jkr

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் முடமாவடியில் புதிதாக கூட்டுறவு நகர் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

நல்லூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் முடமாவடிப் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கூட்டுறவு நகர் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் வர்த்தக வியாபார நிலையங்கள் பெரிதாக காணப்படாத தமது முடமாவடிப் பிரதேசத்தில் கூட்டுறவு நகர் ஒன்று அமைக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் இன்று பகல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை மகிழ்;ச்சி ஆரவாரத்துடன் வரவேற்றனர். கூட்டுறவு நகருக்கு வருகை தந்த அமைச்சர் தேவானந்தா அவர்களை முடமாவடி ஞானக்குழந்தை பாலர் பாடசாலை முன்பள்ளிக்குழந்தைகள் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து முடமாவடி ஞானவைரவர் கோவிலில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளிலும் கலந்துகொண்ட அமைச்சர் தேவானந்தா கூட்டுறவு நகருக்கு அழைத்து வரப்பட்டதுடன் அங்கு அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவம் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மங்கல விளக்கேற்றிய அமைச்சர் தேவானந்தா நாடாவெட்டி மக்களின் கரகோசத்திற்கு மத்தியில் கூட்டுறவு நகரை திறந்து வைத்தார். அதே கூட்டுறவு நகரில் முதலாவது கொள்வனவாக இனிப்பு பண்டங்களை வாங்கிய அமைச்சரவர்கள் அதனை ஞானக்குழந்தை பாலர் பாடசாலை குழந்தைகளுக்கு அன்புடன் வழங்கினார்.

தொடர்ந்து நல்லூர் பிரதேச செயலாளர் செந்தில்நந்தனன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரைநிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்தப்பகுதி தனக்கு புதிதானதொன்றல்ல எனத்தெரிவித்தார். மறைந்த தினமுரசு ஸ்தாபக ஆசிரியரும் ஈபிடிபியின் அரசியல் செயலாளருமான எனது அன்புக்குரிய றமேஸ் தோழரின் வீடு இங்கேயே அமைந்துள்ளது. முன்னர் பல தடவைகள் நான் வந்து சென்றுள்ளேன் இவ்வாறு அவர் தெரிவித்தபோது அங்கிருந்த பலர் பழைய சம்பவங்ளை ஞாபகத்துடன் நினைவுகூர்ந்தார்கள்.

முடமாவடி கூட்டுறவுநகர் திறப்பு நிழ்வில் யாழ். கூட்டுறவு உதவி ஆணையாளர் பொ.சிவலிங்கம் நல்லூர் பிரதேச செயலாளர் செந்தில்நந்தனன் நல்லூர் பல நோக்கு கூட்டுறவுச் சங்க உதவிப் பொது முகாமையாளர் அம்பிகைபாகன் ஸ்ரான்லி வீதி மக்கள் வங்கி முகாமையாளர் சுப்பிரமணிஐயா நல்லூர் பிரதேச ஈபிடிபி பொறுப்பாளர் ரவீந்திரதாசன் ஆகியோர் உட்பட அப்பகுதி பொதுமக்களும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.







  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் முடமாவடியில் புதிதாக கூட்டுறவு நகர் திறந்துவைக்கப்பட்டுள்ளது."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates