ஓசியன் விக்கிங் கப்பலுக்கு மேலும் ஒருவார கால அவகாசம்

இலங்கை அகதிகள் 78 பேருடன் தமது கடற்பரப்பில் தரித்திருக்கும் ஓசியன் விக்கிங் கப்பலை மேலும் ஒரு வார காலத்திற்கு தரித்திருக்க இந்தோனேஷியா நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக நேற்று 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் இலங்கை அகதிகள் 78 பேருடன் தரித்திருக்கும் இந்த கப்பல் தமது கடற்பரப்பில் இருந்து வெளியேற வேண்டும் என இந்தோனேஷியா உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் முறுகலைத் தீர்க்க இந்தோனேஷியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.
இலங்கையிலிருந்து கடந்த மாத நடுப்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இந்தக் கப்பல் அனர்த்தத்திற்கு உள்ளாகவிருந்த வேளையில் இந்தோனேஷிய கடற்பரப்பில் வைத்து அவுஸ்திரேலிய கடற்படையினர் காப்பாற்றினர்.
இதனையடுத்து இந்தக் கப்பலில் உள்ளோரை ஆஸி. பொறுப்பேற்பதா? அல்லது இந்தோனேஷியா பொறுப்பேற்பதா?- என்ற முறுகல் தொடர்ந்து வருகிறது.
இது அவுஸ்திரேலிய கடற்படையினரே காப்பாற்றினர் என்பதால் அதனை அவுஸ்திரேலியாவே பொறுப்பேற்க வேண்டும் என இந்தோனேஷியா கூறி வருகிறது.
எனினும் இந்தோனேஷிய கடற்பரப்பில் வைத்துக் காப்பாற்றப்பட்டமையால், இந்தோனேஷியாவை நோக்கிச் செல்லுமாறு இந்த கப்பலுக்கு அவுஸ்திரேலியா அண்மையில் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையிலேயே இந்தக் கப்பல் தற்போது இந்தோனேஷியக் கடற்பரப்பில் தரித்து நிற்கிறது.
0 Response to "ஓசியன் விக்கிங் கப்பலுக்கு மேலும் ஒருவார கால அவகாசம்"
แสดงความคิดเห็น