யாழ். வெள்ளை கடற்கரை பள்ளிவாசலுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் விஜயம்
.jpg)
யாழ். மாவட்டத்துக்கு நேற்றுமாலை விஜயம் செய்த மீள்குடியேற்ற,அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீன்,முஸ்லிம்கள் வாழ்ந்த வேலணை பிரதேசசபை பிரிவுக்குட்பட்ட வெள்ளை கடற்கரை பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்படும் ஜும்மா பள்ளிவாசலையும்,வெள்ளை மணல் கடற்கரையினையும் பார்வையிட்டார்.
யாழ். மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியமர ஆர்வத்துடன் இருக்கும் வேளையில், அவர்களது வரலாற்றுச் சிறப்புமிக்க இம்மத வழிபாட்டுத்தலத்தின் தற்போதைய நிலையினை பார்வையிடுமாறு யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று திடீர் விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
யாழ். குடாநாட்டுக்கு வரும் இஸ்லாமியர்கள் வெள்ளை கடற்கரைப்பகுதிக்கு வந்து இப்பள்ளிவாசலில் மத கடமைகளில ஈடுபட்டுவந்த காலம் மீண்டும் ஏற்பட வேண்டும் என அங்கு அமைச்சரை சந்தித்த தமிழ் பிரமுகர்கள் அமைச்சரிடம் சுட்டிக் காட்டினர்.
1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்பகுதியில் வசித்து வந்த முஸ்லிம் குடும்பங்களும் இங்கிருந்து இடம்பெயர்ந்ததாக தொழிலதிபர் எஸ்.நாதன்,அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் கூறினார்.
ஊர்காவற்துறை பண்ணைப்பாலம் புனரமைப்பு செய்யப்படுவதன் மூலம்,மக்களின் போக்குவரத்துக்கள் மிகவும் துரிதமாக இடம்பெறுவதற்கு இலகுவாக இருக்கும் எனத் தெரிவித்த பிரதிநிதிகளிடம்,இவ்விடயம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோடு பேசுவதாகவும் அமைச்சர் அங்கு கூறினார்.
0 Response to "யாழ். வெள்ளை கடற்கரை பள்ளிவாசலுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் விஜயம்"
แสดงความคิดเห็น