jkr

வட்டுக்கோட்டை தீர்மான தலைவர்களை சுட்டுப்போட்டவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் அத்தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு!


புலம்பெயர் நாடுகளில் அஜ், உய்…. பொய் என்று தமிழ் மக்களிடம் பித்தலாட்டம்

தமிழர்களுக்கு தனித் தமிழ்ஈழம் வேண்டும் என்று வட்டுக்கோட்டையில் அன்று எட்டிய தீர்மானம் அனைத்து தமிழ்மக்களையும் ஒற்றுமையாக ஒரணியில் சேர்த்தது. தனித் தமிழ்ஈழமே இறுதி முடிவென்ற கோஷத்தை தீர்மானித்த பிரபல்யமான வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழினத்தின் தலைவர்களான அமிர்தலிங்கம்,யோகேஸ்வரன் மற்றும் நீலன் திருச்செல்வம் போன்ற அரசியல் தலைவர்களின் வழிநடத்தலிலும் மற்றும் இளைஞர் போராளி தலைவர்களான ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா, ரெலோ ஸ்ரீசபாரத்தினம், புளொட் சுந்தரம், எல்.ரி.ரி. பிரபாகரன் போன்ற பல்வேறு இளைஞர்களின் பங்களிப்பிலும் அன்று ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவோடும் எடுக்கப்பட்ட தீர்மானம்.

இத்தீர்மானத்தின் காரணகர்த்தாக்களேயே கொலை செய்து தமிழினத்திற்கு அரசியல் தலைமையே இல்லாது ஒழித்துக்கட்டிய பிரபாகரனும் அவரது இயக்கமும் இன்று முற்றாக அழிக்கப்பட்டுவிட்ட நிலையில் புலம்பெயர் நாடுகளில் வருவாயை நோக்காக கொண்ட சுயநல வியாபாரிகள் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற பணசந்தையை கூட்டியுள்ளனர். வுட்டுக்கோட்டை தீர்மானத்தின் தலைவர்களையே சுட்டுப்போட்டவை - இலங்கை அரச படைகளிடம் உயிருக்கு சரணடைந்து அபலமாக கொல்லப்பட்ட புலிகள் இயக்கத்தினரின் புலம்பெயர் வியாபாரிகள் சிலர் வெறும் வருமானத்திற்காக விரிக்கின்ற வலைதான் இது என்று பெரும்பான்மையான தமிழ்மக்கள் விலகி செல்கின்றனர். ஏற்கனவே தமிழ் தேசியம் பேசி, பிரபாகரனின் புகழ்பாடி பின்னர் பிரபாகரனின் உடலைக்கூட தருமாறு கேட்க்கமறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மஹிந்தவிற்கு மாலையிட்டும் மற்றும் அரச தரப்பினரை பின்கதவால் சந்தித்து வசதிகளை தேடிகொண்டதையும் மிக அண்மையில் கண்டுகொண்ட புலம்பெயர் தமிழர்கள்- இந்த வட்டுக்கோட்டை தீர்மான வாக்கெடுப்பென்பது வெறும் கண்துடைப்பு என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் பணம் கறக்கும் முயற்சியுடையவர்களுடன் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அதேவேளை புலிகளின் முகவர்கள் வெளிநாட்டில் பிரபாகரன் காலத்தில் வசூலித்த பணத்தை இன்று அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கு செலவிடும்படி புலி முகவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியதே அவர்கள் கொல்லப்பட்ட பிரபாகரனுக்கு செய்யக்கூடிய மரியாதையும் ஆகும். இதைவிடுத்து வட்டுக்கோட்டை தீர்மானமே எப்படி யாரால் எடுக்கப்பட்டது என்பதை மறைத்து புலம்பெயர் நாடுகளில் இளம் தலைமுறைகளிடம் வியாபாரத்தை முன்னெடுக்கும் புலிகளின் காசு கறப்பு முகவர்கள் பல்வேறு பாசைகளில் உஜ், அஜ்… என்று பச்சை பொய் கூறிவருகின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "வட்டுக்கோட்டை தீர்மான தலைவர்களை சுட்டுப்போட்டவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் அத்தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates