ஞானபண்டித வித்தியாசாலை அபிவிருத்தி குறித்து கவனமெடுப்பேன். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி

கொக்குவில் ஞானபண்டித வித்தியாலையின் பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் அழைப்பினை ஏற்று இன்றையதினம் அங்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை மாணவ மாணவிகள் பலத்த கரகோசம் செய்து வரவேற்றனர். அங்கு சமூகமளித்திருந்த பாடசாலை சமூகத்தினர் மத்தியில் உரை நிகழ்த்திய அமைச்சர் தேவானந்தா அவர்கள் உங்கள் பாடசாலையின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து நலன்விரும்பிகள் என்னிடம் தெரியப்படுத்தியுள்ளனர். விரைவில் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுடன் உங்களை சந்தித்து உங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வினைக் காணுவேன் எனத்தெரிவித்தார். யாழ். நகரை அண்டிய நிலையில் காணப்பட்ட போதும் மேற்படி பாடசாலையானது பெரும் வளப்பற்றாக்குறையுடன் காணப்படுவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் கொக்குவில் இந்து முன்பள்ளிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் விஜயம் செய்தார். அங்கு முன்பள்ளி நிர்வாகத்தினருடன் கலந்துரையாடிய அவர் குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளை வழங்கி அவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது




0 Response to "ஞானபண்டித வித்தியாசாலை அபிவிருத்தி குறித்து கவனமெடுப்பேன். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி"
แสดงความคิดเห็น