே தொழில் மருத்துவம் என்றால் கூட அது மிகையல்ல.
இன்று மருத்துவத்துறையில் தனக்கென தனியான ஓரிடத்தைப் பெற்றிருப்பது நீரிழிவு நோய். இதில் என்ன வேடிக்கை என்றால், எல்லாவற்றுக்கும் நாள் குறித்து திருநாளாக கொண்டாடி வரும் மனிதன் தன்னை அழிக்க வரும் நோய்களுக்கும் ஒரு தினத்தை அனுஷ்டித்து வருவதுதான்.
இது மனிதனின் பெருந்தன்மையா? மூடத்தனமா? அல்லது நாகரீகமா?
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 14ஆம் திகதி நினவுகூரப்படும் நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தும் இன்சுலின் மருந்தினை சார்ள் பெஸ்ட் என்பவருடன் இணைந்து 1921 இல் கண்டுபிடித்தவர் பிறட்ரிக் பான்ரிங் என்பவர். இவரது பிறந்த தின நினைவாகவே இன்றைய நாள் நினைவுகூரப்பட்டு வருகிறது.
சர்வதேச ரீதியில் ஏறத்தாழ 150 நாடுகளில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்நோய் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சர்வதேச நீரிழிவு நோய் சம்மேளனத்தினாலும் உலக சுகாதார நிறுவனத்தினாலும் 1991 முதல் முறையாக நீரிழிவு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர் ஐக்கிய நாடுகள் சபை 2006 ஆம் ஆண்டு மேற்கொண்ட தீர்மானம் ஒன்றுக்கமைய இத்தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.
உலக சுகாதார கணிப்பின்படி 426 கோடி மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 2025ஆம் ஆண்டளவில் இந்நோய் தாக்கத்திற்கு உட்படுபவர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
15வருடங்களுக்கு மேலாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 2 வீதமானோருக்குக் கண் பார்வை இழப்பும் 10 வீதமானோருக்குப் பாரதூரமான கண் பார்வை குறைவும் ஏற்படுகிறது. இதனால் மேற்படி நோய்க்கு ஆளானோர் வருடாந்தம் கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று வலியுறுத்தப்படுகின்றது.
0 Response to "இன்று சர்வதேச நீரிழிவு தினம் (சிறப்புக் கட்டுரை)"
แสดงความคิดเห็น