யாழ். வலயங்களுக்கான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களை வழங்கும் நிகழ்வு இளவாலை புனித ஹென்றி கல்லூரியில் நடைபெற்றது!

தென்மராட்சி, வடமராட்சி வலிகாமம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய வலயங்களுக்கான உபகரணங்களை அந்தந்த வலயப் பணிப்பாளர்களிடம் கையளித்தனர்.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் 2 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் வழங்கப்பட்ட இந்த உபகரணங்களில் உடற்பயிற்சி உபகரணங்கள் இளவாலை ஹென்றி கல்லூரிக்கும் மானிப்பாய் பெண்கள் கல்லூரிக்கும் வழங்கப்பட்டுள்ளன.
குடாநாட்டின் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்குக் காரணமாகவிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும், ஆளுநர் சந்திரசிறிக்கும் பாராட்டுத் தெரிவிப்பதாகத் தெரிவித்த அக்கல்லூரியைச் சேர்ந்த கே.ஏ.யேசுதாஸன் இந்நிகழ்விற்காக நேரத்தை ஒதுக்கி வருகை தந்தமைக்கு அமைச்சருக்கும் ஆளுநருக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்தார்.
வட மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.இளங்கோவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். அத்துடன் அமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டமையை நினைவுகூறும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.






0 Response to "யாழ். வலயங்களுக்கான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களை வழங்கும் நிகழ்வு இளவாலை புனித ஹென்றி கல்லூரியில் நடைபெற்றது!"
แสดงความคิดเห็น