கருணாகுழுவினர் பொத்துவில்லில் கப்பம்கோரி வருகின்றனர் -சிங்கள ஊடகம் தெரிவிப்பு!

பொத்துவில் பகுதியில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவின் சகாக்களான இளம்பரிதி போன்றவர்கள் கப்பம் கோரி வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது மக்களிடம் கப்பம்கோரும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவி;க்கப்படுகிறது. தேர்தலின் போது வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து ஆராயும் நோக்கில் அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த விடயம் அம்பலமாகியுள்ளது ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகள் பூரணமாக இல்லாதொழிக்கப் படவில்லை எனவும் அந்த சிங்கள ஊடகம் மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.
0 Response to "கருணாகுழுவினர் பொத்துவில்லில் கப்பம்கோரி வருகின்றனர் -சிங்கள ஊடகம் தெரிவிப்பு!"
แสดงความคิดเห็น