கார்த்திகை சோம வார
.jpg)
கார்த்திகை மாத சோம வார விரதம் மிகவும் சிறந்தது ஆகும். இந்நாளில் சிவ ஸ்தலங்களில் 1008 அல்லது 108 சங்காபிஷேங்கங்கள் நடைபெறும். திருகடவூர் எனும் சேஷத்திரத்தில் நடைபெறும், இச் சங்காபிஷேகம் மிகவும் விசேடமானதாகும். கார்த்திகை சோம விரதம் இருந்து சிவபெருமானை துதித்து சங்காபிஷேகம் கண்டு தரிசனம் செய்பவருக்கு மங்களம் யாவும் உண்டாகும்.
கதை: சோமன் என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும் “சந்திரன்” என்றும் பொருளாகும். சந்திரன் கார்த்திகை மாதம் சுக்கில பக்ஷ அஷ்டமியில் தோன்றினான். தன்னுடைய கொடிய நோய்கள் குணமாக சிவபெருமானை ஆராதித்து நவகிரகங்களில் ஒருவனான். அவன் பெயராலே சோம வாரம் தோன்றியது. (திங்கள் கிழமை). சோமனும் தனது பெயராலே தனது வாரத்தில் இந்த விரதம் புகழ் பெறவேண்டும் என சிவபெருமானை பிரார்த்தித்தான். அதனால் சோமவார விரதம் சிறப்புடைதாயிற்று.
தவிரவும் சந்திரன் தட்சனின் மருமகன் ஆவான். அவனுடைய அவனுடைய 21 பெண்களையும் மணந்து கொண்டான். ஆனால் ரோகிணிப் பெண்ணுடன் மட்டும் சுகமாய் இருந்தான். இதை கண்ட மற்ற இருபது பெண்களும் தந்தையிடம் முறையிட கோபம் கொண்ட தட்சன் “தேயக் கடவது” என சாபம் இட்டான். தேய்ந்து கொண்டே வந்த சந்திரன் கடைசியில் சிவபெருமானிடம் தஞ்சம் அடைந்தான். தஞ்சமடைந்தவனை தலையில் எடுத்து வைத்துக் கொண்டார் சிவபெருமான். அன்று முதல் வளர்ந்தான், ஆனாலும் அந்த சாபத்தால் தேய்ந்தான், இப்படியே தேய்வதும் வளர்வதுமாக இருந்தான், இதை தான் தேய்பிறை வளர்பிறை என்கிறோம்.
*** இந்த கதை முழுக்க வானவியல் சம்பந்த பட்டது. வான்காந்தம், ஜீவகாந்த இணைப்பு பற்றிய சூட்சம்.
இவ்வாறு சிவபெருமானின் திருமுடியில் அமர்ந்தது இந்த கார்த்திகை மாத சோம வாரத்தில் தான். கிருத யுகம் தோன்றியதும் சோம வாரத்தில்தான். சந்திரன் சிவபெருமானை மேலும் வேண்டிக் கொண்டான், பதினான்கு ஆண்டுகள் சோம வாரம் தோறும் பூசை செய்து இரவு கண்விழித்து சிவபுராணம் படித்து காலையில் ஹோமம் செய்து, கலச நீரால் அபிஷேகம் செய்து கணவனும் மனைவியுமாக பூசை செய்பவருக்கு நற்கதியை கொடுக்க வேண்டும். இவ்வாறு வேண்டிய சந்திரனின் அபிலாஷையை நிறைவு செய்தார் சிவபெருமான்.
கார்த்திகை மாத சோமவார விரதம் இருப்பவர்களின் பாபங்களை போக்கி, பகைவரின் பயத்தை அகற்றி, அவர்களை நற்கதிக்கு ஆளாக்குபவர் சிவபெருமான். சந்திரனை சிவபெருமான் ஆபரணமாக கொண்டதால் சந்திரசூடன், மௌலீஸ்வரன் என்ற திருநாமங்கள் ஏற்பட்டன.
அதனால் வரும் நவம்பர் 23, 30 டிசம்பர் 7, 14 ஆம் தேதிகளில் வரும் திங்கட் கிழமைகளில் விரதம் இருந்து பாபவிமோசனம் பெற வாழ்த்துகள்.
0 Response to "கார்த்திகை சோம வார"
แสดงความคิดเห็น