கூட்டுப்படைகளின் பிரதானியாக ரொஷான் குணதிலக நியமனம்

விமானப்படை தளபதி ரொஷான் குணதிலகவை கூட்டுப்படைகளின் பிரதானியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
கூட்டுப்படைகளின் பிரதானியாக கடமையாற்றிய ஜெனரல் சரத் பொன்சேகா சற்று முன்னர் தனது பதவியை உத்தியோகபூர்வமாக ராஜினாமா செய்ததையடுத்து, ரொஷான் குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்டுப்படைகளின் பிரதானியாகக் கடமையாற்றும் அதேவேளை விமானப்படைத் தளபதியாகவும் ரொஷான் குணதிலக கடமையாற்றுவார் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 Response to "கூட்டுப்படைகளின் பிரதானியாக ரொஷான் குணதிலக நியமனம்"
แสดงความคิดเห็น