அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆளுநர் சந்திரசிறி சாவகச்சேரி விஜயம். ஒளிபெற்று புத்தெழுச்சி பெறும் சாவகச்சேரி நகர்.

சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினதும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி அவர்களினதும் நிதியேற்பாட்டில் சாவகச்சேரி நகரத்திற்கான வீதி மின்விளக்கு பொருத்தும் வேலைத்திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் ஆளுநர் சந்திரசிறி அவர்களும் சாவகச்சேரி நகரத்திற்கு நேரடியாக விஜயம் செய்து நகரத்திற்கான வீதி மின்ஒளியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
சாவகச்சேரி நகரத்திற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களையும் ஆளுநர் சந்திரசிறி அவர்களையும் சாவகச்சேரி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் மாலை அணிவித்து மகிழ்ச்சியோடு வரவேற்றனர். மங்கள விளக்கேற்றலின் பின்னர் அதிதிகள் இருவரும் இணைந்து ஆழியை அழுத்தியதன் மூலம் நகரத்திற்கான மின்னொளியை ஆரம்பித்து வைத்தபோது அங்கு கூடியிருந்தோர் கரகோஷம் செய்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
மற்றொருபுறம் நகரத்திற்கான வீதி மின்விளக்கு திட்டத்தை ஆரம்பித்து வைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் ஆளுநர் சந்திரசிறி அவர்களும் தமது முயற்சியால் நிர்மாணிக்கப்பட்ட சாவகச்சேரி நகர மரக்கறி சந்தை பகுதியை விஜயம் செய்து பார்வையிட்டனர். அங்கு திரண்டிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுடன் இருவரும் அளவளாவியபோது அனைவரும் மகிழ்ச்சியுடன் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது







0 Response to "அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆளுநர் சந்திரசிறி சாவகச்சேரி விஜயம். ஒளிபெற்று புத்தெழுச்சி பெறும் சாவகச்சேரி நகர்."
แสดงความคิดเห็น