பொன்சேகாவை சந்திக்க ஏற்பாடு - இரா சம்பந்தர்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் ஜனவரி 26 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் கடந்த புதன் கிழமையன்று இலங்கை ஜனாதிபதியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தர் புதன்கிழமை காலை சந்தித்துப் பேசியுள்ளார். ரணில் விக்ரமசிங்க அவர்களையும் தான் சந்தித்துள்ளதாக கூறிய இரா சம்பந்தர் தேவைப்பாட்டால் பொது வேட்பாளராக முன்நிறுத்தப்படும் ஜெனரல் பொன்சேகா அவர்களையும் தேவைப்பட்டால் சந்திக்கப்போவதாக கூறினார்.
ஐனாதிபதி தேர்தல் தொடர்பாக பல கட்சிகள் தமது முடிவை அறிவித்துவிட்டாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு இது பற்றிய ஒரு நிலைப்பாட்டை இது வரை அறிவிக்கவில்லை.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நடந்த சந்திப்பின் போது தாம் தற்போதைய அரசியல் சூழல் பற்றி பேசவில்லை என்றும் தமிழர்களின் பல்வேறு பிரச்சனைகளை அவரிடம் பேசியதாகவும் சம்பந்தர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
0 Response to "பொன்சேகாவை சந்திக்க ஏற்பாடு - இரா சம்பந்தர்"
แสดงความคิดเห็น