jkr

புலிகளின் இணையதள நிர்வாகி அடித்தார் சேது அந்தர் பல்டி. மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவிக்க கொழும்பு விரைகின்றாராம்.


புலிகள் சார்பான இணையத்தளங்களில் நிதர்சனம்.கொம் எனும் இணையத் தளத்தினை நிர்வகித்து வந்தவரென கடந்தகாலங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த சேது என அழைக்கப்படும் நடராஜா சேதுரூபன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரான மஹிந்தவிற்கு ஆதரவு வழங்கவிரும்புவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களில் ஒருவரான டாக்டர் லெவின் ரிசி ராஜசிங்கம் ஊடாக தெரியப்படுத்தியுள்ளாதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மஹிந்தவிற்கு தனது ஆதரவினை தெரிவிக்க கொழும்பு விரையவுள்ள சேது என அழைக்கப்படும் நடராஜா சேதுரூபன், தமிழ் மக்களுக்கு இம்மாற்றம் தொடர்பாக விளக்கமளிக்கும் பொருட்டு ஊடகங்களில் தோன்றி சில நேர்காணல்களை வழங்கவுள்ளதாகவும் லங்காவெப் எனும் இணையத்தளம் தெரிவிக்கின்றது.

நிதர்சனம்.கொம் எனும் இணையத்தளத்தினை சேதுவே இயக்குவதாக வெளியாகியிருந்த விமர்சனங்களில் உண்மையிருந்தால், அவ் இணையம் தமிழ் மக்களுக்கு எவ்வாறான துரோகங்களை இழைத்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளமுடிந்துள்ளது. அதே நேரம் சில ஆங்கில இணையங்களில் சேது புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுவின் வழிநடத்தலில் இயங்கும் நபர் என செய்திகள் வெளியாகிருந்ததும், அச்செய்திகளுக்கு எதிராக அவர் வழங்குகளை பதிவு செய்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

புலிகளும் அவ்வியக்கத்தின் ஆதரவாளர்களும் காலத்திற்கு காலம் மாறி மாறிவரும் அரசுகளுடன் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளனர் என்பதற்கு இவ்வாறான விடயங்கள் சான்றுபகிர்கின்றன
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "புலிகளின் இணையதள நிர்வாகி அடித்தார் சேது அந்தர் பல்டி. மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவிக்க கொழும்பு விரைகின்றாராம்."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates