மக்கள் தலைவர் தேவானந்தா அவர்களுக்கு வழிநெடுகிலும் வரவேற்பு. காங்கேசன்துறை வீதி ஸ்தம்பித்தது.
.jpg)
.jpg)
இன்று முற்பகல் கொக்குவில் குளப்பிட்டியை வந்தடைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேளதாள வரவேற்புடன் கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இடம்பெற்ற விசேட பூசையிலும் அவர் பங்குகொண்டார். அதனைத்தொடர்ந்து நல்லூர் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் மக்கள் கடையினை திறந்து வைக்கும் முகமாக காங்கேசன்துறை வீதிக்கு அவர் வந்துபோது அமைச்சர் தேவானந்தா அவர்களைப் பார்க்கவும் அளவளாவவும் கைலாகு கொடுக்கவும் என பெரும் மக்கள் கூட்டம் திரண்டதனால் வீதியில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. மக்கள் கடையினை திறந்து வைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதே காங்கேசன்துறை வீதியின் மறுபுறத்தில் நல்லூர் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சிறிய கூட்டுறவு நகரினை திறந்து வைப்பதற்காக வருகை தந்தபோது மீண்டும் பெரும் சன நெரிசல் ஏற்பட்டது. அமைச்சர் தேவானந்தா அவர்களைப் பார்க்கவும் அளவளாவவும் கைலாகு கொடுக்கவும் என்பதற்கு மேலாக தமது வியாபாரத் தலங்கள் முன்பாக பூரண கும்பம் வைத்து வரவேற்பளித்ததுடன் நூற்றுக்கணக்கானோர் மாலை மரியாதையும் செய்தனர். ஏறக்குறைய கோவில் திருவிழா ஒன்றில் சாமி ஊர்வலம் வந்துவிட்டதோ என எண்ணத்தோன்றும் அளவிற்கு நிலைமை காணப்பட்டது.
மக்களின் அன்பு வெள்ளத்தை சமாளித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நல்லூர் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்குபற்றும் முகமாக கோவில் வளாகத்தை வந்தடைந்தார். அங்கு நல்லூர் பிரதேச செயலாளர் செந்தில்நந்தனன் தலைமையில் ஆரம்பமான கூட்டத்தில் கோவில் குருக்கள் சிவதாச சர்மா ஆசியுரை வழங்கினார். இவ்வேளையில் அருகிலுள்ள பாடசாலைகளின் கல்வி நேரம் முடிவடைந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வருகை தந்துள்ளார் என்பதை அறிந்த மாணவ மாணவிகள் கூட்டம் நடைபெறுவதையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கில் அவரை நோக்கி திரளத்தொடங்கிகார்கள். உடனடியாக சொக்கலேட்டுக்களுக்கு ஏற்பாடு செய்து தருவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அவற்றை மாணவ மாணவிகளுக்கு தானே வழங்கத்தொடங்கினார். அமைச்சரின் அருகில் இருந்தவர்களும் அவருக்கு உதவியாக சொக்கலேட்டுகளை வழங்க முற்பட்டபோது அமைச்சர் அங்கிளிடம்தான் வாங்குவோம் என அடம்பிடித்து அவரின் கையாலேயே சொக்கலேட்டுக்களை வாங்கிச்சென்றதை பலரும் வியப்புடன் பார்த்தவண்ணமிருந்தனர்.
ஒருவாறு மாணவர்களை அன்புடன் வழியனுப்பி வைத்த அமைச்சர் தேவானந்தா அவர்கள் தனது விசேட உரையினை அங்கு நிகழ்த்தினார். மனிதனின் அடிப்படை உரிமைகளான நடமாடும் உரிமை பேச்சுரிமை தொழில் செய்யும் உரிமை என்பன தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். எந்தவகையிலும் அதனை தாரை வார்த்துவிடக்கூடாது. நாம் பட்ட கஷ்டங்கள் போதும். இனிமேல் இழப்புக்களுக்கு இடமளிக்கப் போவதில்லை என்பதுமட்டுமல்ல இழப்புக்கள் ஏற்படப்போவதுமில்லை. நான் உங்களை ரத்தம் சிந்த அழைக்கவில்லை. வியர்வை சிந்த அழைக்கின்றேன். நாம் ஒன்றுபட்டு உழைத்து எமது தாயகத்தை முன்னேற்றுவோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அறைகூவல் விடுத்தார்.
இந்நிகழ்வில் யாழ். கூட்டுறவு உதவி ஆணையாளர் பொ.சிவலிங்கம் நல்லூர் பிரதேச செயலாளர் செந்தில்நந்தனன் நல்லூர் பல நோக்கு கூட்டுறவுச் சங்க உதவிப் பொது முகாமையாளர் அம்பிகைபாகன் கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய கோவில் சிவதாச குருக்கள் கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் அகிலதாஸ் யாழ். பல்கலைக்கழக இலங்கை வங்கி முகாமையாளர் நாகேஸ்வரன் நல்லூர் பிரதேச ஈபிடிபி பொறுப்பாளர் ரவீந்திரதாசன் ஆகியோர் உட்பட பெருந்திரளான பொதுமக்களும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 Response to "மக்கள் தலைவர் தேவானந்தா அவர்களுக்கு வழிநெடுகிலும் வரவேற்பு. காங்கேசன்துறை வீதி ஸ்தம்பித்தது."
แสดงความคิดเห็น