கொள்வனவில் பிரபாகரன் உயிர்வாழ்கிறார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாரன், புலிகளின் நிதி மூலங்கள், ஆயுத கொள்வனவு வழிகள், வங்கிக்கணக்குகள் என்பவற்றின் ஊடாக தொடர்ந்தும் உயிர் வாழ்கிறார் என த டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையில் புதிய தீர்வுத்திட்டத்தை விட, புதிய தமிழ் ஆயுதக்குழு ஒன்று வெளிப்படுவது வரவேற்கத்தக்க விடயம் என த டைம்ஸ் சஞ்சிகை செய்தி தெரிவித்துள்ளது.கடல் மற்றும் தரை மார்க்கமாக விடுதலைப் புலிகள் இராணுவத்தினால் அழிக்கப்பட்டதன் பின்னர், தற்போது ஒரு அதிசயமான மற்றும் விரைவான மீள் பிறப்பை அவர்களின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் இரண்டு பிரதான முக்கிய தலைவர்கள் உயிருடன் இருக்கின்றமை தொடர்பிலான தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டு அம்மான் குறித்த தகவல்கள் இதுவரையில் வெளிப்படாத நிலையில், அவர் உயிருடன் இருக்கலாம் என டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் வெளியுறவுப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன், சுதந்ரமாக நடமாடி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான 14 கப்பல்கள் குறித்தும், 600 வங்கி கணக்குகள் குறித்தும் தகவல்களை அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் பொட்டு அம்மான் உயிரிழந்து விட்டதாக இலங்கையின் நீதி அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இது விடுதலைப் புலிகளின் இடைவெளியை நிரப்ப முயலும் மற்றுமொரு ஆயுதக்குழுவுக்கு வரவேற்கத்தக்க விடயமாக அமைந்திருக்கும் என அது தெரிவித்துள்ளது.
எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் மீது தீவிர பற்றுக் கொண்டுள்ள தமிழ் மக்கள், அவர்கள் தமிழர்களின் உரிமைகளுக்காக போராடியவர்கள் என தொடர்ந்தும் நம்புகின்றனர்.
இந்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் ஜனாதிபதி, சிறுபான்மை தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
அத்துடன் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் குறிப்பாக, தற்போதும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 ஆயிரம் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கபட்டு வருபவர்கள் குறித்து தீர்க்கரீதியாக செயல்பட வேண்டிய நிலை இருப்பதாக டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், அரசியல் வெற்றிப்படுத்தல்களும், சந்தேகங்களுமே அரசியல் ஞானத்துக்கான முடிவாக அமையும்.
அத்துடன் பி எல் ஏ போன்ற குழுக்கள் விடுதலைப் புலிகளின் பிரதியீடுகளாக அமையலாம் எனவும் த டைம்ஸ் தெரிவித்துள்ளது.
0 Response to "கொள்வனவில் பிரபாகரன் உயிர்வாழ்கிறார்"
แสดงความคิดเห็น