jkr
แสดงบทความที่มีป้ายกำกับ கட்டுரை แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ கட்டுரை แสดงบทความทั้งหมด

ஈழத் தமிழ் பெண்மையை இழிவு படுத்தும் தமிழ் வாணிக்கு மனநலம் பாதிப்பு


ஈழத் தமிழ் பெண்மையை இழிவு படுத்தும் தமிழ் வாணிக்கு மனநலம் பாதிப்பு
பிரித்தானியாவில் தனது சகோதருடன் வாழ்த்து வந்த தமிழ் வாணி
பிரித்தானியாவில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் மனநலம் பேணுவதற்காக
சிறிலங்காவின் வன்னிக்கு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு
சென்றதாகவும் பிரித்தானிய குடியுரிமைகொண்ட, தமிழ்வாணி ஞானகுமார் பி.பி.
சி. தமிழோசைக்கு தெரிவித்து இறுத்தார் [பிரித்தானியாவில் மனம் சரி
இல்லை என்பதற்காக வன்னி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு
சென்ற முதல் பெண் இவர்தான்]
சிறிலங்கா அரசு மேற்கொண்ட பாரிய இறுதியுத்தத்தில் சிக்கி, வன்னி
மக்களுடன் இடம்பெயர்ந்த வேளை, இடைத்தங்கல்முகாம்களில் தடுத்து
வைக்கப்ப்பட்டிருந்தார். பிரித்தானிய அரசின் கடும்அழுத்தத்திற்கு
மத்தியில் கடந்த செப். மாதம் 8 ஆம் திகதி, அங்கிருந்து
விடுவிக்கப்பட்டு,பிரித்தானியா செல்ல அனுமதிக்கட்டார்.சிறிலங்காவின்
இறுதி யுத்த நடவடிக்கைகளின் போது மக்களோடு மக்களாக இருந்தஅவரின்
அனுபவங்களை கண்டிறியவும், இடைத்தங்கல் முகாம்களின் உண்மையானநிலைமை பற்றி
தெளிவுறவும் தமிழ் மக்கள் சார்பில் தற்போதுள்ள ஒரே ஒருஆதாரபூர்வமான
நபரகாக இவர் இருப்பதால் அவரை பல இணைய தளங்கள் முண்டியடித்து அவரது
செவ்வியை வெளியிட்டன இவரது செவ்வி ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாகவே
இருந்தது புலிகளின் கட்டுப் பாட்டு பகுதியில் தான் இருத்த வேலை இவர்
புலிகளை அங்கு காணவில்லை என்றும் புலிகள் தன்னை வந்து சந்திக்க வில்லை
என்றும் புலிகள் மக்களை மனித கேடயமாக பயன்படுததவில்லை என்றும்
பிரித்தானியா காடியன் ஆங்கிலப் பத்திரிகைக்கும் பி பி சி தமிழோசைக்கும்
முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்ட தமிழ்வாணி நேர்காணல் ஒன்றை வழங்கி
இருந்தார் உலகமே அறிந்த உண்மையை உலகுக்கு மறைத்த[ இப்படி முழு
பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறாயே இது நியாயமா? ...] இவர் அன்று
வெளியிடாத ஒரு அப்பட்டமான பொய்யை இன்று [ தடுப்புமுகாமில் பெண்கள்
பணத்துக்காகவும் உணவுக்காகவும் படையினரால்
உடலுறவுக்குள்ளாக்கப்படுகிறார்கள்: தமிழ்வாணி }வேடிக்கையான ஒரு விஷயம்
இன்று கவனத்துக்கு வருகிறது. தமிழ் பெண்மையை இழிவு படுத்த
முனைந்திருப்பது எதனால்? இன்று தமிழ் மக்கள் முகாங்களை
விட்டு வெளியில் வந்து நடமாடுவதை சகிக்க முடியாமல் விடுதலைப்புலிகளின்
ஆதரவு இணைய தளங்களில் தமிழ் பெண்களை இழிவு படுத்துவதன் நோக்கம் என்ன ?
இவரின் இந்த செயல் ஒட்டு மொத்த போராட்டத்தையும் இழிவு படுத்து செயல்
என்பதை ஏன் புலிகளின் இனைய தளங்களாக இருந்தாலும் சரிv புலிகளை
எதிர்க்கும் அமைப்புக்களாக இருந்தாலும் இதைக் கண்டிக்க வில்லை தமிழீழ
விடுதலைக்கான போராட்டம், மண் விடுதலைக்கானe போராட்டம் மட்டும்தான்! என்று
எம்மில் பலர் இன்னமும் எண்ணியும் எழுதியும் வருகின்றார்கள். தமிழீழ
விடுதலைப் போராட்டம் என்பது, தமிழ் மண்ணை மட்டும் மீட்பதற்கான போராட்டம்
அன்று! பெண்ணிய அடிமைத்தனம், சாதி ஒடுக்குமுறை, வர்க்க பேதம் போன்ற பல
சமூகக் குறைபாடுகளைக் களைவதற்கான போராட்டங்களையும், தமிழ் மொழி மீட்பு,
மண்மீட்பு, நெறி மீட்பு, போன்றவற்றிற்கான போராட்டங்களையும், ஒருங்கு
சேர,அமைந்த போரரட்டத்தை போராட்டத்தின் வயது எல்லைக்குள் [௨௫] பிறந்த ஒரு
பிரித்தானிய குடியுரிமை பெற்று வாழும் இவர் எப்படி எங்கள் ஈழத்து
பெண்மையை இழிவு படுத்த முடியும் இவர் இவரின் விடுதலைக்காக அன்று இவரின்
பெண்மையை அடவு வைத்து விடுதலை அடத்தாரா ? அல்லது எமது மக்கள் நிம்மதியாக
வாழ்ந்தால் புலிகளின் போராட்டம் மழுங்கடிக்கப்படும் என்ற புலிகளின்m கபட
நாடகமா ?ஒரு நாட்டு மண்ணின் விடுதலைக்காக- மொழியின் விடுதலைக்காக -
இனத்தின் விடுதலைக்காக - பிற வெளிச் சக்திகளால் மழுங்கடிக்கப்பட்டுள்ள
தமிழ்ப்பண்பாட்டின் விடுதலைக்காக - வெளிச் சக்திகளுடன் போராடி வருகின்ற
அதே வேளையில், தனது சொந்த இனத்திலேயே புரையோடிப் போயிருக்கும். சமுதாயக்
கொடுமைகளையும் களைந்து எறிய புறப்பட்ட எங்கள் ஈழத்தின் கண்மணிகளை இழிவு
படுத்த நினைத்த ஈனப் பிறவியே நீயும் ஒரு பெண்தானே ?தெரிந்தோ, தெரியாமலோ,
பெண்ணினமும் துணை போயிருக்கின்றது என்பதுதான் வேதனையான உண்மை! ஒரு சில
விசமிகள் தாங்கள் பிரபல்யம் ஆக வேண்டும் தமது இணைய தளங்கள் பிரபல்யம் ஆக
வேண்டும் என்ற நோக்கத்துக்காக மட்டுமே செயல்படுகின்றன இது கண்டிக்கப்பட
வேண்டும் பெண்களின் உரிமை பேசும் அமைப்புக்களின் மவுனம் தமிழ்வாணி
ஞானகுமாரின் கருத்துக்கு உடன்பாடா ?தயவு செய்து எமது பெண்களை இழிவு
படுத்தாமல் எமது மக்களுக்கு இனி வரும் காலங்களில்
என்ன நன்மை செய்யாலாம் என்பதை கருத்தில் எடுக்குமாறு சிரம் தாழ்த்தி
கேட்ட்கிறேன் இனி வரும் காலங்களில் காணப்பட வேண்டிய மாற்றங்களையும்
எமது மக்களின் துயர் துடைக்க உதவிக்கரம் நீட்டுங்கள் பின் குறிப்பு
;தமிழ் வாணிக்கு ஒரு சகோதரர் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றது தயவு
செய்து அவருக்கு பணிவுடன் ஒரு அன்பான வேண்டுகோள் உங்கள் தங்கையை ஒரு நல்ல
மனநல மருத்துவரிடம் காண்பிக்கவும் இவர் போன்ற சிறு பில்லைத்தனமான
செயல்தான் இன்றைய தமிழ் மக்களின் அவலம் என்பதையும் தமிழ் மக்களின் ஒட்டு
மொத்த போராட்டத்தையும் கொச்சைப்படுத்த இடம் கொடுக்காமல் நல்ல
மருத்துவரிடம் காண்பிக்கவும் வயிற்றுப்பிழைப்புக்காக ஊடகம் நடத்தலாம்,
தியாகங்களைக் கொச்சைப்படுத்த முயல்வது துரோகமாகும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இளைய தளபதி விஜயின் வேட்டைக்காரன் .படத்துக்கு விளம்பரம் தந்த புலம் பெயர்த்த வெட்டிப்பயல் வேங்கைகளின் மைந்தர்கள் விரைவில் கட்டுரை ??

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கோட்டையிலும், பலாலியிலும், ஆனையிறவிலும் நின்ற ராணுவத்தை இப்பொழுது எங்கள் வீட்டு முற்றத்திலும் கோடியிலும் கொண்டு வந்து நிறுத்திவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்”


புத்திமான் பலவான் : நிலாந்தன்


ஈழத்தமிழர்கள் இப்பொழுதும் ஒரு தெளிவற்ற காலசந்தியில் தான் நிற்கிறார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் வீழ்ச்சி அடைந்து ஏறக்குறைய ஏழு மாதங்கள் ஆன பின்பும் ஈழத்தமிழர்கள் இப்பொழுதும் எதிர்காலத்தைக் குறித்த தெளிவற்ற சித்திரங்களுடன் தடுமாறும் ஒரு ஜனக்கூட்டமாகவே காணப்படுகிறார்கள்.

முப்பத்து எட்டு ஆண்டுகால ஆயுதப்போராட்டம் தமிழர்களை அவர்களுடைய “எதிரிகளிடம்” கையளிப்பதில்தான் முடிந்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு ஊடக நண்பர் சொன்னார் “போராட்டம் தொடங்கியபோது கோட்டையிலும், பலாலியிலும், ஆனையிறவிலும் நின்ற ராணுவத்தை இப்பொழுது எங்கள் வீட்டு முற்றத்திலும் கோடியிலும் கொண்டு வந்து நிறுத்திவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்” என்று. இனி ஒரு ஆயுதப் போராட்டத்தைப் பற்றி கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு நொந்து நூலாகிப் போய் விட்டார்கள் வன்னி மக்கள்.
ஒரு புறம் களத்தில் அதாவது வடக்கு கிழக்கில் தமது அரசியல் எதிர்காலம் எது என்பதைப் பற்றி சிந்திக்கும் சக்தியற்று காணப்படும் ஜனங்கள். இன்னொரு புறம் புலம் பெயர்ந்த நாடுகளில் நாடுகடந்த அரசைக் குறித்த வாதப்பிரதிவாதங்களும் வாக்கெடுப்புகளும் தீவிரமாக இடம் பெற்று வருகின்றன. தமது அரசியல் எதிர்காலம் எது என்பதைத் தீர்மானிப்பதில் களத்திற்கும் புலத்திற்கும் இடையில் பொதுவான நிகழ்ச்சி நிரல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. விடுதலைப்புலிகளின் தலைவர் திரு. பிரபாகரன் இருந்தவரைக்கும் சரிக்கும் பிழைக்கும் அப்பால் அவர் ஓரளவுக்காயினும் களத்துக்கும் புலத்துக்குமான ஜனவசியம் மிக்க ஒரு மையமாகத் திகழ்ந்தார். இப்பொழுது அவர் இல்லாத வெற்றிடத்தில் அவருக்குப் பின்னரான அடுத்த கட்ட அரசியலை முன்னெடுத்துச் செல்ல வல்ல ஜனவசியம் மிக்க, தீர்க்கதரிசனமுள்ள, ரத்தக்கறைபடாத, தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்ற ஒரு பேராளுமை இனிமேல்தான் எழுச்சிபெற வேண்டியிருக்கிறது.

வரப்போவது யாராயிருப்பினும் அவர் திரு.பிரபாகரன் ஏற்படுத்திய விளைவுகளைக் கடந்தே போக வேண்டியிருக்கும். அதாவது பிரபாகரனின் உடலைக் காவிக்கொண்டு வரவும் முடியாது. அதே சமயம் பிரபாகரனை அவரது தோல்விகளோடு சேர்த்து ஒரேயடியாக வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசி எறிந்துவிடவும் முடியாது. தற்பொழுது விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான தமிழ் அரசியல் வெளியில் மூன்று பிரதானமான போக்குகள் காணப்படுகின்றன. முதலாவது திரு.பிரபாகரனை கடவுளாக்கி வழிபடும் ஒரு போக்கு. ஏற்கனவே இருந்து வந்த இந்தப் போக்கு மே 17- ற்குப் பின் உண்டாகிய கழிவிரக்கம் காரணமாக இன்னும் பலமடைந்து வருகிறது. இரண்டாவது திரு.பிரபாகரனைப் பிசாசு என்று தூற்றும் ஒரு போக்கு. இதுவும் ஏற்கனவே இருந்து வந்த ஒரு போக்கு. இது மே 17-ற்குப் பின்பு எல்லாத் தீமைகளிற்கும், எல்லா தோல்விகளிற்கும் பிரபாகரனின் மீது பழியைப் போடும் ஒன்றாக வளர்ச்சி பெற்று வருகிறது. மூன்றாவது இந்த இரண்டு துருவ நிலைகளுக்கு நடுவே வரும் ஒரு மிதப்போக்கு. பிரபாகரனுக்கு முன்பு இது சிறு போக்குத்தான்… பிரபாகரனுக்குப் பின்பும் இன்று வரையிலும் இது சிறு போக்குதான். இந்த மூன்று போக்குகளையும் விரிவாகப் பார்ப்பதன் மூலம் தான் ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்கான அடிப்படைகளை கண்டு பிடிக்கலாம். எனவே இம் மூன்று போக்குகளையும் ஆழமாகப் பார்ப்போம்.

முதலாவது பிரபாகர வழிபாடு. இது அவரை ஒரு அவதாரப் புருசராகவோ அல்லது அமானுஸ்ய சக்திகள் மிக்க ஒரு யுகபுருசனாகவோ பார்க்கிறது. அவரைக் கேள்விக்கிடமற்ற விமர்சனங்களிற்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக நிலைக்கு உயர்த்தி வைத்திருக்கும் இப்போக்குக்குரியவர்களில் ஒரு பிரிவினர், அவர் இன்னமும் உயிருடன் இருப்பதாக நம்புகிறார்கள். மற்றொரு பிரிவினர் அவர் இல்லாவிட்டாலும் அவருடைய பாணியிலான ஒரு அரசியலைத் தொடர யாராவது ஒரு தப்பிப் பிழைத்த விசுவாசி எங்காவது ஒரு மறைவிடத்திலிருந்து என்றாவது ஒரு நாள் வருவார் என்று காத்திருக்கிறார்கள்.
முதலில் திரு. பிரபாகரன் இறக்கவில்லை என்று நம்புவோர்க்கான பதிலை பார்க்கலாம்.

அவர் இறக்கவில்லை அல்லது அவரைக் கொல்ல இந்த பூமியிலே எந்த மானுடனாலும் முடியாது என்று நம்பும் எவரும் பிரபாகரனை அவமதிக்கிறார்கள் என்றே பொருள் படும். ஏனெனில் பிரபாகரன் ஒரு செயல் வீரன். எதையாவது செய்யாது விட்டால் நாடு தன்னை மறந்துவிடும் என்று நம்பிய நெப்போலியனைப் போன்ற இயல்புடைய ஒருவர். அவருடைய எழுச்சியின் தொடக்கத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் வீழ்ச்சி வரைக்கும் அவர் அப்படித்தான் வாழ்ந்தார். அவருக்கு உறங்குகாலம் என்பதெல்லாம் கிடையாது. தலை மறைவாக இருந்தாலும் அவர் சும்மாயிருக்க மாட்டார். அவருடைய இந்த சதா செயற்படும் பண்புதான் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏனைய விடுதலை இயக்கங்களை விடவும் இராணுவ ரீதியாக பலமுடையதாக மாற்றியது. எனவே பிரபாகரன் இயல்பில் ஒரு செயல் வீரன். உறங்கு நிலையற்ற ஒரு செயல் வீரன். அப்படிப்பட்ட ஒருவர் மே 17-ற்குப் பின்னர் இத்தனை மாதங்களாக செயற்படாமல் இருக்கிறார் என்றால் அது அவருடைய இயல்பிற்கு மாறானது.

தவிர பிரபாகரன் தப்பிச் சென்றிருக்கலாம் என்பதை ஒரு கதைக்காக எடுத்துக்கொண்டாலும் கூட, அவர் அப்படி தப்பிச் செல்லமுன்பு வயதான தனது பெற்றோரையும் தப்ப வைத்திருப்பார். அவர்களை எங்காவது ஒரு பாதுகாப்பான இடத்திற்கு முன்கூட்டியே அனுப்பி வைத்திருப்பார். அல்லது தன்னுடன் அழைத்துச் சென்றிருப்பார். ஆனால் முடிவில் என்ன நடந்தது? அவருடைய முதிய பெற்றோர் அவருடைய “எதிரிகளிடம்” கையளிக்கப்படும் ஒரு பரிதாபகரமான நிலையே வந்தது. இது அவருடைய இறுதிக்கட்டம் எந்தளவுக்கு நெருக்கடியானதாக இருந்தது என்பதையே காட்டுகிறது.

இவை தவிர மேலும் ஒரு விளக்கமும் உண்டு. அவருடைய முன்னாள் சகாவும் பின்னாளில் அவரிடமிருந்து பிரிந்து சென்று தற்பொழுது அவரை விமர்சிப்பவருமாகிய திரு.ராகவன் கூறியது அதாவது ஒரு மரபு ரீதியிலான அரசாங்கம் இவ்வளவு பெரிய பொய்யை தொடர்ச்சியாகக் கூற முடியாது என்பது. அதுவும் இந்தத் தகவல் யுகத்தில் சொன்ன பொய்யை தொடர்ந்தும் அழுத்திச் சொல்வது என்பது கடினம். எனவே திரு.பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதே மெய்யானது. அதை ஒப்புக்கொள்ள மறுக்கும் எல்லா விசுவாசிகளும் முதலாவதாக அவருடைய இயல்பை அறியாது அவரை அவமதிக்கிறார்கள். இரண்டாவதாக ஈழத்தமிழ் அரசியல் அவரோடு தேங்கி நின்று விடவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அடுத்ததாக அவருடைய பாணியிலான போராட்ட வடிவத்தை தொடர விரும்புவோர் பற்றி பார்க்கலாம். இவர்களும் ஏறக்குறைய பிரபாகரனின் உடலையும் அவரது கோட்பாடுகளையும் மம்மியாக்கம் செய்து பேண முற்படுகிறார்கள் எனலாம். ஏனெனில் நிலவும் ஒரு துருவ உலக ஒழுங்கின்படி பிரபாகரனின் பாணி எனப்படுவது காலங்கடந்ததாகி விட்டது. இந்நிலையில் பிரபாகரனிசத்தை மம்மியாக்கம் செய்து பேணமுற்படும் எல்லாரும் இறந்தகாலத்திலேயே சீவித்திருக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு கள யதார்த்தம் தெரியவில்லை. இனியுமொரு ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க முடியாத அளவிற்கு ஈழத்தமிழர்கள் குறிப்பாக வன்னி மக்கள் களைத்தும், சலித்தும், வெறுத்தும், இடிந்தும் போய்விட்டார்கள்.

மிகச் சிறிய இனமாகிய ஈழத்தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தின் சாணக்கியமற்ற மற்றும் தீர்க்க தரிசனமற்ற போக்குகளால் தமது வல்லமைக்கு மீறி அசாதாரணமான அசாத்தியமான தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். ஒரு சிறிய இனத்திற்கு இருக்கக்கூடிய புறவயமான பௌதீக வரையறைகளை மீறிச் சாதிக்கப்பட்ட அனைத்து பெருஞ் செயல்களுக்கும் அதிகமதிகம் அகவயப்பட்ட விளக்கங்களையே கொடுக்க முடியும். அதிலும் குறிப்பாக வன்னியில் வாழ்ந்த ஒரு சிறிய சனத்தொகையே (இது கனடாவில் புலம்பெயர்நது வாழும் சனத்தொகைக்கு ஏறக்குறைய சமம்) முழு ஈழத்தமிழினத்துக்குமான போரை எதிர் கொண்டது. தியாகம் செய்ததும், காயப்பட்டதும், அவமானப்பட்டதும், பசிகிடந்ததும், பதுங்குகுழிக்கும் தறப்பாள் கூடாரத்துக்கும் இடையே ஈரூடகமாக கிழிபட்டதும், இறுதிக்கட்டதில் போராளிகளுக்கும் அரச படைகளிற்கும் இடையே நார்நாராய் கிழிபட்டதும் அவர்கள்தான்.

ஏறக்குறைய முழு உலகத்தாலும் கைவிடப்பட்ட ஒரு நிலையில் கூட்டுத் தண்டனையை அனுபவித்ததும், அனுபவிப்பதும் அவர்கள்தான். யார் யாருடையதோ தீர்கதரிசனமற்ற முடிவுகளால் தலைச்சான் பிள்ளைகளை பலியாடுகளாய் கொடுத்ததும் தலைமுறை தலைமுறையாக சேகரித்த சொத்துக்களையெல்லாம் தெருக்களில் வீசி எறிந்து விட்டு வெறுங்கையுடன் சரணடைந்ததும், தண்டனைக் கைதிகளாய் பிடிக்கப்பட்டதும் அவர்கள் தான். எனவே போரைத் தொடர வேண்டும் என்று ஆசைப்படுவோர் முதலில் வன்னி மக்களிடம் சென்று வாக்கெடுப்பு நடத்தட்டும்.

முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட வன்னிச் சனங்களை ஏனைய அப்பாவித் தமிழர்கள் அன்போடும் ஆதரவோடும் அணைக்கிறார்கள். ஆனால் ஓரளவுக்கு அரசியல் தெரிந்த அல்லது படித்த தமிழர்களில் பெரும் பகுதியினர் இந்த வன்னி அகதிகளுடன் தொலைபேசியில் கதைப்பதற்கே பயந்து நெளிகிறார்கள். வன்னியில் இருந்து வந்தாலே அது புலிகள் தான் என்று அரசாங்கம் மட்டும் நம்பவில்லை. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஏற்கனவே வசித்து வரும் தமிழர்களில் கணிசமான தொகையினரும் அப்படித்தான் நம்புகிறார்கள். வன்னி அகதிகளுடன் கதைக்க அவர்களுடன் நெருங்கி உறவாட அஞ்சுகிறார்கள். ஒரு வன்னி அகதியை சந்தித்து விட்டு வீடு திரும்பும் போது யாரோ என்னை உற்றுப் பார்ப்பது போலவும் என் பின்னால் தொடர்ந்து வருவது போலவும் உயிர் முழுவதும் கூசுகிறது என்று ஒரு படித்த யாழ்ப்பாணத்து நண்பர் என்னிடம் சொன்னார்.

உண்மைதான். அரசகட்டுப்பாட்டுப் பகுதிகளில் அநேகமானவை இப்பொழுதும் பெருமளவுக்கு அச்சத்தில் உறைந்து போய் உள்ளன. ஒரு தற்காப்பிற்காக அங்குள்ளவர்கள் வன்னி அகதிகளுடன் நெருங்கிப் பழக அஞ்சுவதை புரிந்து கொள்ள முடியும்தான். ஆனால் தனிப்பட்ட உரையாடல்களின்போது பிரபாகரன் சாகவில்லை என்றும், புலிகள் மறுபடியும் வருவார்கள் என்றும் வீராவேசமாக கதைக்கும் பலரும் (சில அரிதான புறநடைகள் தவிர) வன்னி அகதியோடு நெருங்கிப் பழகத் தயங்குவதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அவர்களுக்கு திரு.பிரபாகரன் வேண்டும், வீரம் வேண்டும், தியாகம் வேண்டும், சண்டையும் நடக்கவேண்டும்… ஆனால் அவர்கள் எல்லோருக்குமாக யுத்தம் புரிந்த வன்னி அகதியுடன் நெருங்கிப் பழக மட்டும் அச்சம்.

எந்த ஒரு ஜனக்கூட்டம் முழுத் தமிழனத்துக்குமாக தியாகம் செய்து பெரும் செயல்களைச் செய்து முடிவில் சாவினால் சப்பித் துப்பப்பட்டு தப்பி வந்ததோ அந்தச் சனங்களுடன் நெருங்கி உறவாட துணிச்சலற்ற பலரும் புலிகளின் வீரத்தைப்பற்றி போற்றும் ஒரு முரணைக் காண முடிகிறது. இது எதைக் காட்டுகிறது? இவர்களுக்கு சண்டை வேண்டும். தமிழ் வீரம் என்று சொல்லி கைதட்டவும் விசிலடிக்கவும் வெடி கொழுத்தி மகிழவும் யுத்தகள வெற்றிகள் வேண்டும். ஆனால் இவை எல்லாவற்றிற்குமாக தப்பிச் செல்ல வழியற்றிருந்த ஒரு சிறிய ஜனக்கூட்டமே பீரங்கித் தீனியாக வேண்டும். அவர்களுடைய தலைச்சான் பிள்ளைகளே பலியாடாக வேண்டும். இவர்கள் யாரும் யுத்தத்திற்கு போகமாட்டார்கள். தங்களுடைய பிள்ளைகளையும் அனுப்ப மாட்டார்கள். இது முழுக்க முழுக்க தமிழ்ச்சினிமா ஸ்தாபித்து விட்டிருக்கும் ஒரு பார்வையாளர் பண்பாடுதான். யாரோ தியாகம் செய்ய, யாரோ வதைபட இவர்கள் வெடிகொழுத்தி கொண்டாடுவார்களாம்.

எனவே பிரபாகரனிசத்தை மம்மியாக்கம் செய்து காவும் எல்லோரையும் நோக்கி இக்கட்டுரை ஒரு கேள்வியை முன்வைக்கிறது. நீங்கள் யுத்தம் தொடரவேண்டும் என்று விரும்பினால் அதில் முன்னணிப் படையாகப் போகத்தயாரா? பாதுகாப்பான இடங்களில் இருந்து கொண்டு குறிப்பாக ஒப்பீட்டளவில் ஜனநாயகமான சூழல்களில் வசித்துக்கொண்டு முழுக்க முழுக்க ராணுவமயப்பட்ட மூடப்பட்ட ஒரு நிலத்தில் வாழும் ஜனங்களின் மீது போரையும் போர்ப்பிரகடனங்களையும் ஏவி விட முயலும் எல்லாருமே அதில் முதல் வீரராகப் போகத் தயாராக இருக்கவேண்டும். இல்லையென்றால் அந்த ஜனங்கள் தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிடவேண்டும்.

யுத்த இயந்திரத்திற்கு காசை அள்ளி இறைத்த ஒரே காரணத்திற்காக யாருடையதோ தியாகத்தில் குளிர் காய்ந்து விட முடியாது. எனவே திரு.பிரபாகரனை மம்மியாக்கம் செய்து வைத்திருக்கும் எவரும் ஈழத்தமிழ் அரசியலை அதன் அடுத்த கட்டத்திற்கு போகவிடாது தடுப்பதோடு, வன்னியில் இருந்து சாவினால் உமிந்து விடப்பட்ட ஜனங்களை மேலும் ஆபத்துக்குள்ளாக்குகிறார்கள். இவர்கள் பாதுகாப்பான ஜனநாயகமான ஒரு சூழலில் இருந்து கொண்டு எதையும் கதைக்கலாம். ஆனால் ஜனநாயமற்ற ஒரு சூழலில் வசிக்கும் மக்கள் குறிப்பாக தலைக்குப்பதில் தலை சீவப்படும் ஒரு அரசியல் சூழலில் சிலமாதங்களிற்கு முன்புவரை வசித்து வந்த மக்கள் இவர்களுடைய பிரகடனங்களால் மேலும் வதைபட நேரிடலாம்.

விடுதலைப்புலிகளின் தலைவர் திரு.பிரபாகரனை கடவுளாக வழிபடும் ஜனநாயக உரிமையை கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அந்த வழிபாடானது தோற்கடிக்கப்பட்ட ஒரு ஜனக்கூட்டத்தை தொடர்ந்தும் இறந்த காலத்திலேயே உறைந்து கிடக்குமாறு கோருவதை இக்கட்டுரை விமர்சிக்கிறது.

இனி இரண்டாவது போக்கை பார்க்கலாம். இது திரு.பிரபாகரனைப் பிசாசு அல்லது பாசிஸ்ட் அல்லது போர்க்குற்றவாளி என்று கூறுவோர் அணி. அவரைப் பாட்டுடைத் தலைவனாக ஏற்றுக்கொள்ள மறுத்து அவரை ஒரு பாசிஸ்ட் என்று கூறும் ஜனநாயக உரிமையை இக்கட்டுரை மதிக்கிறது, ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அதற்காக எல்லாத் தீமைகளிற்கும் அவரே பொறுப்பு என்றும் அதனால் இலங்கை அரசாங்கம் செய்வதெல்லாம் சரி என்றும் கூறுவதை இக்கட்டுரை விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறது.

முதலில் ஒரு அடிப்படை உண்மையை தெளிவாகப் பார்க்கவேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு காரணம் அல்ல; அது ஒரு விளைவு மட்டுமே. தீர்க்கப்படாத இன முரண்பாட்டின் விளைவே விடுதலைப்புலிகளும் ஏனைய தமிழ் இயக்கங்களும். விடுதலை இயக்கங்களுடன் கூடப் பிறந்த ஜனநாயக மறுப்பின் விளைவே, விடுதலைப்புலிகளுக்கு எதிரான இயக்கங்களை உயிர் பிழைத்திருப்பதற்கான தங்குநிலை அரசியலை நோக்கித் தள்ளியது. அதாவது விளைவின் விளைவுகள் அவை. எனவே விளைவின் வீழ்ச்சியை வைத்துக் கொண்டு காரணமும் இல்லாமல் போய்விட்டது என்று சொல்லிவிட முடியாது. அரசாங்கத்தின் வெற்றியை பெருந்திரளான தமிழ்மக்கள் தங்களுடைய வெற்றியாகக் கருதவில்லை என்பதால்தான், விடுதலைப்புலிகளை கடுமையாக விமர்ச்சிப்பவர்கள் கூட அவர்களிடம் இப்பொழுது கழிவிரக்கம் காட்டுகிறார்கள். விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சிக்கும் ஒரு புலம் பெயர்ந்த தமிழர் சொன்னார் “கடிநாய் என்றாலும் அது ஒரு காவல் நாய்” என்று.

இதுதான் இலங்கைத் தீவின் இன யதார்த்தம். இலங்கை அரசாங்கம் யுத்தத்தில் பெற்ற வெற்றிகளை ஒட்டுமொத்த இறுதிகட்ட அரசியல் வெற்றியாக மாற்ற தயாரற்ற ஒரு போக்கே யுத்தம் முடிந்து ஏழுமாதங்கள் ஆன பின்னரும் இப்பொழுதும் காணப்படுகிறது. அவ்விதம் ராணுவ வெற்றிகளை அரசியல் வெற்றிகளாக மாற்றத் தேவையான தீர்க்க தரிசனமும் திடசங்கற்பமும் ஜனநாயக அடித்தளமும் கொழும்பில் இருப்பதாகத் தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப்புலிகளும் இதே தவறைத்தான் செய்தார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இந்நிலையில் யுத்தத்தின் வெற்றி காரணமாக சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் ஒரு புதிய இன எழுச்சி அலை உருவாகியுள்ளது. அதை மீறிச் செல்லும் தைரியம் இலங்கைத் தீவில் எந்த ஒரு பெருங்கட்சிக்கும் இருப்பதாகத் தெரியவில்லை என்பதால்த்தான் ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியானது ஒரு முன்னாள் ராணுவ தளபதியைப் பற்றி சிந்திக்கவேண்டியிருக்கிறது.

இத்தகைய ஒரு பகைப்புலத்தில் இனப்பிரச்சினைக்கு உரிய கௌரவமான ஒரு தீர்வு முன்வைக்கப்படாத ஒரு வெற்றிடத்தில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் திரு.பிரபாகரனும் விடுதலைப்புலிகள் இயக்கமும் தான் காரணம் என்று கூறுவது அதாவது அடிப்படைக்காரணம் அப்படியே தொடர்ந்தும் இருக்கும் ஒரு பின்னணியில், விளைவையே காரணமாக மாறாட்டம் செய்வது என்பது பிரச்சினையின் அடியாழ வேர்களை கண்டுபிடிக்கத் தடையாகிவிடும்.
விடுதலைப் புலிகள் இயக்கம் எனப்படுவது முழுக்க முழுக்க திரு பிரபாகரன் என்ற ஒரு தனிப்பெரும் ஆளுமையின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு அமைப்புத்தான். அதற்குள் காணப்பட்ட ஏனைய பெரிய ஆளுமைகள் எதுவும் தலைமையை பலப்படுத்திய உப ஆளுமைகளே தவிர திரு.பிரபாகரனுக்கு நிகரானவை அல்ல. அதாவது விடுதலைப்புலிகள் என்றாலே அது பிரபாகரன் தான். பிரபாகரன் என்றாலே அது விடுதலைப்புலிகள் தான். இனிமேல் அவர் இல்லாத வெற்றிடத்தில் யார் வந்தாலும் இயல்பில் அது முன்னைய விடுதலைப்புலிகள் இயக்கமாய் இருக்க முடியாது. எனவே விடுதலைப் புலிகளை விமர்சிப்பது என்பது அதன் பிரயோக நிலையில் பிரபாகரனின் தனி ஆளுமையை விமர்சிப்பது தான்.

மேலும் விடுதலைப்புலிகளின் அதிகார கட்டமைப்பைப் பொறுத்தவரை அதன் உச்சியில் காணப்பட்ட திரு.பிரபாகரனே எல்லா இறுதி முடிவுகளையும் எடுத்தார். எனவே விடுதலைப்புலிகளை விமர்சிப்பது என்பது அவரை விமர்சிப்பதுதான். ஆனால் அதற்காக அவரை விமர்சிப்பது என்பது அவருக்கேயான தனி விசேசமான வரலாற்றுப் பின்னணியில் இருந்தும், சமூக உளவியற் பின்னணியில் இருந்தும் அவரைப் பிரித்தெடுத்து பார்ப்பதாகப் பொருள் படாது. பிரபாகரன் ஒரு தனிமனிதர் அல்ல. அவர் வெற்றிடத்தில் இருந்து வரவுமில்லை. அவர் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் கூட்டு உளவியலின் ஒரு வகை மாதிரி. அவருக்கேயான ஒரு வரலாற்று காலகட்டத்தின் தவிர்க்கப்படமுடியாத ஒரு விளைவு.
அவரை எதிரியாகப் பார்க்கும் ஈழத்தமிழர்களில் அநேகர் அவரை தமக்குப் புறத்தியான ஒரு ஆளுமையாகவே பார்க்கிறார்கள். ஆனால் பிரபாகரத்தனம் எனப்படுவது அநேகமாக எல்லா ஈழத்தமிழர்களிற்குள்ளும் ஏதோ ஒரு விகிதமளவிற்கு இருக்கிறது என்பதே உண்மை. இனமானம் இனப்பெருமை பேசும் எல்லாத் தமிழ் போர் வீரனும் அவருடைய சாயலை உடையவன் தான். சரணடையாமை, எதிரியை மன்னியாமை என்றுவரும் எல்லா இடங்களிலும் அவர் உண்டு. கொலனித்துவ கால பிரிட்டிஷ் உயர் அதிகாரிகளால் பெரிதும் பாராட்டப்பட்ட தமிழ்ச் சிப்பாய்களிடம் காணப்பட்ட விசுவாசம், உத்தரவை சிரமேற்கொண்டு நிறைவேற்றும் கீழ்ப்படிவு போன்ற தமிழ்ச் சிப்பாய்த்தனம் அல்லது தமிழ் இராணுவத்தனம் எனப்படுவது பிரபாகரனை எதிர்ப்பேதுமின்றி ஏற்றுக்கொண்டு விட்டது.

மேலும் குடும்பத்திற்குள் மற்றவர்களின் அபிப்பிராயங்களைப் பொருட்படுத்தாத குடும்பத் தலைவனையும், பிள்ளைகளை தண்டனைகள் மூலம் வளர்த்தெடுக்கலாம் என்று நம்பும் பெற்றோரையும், பாடசாலைகளில் பிரம்புடன் நிற்கும் ஆசிரியரையும், ஆசிரியரை நிற்கவைத்து கதைக்கும் அதிபரையும், அதிபரை நாட்டாண்மை செய்யும் உயர்அதிகாரியையும், ஆஸ்பத்திரிகளில் எஜமானர்களைப் போல வரும் மருத்துவரையும், அவர் இல்லாத போது ராஜாங்கம் செய்யும் தாதியையும், தாதி இல்லாத இடத்தில் அட்டகாசம் செய்யும் சிற்றூழியரையும் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளும் அல்லது மௌனமாக சகித்துக்கொள்ளும் ஒரு சமூகம், அரசியலில் திரு.பிரபாகரன் கொண்டு வந்த ஒற்றைப்பரிமாண அணுகு முறையையும் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டுவிட்டது.

இக்கருத்தை மேலும் பலப்படுத்த விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக நம்பப்படும் ராஜினி திரணகம தன்னுடைய நண்பரான ஒரு மருத்துவ நிபுணரிடம் கேட்ட கேள்வியை இங்கு எடுத்துக்காட்டலாம். “இந்தப்பிள்ளைகள் இவ்வளவு வன்முறையை எங்கிருந்து பெற்றார்கள். எங்களுடைய வீடுகள், பாடசாலைகள், ஆலயங்கள், சனசமூக நிலையங்கள், ஒன்றுகூடும் இடங்கள் போன்றவற்றில் இருந்து தானே” என்று. இதுதான் உண்மை. தமிழ் வீரத்தின் மறுபக்கமாயிருந்த மன்னிப்பிற்கு இடமின்மையும், ஜனநாயக மறுப்பும் வெற்றிடத்தில் இருந்து வரவில்லை. அது ஈழத்தமிழ் சமூகத்தின் கூட்டு உளவியலில் இருந்து அதாவது யுத்தத்தின் வெற்றிக்காக எதையும் தியாகம் செய்யலாம். அல்லது விளைவுகளே வழிவகைகளை நியாயப்படுத்தி விடும் என்ற ஒரு கூட்டு மனோநிலையில் இருந்து வந்தவைதான்.

எனவே திரு.பிரபாகனை விமர்சிப்பது என்பது ஒவ்வொரு ஈழத்தமிழனும் அதோடு அவரை ஆதரிக்கும் ஒவ்வொரு இந்தியத் தமிழனும் தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்து கொள்வதுதான். அவரை அவருக்கேயான தனி விசேசமான வரலாற்றுப் பின்னணியில் இருந்தும் சமூக உளவியற் பின்னணியில் இருந்தும் பிடுங்கியெடுத்து விமர்சிப்பது என்பது அவரை மட்டுமல்ல முழு ஈழத்தமிழ்ச் சமூகத்தின் கூட்டு உளவியலையும் அதோடு முக்கியமாக இலங்கைத் தீவின் இன யதார்த்தத்தையும் புரிந்து கொள்ளத் தடையாகிவிடும்.

பிரபாகரனை வழிபடுவது என்பது எப்படி ஈழத்தமிழ் அரசியலை அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தடையாயிருக்கிறதோ, அது போலவே அவருடைய பாத்திரத்தை அதற்கேயான சமூக மற்றும் வரலாற்றுப் பின்னணிகளில் இருந்து பிரித்தெடுத்து விமர்சிப்பது என்பதும் ஈழத்தமிழ் அரசியலை அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தடைதான்.

இனி மூன்றாவது போக்கைப் பார்க்கலாம். இது மேற்சொன்ன ஒன்றுக்கொன்று நேர் எதிரான துருவ நிலைப்பாடுகளுக்கு நடுவே வருகிறது. இதில் வழிபாட்டிற்கும் இடமில்லை, வசை பாடுவதற்கும் இடமில்லை. பதிலாக நிதானமான தீர்கதரிசனத்துடன் கூடிய அறிவுப்பூர்வமான ஒர் அணுகுமுறையே இது. முன்சொன்ன துருவ நிலைப்பாடுகள் இரண்டும் தமிழர்களை இறந்த காலத்திலேயே தேங்கி நின்றுவிடச் செய்பவை. அதாவது திரு.பிரபாகரன் என்ற மையத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் இறந்த காலத்துடனேயே நின்று விடுவது. ஆனால் இந்த மூன்றாவது போக்கெனப் படுவது தமிழ் அரசியலைத் திரு.பிரபாகரன் என்ற மையத்தை கடந்து கொண்டுவரவேண்டும் என்று கோருவதாய் இருக்கிறது. அதாவது நிகழ்காலத்திற்கும் வருங்காலத்துக்கும் ஆனது. பிரபாகரன் ஒரு கட்டம். அதில் அவருக்கென்றொரு முற்போக்கான பாத்திரமும் இருந்தது. பிற்போக்கான பாத்திரமும் இருந்தது. இப்பொழுது அது கடந்து செல்லப்படவேண்டிய காலாவதியாகிவிட்ட ஒரு கட்டம். இனி அடுத்த கட்டம், அது அவர் விட்ட இடத்தில் இருந்து தொடங்குவது அல்ல. மாறாக அவர் தொடாத இடங்களில் இருந்து தொடங்குவது. அவர் ஏன் தோற்கடிக்கப்பட்டார் என்ற கேள்விகளில் இருந்து தொடங்குவது.

இலங்கைத் தீவிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் பெரும் போக்குகளாக காணப்படும் முன் சொன்ன துருவ நிலைப்பட்ட போக்குகள் தற்பொழுது களத்தில் அதாவது இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் பேரம் பேசும் சக்தியற்றவை ஆகிவிட்டன. ஏனெனில் விடுதலைப் புலிகள் என்ற மையத்தை சுற்றியே அவர்களுடைய அரசியல் இருந்து வந்தது. இப்பொழுது அந்த மையம் இல்லை. எனவே ஆதரிப்போருக்கும் பேரம் பேசும் சக்தி இல்லை. எதிர்ப்போருக்கும் இல்லை. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தமது பேரம் பேசும் சக்தியை மறு சீரமைத்து மீளக்கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. பேரம் பேசும் சக்தியை இழந்துவிட்ட இரு பிரதான போக்குகளையும் சாராது, அதே சமயம் தமது மெய்யான பேரம் பேசும் சக்தி எது என்பதை அடையாளம் கண்டு அதிலிருந்து தொடங்கினால்தான் இனி ஈழத்தமிழர்களுக்கு அரசியல் எதிர்காலம் உண்டு.

இப்படிப் பார்த்தால் மூன்றாவது போக்கிற்கே பிரகாசமான அரசியல் எதிர்காலம் உண்டு. ஆயுதப் போராட்டத்தின் சாணக்கியமற்ற தீர்க்க தரிசனமற்ற முடிவுகளால் பல துண்டுகளாக உடைந்து சிந்திச் சிதறி நீர்த்துப் போயிருக்கும் ஈழத்தமிழர்கள் மீண்டும் ஒரு சக்தியாக ஒன்று திரண்டெழுவது என்பது இந்த மூன்றாவது போக்கினூடாக மட்டுமே சாத்தியப்படும்.
விடுதலைப்புலிகள் விட்ட இடத்தில் இருந்து தொடங்கும் எவரும் புலிகள் மீதான குற்றச்சாட்டுகளிற்கு பதில் சொல்லவேண்டியிருக்கும். அதோடு புலிகளைத் தடைசெய்திருக்கும் நாடுகளில் சட்டச் சிக்கல்களிற்கும் முகங்கொடுக்க வேண்டி வரும். அதே சமயம் புலி எதிர்ப்பையே ஒரு அரசியலாக செய்து வந்தவர்களும் புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஏறக்குறைய ஏழு மாதங்கள் ஆகிவிட்ட ஒரு காலச் சூழலில் ஈழத்தமிழர்களின் பேரம் பேசும் சக்தி இனியும் நீர்த்து போகக்கூடாது என்ற ஒரு மகத்தான பொது இலட்சியத்தின் கீழ் ஒன்று திரள முன்வரவேண்டும்.

இதற்கு முதலில் செய்யப்படவேண்டியது, இறந்தகாலத்தை வெட்டித்திறந்து பார்ப்பதுதான். அதாவது ஒரு பிரேதப்பரிசோதனை - போஸ்ட்மோட்டம்.
இறந்தகாலத்தை ஈவிரக்கமின்றி விமர்சிக்கும் ஓர் அரசியல் ஒழுக்கம், ஓர் அறிவியல் ஒழுக்கம், ஒரு கலை இலக்கிய ஒழுக்கம், ஒரு ஊடக ஒழுக்கம்.
இறந்தகாலத்தை காய்தல் உவத்தல் இன்றி விமர்சித்தால் அன்றி இனி ஈழத்தமிழர்களுக்கு எதிர்காலமே கிடையாது. அத்தகைய ஒரு பிரேதப் பரிசோதனைக்குத் தேவையான துணிச்சலற்ற எவரும் ஈழத்தமிழர்களுக்கு தீர்க்கதரிசனம் மிக்கதொரு எதிர்காலத்தை காட்டமுடியாது.

பிரேதப் பரிசோதனை என்ற சொல் இங்கு மிகப்பரந்த ஆழமான அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகிறது. கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு வரை யுத்தகளத்தில் காட்டப்பட்டதை விடவும் மிக உயர்வான வீரத்தையும் தியாகத்தையும் இது வேண்டி நிற்கிறது. அதாவது பிரேதப் பரிசோதனை செய்யும் ஒருவர் தேவைப்பட்டால் தன்னுடைய தலையையும் வெட்டித் தராசில் வைத்து நிறுக்கத் தயாராக இருக்க வேண்டும்.

வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த நோய்க்கூறான அம்சங்கள் அனைத்தும் கண்டறியப்பட வேண்டும். ஒவ்வொரு தமிழரும் தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்து கொள்ளவேண்டும். முழுச் சமூகமுமே தன்னை ஒரு கூட்டுச் சுயவிமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டும். அதற்கு வேண்டிய களங்கள் எல்லாத் துறைகளிலும் எல்லா தளங்களிலும் அரசியல் அறிவியல் கலை இலக்கியம் ஊடகம் போன்ற எல்லாத்துறைகளிலும் திறக்கப்பட வேண்டும்.

மே 17 -ற்கு முன்பு வரை விடுதலைப் புலிகளை விமர்சிப்பதை ஓர் அரசியல் ஒழுக்கமாகவோ அல்லது அறிவியல் மற்றும் கலைஇலக்கிய ஒழுக்கமாகவோ கொண்டிருந்த அனைவரும் அணி தோல்விகள் அற்ற ஓர் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வமான விமர்சனவெளியாக அதை விரிவுபடுத்த வேண்டும்.

அச்சத்தின் காரணமாகவோ அல்லது யுத்தத்தின் வெற்றிக்காக தியாகம் செய்யப்படும் ஒன்றாகவோ வெளிப்படையாக அபிப்பிராயம் கூறா ஓரியல்பு ஆயுதப்போராட்டம் நெடுகிலும் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுதும் அதாவது மே 17-ற்குப் பின்னரும் யாராவது வன்னி அகதி ஒருவர் தன்னுடைய கசப்பான அனுபவங்களில் இருந்து கதைக்கும் போது ஏனைய தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அதை வரவேற்பதில்லை. முள்ளிவாய்க்கால் வீழ்ச்சியோடு நொந்து போயிருக்கும் ஒர் அரசியற் சூழலில் இது போன்ற விமர்சனங்கள் எதிர்த்தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கே உதவக் கூடும் என்று ஓர் அபிப்பிராயம் படித்த தமிழர்களில் ஒரு பிரிவினரிடம் காணப்படுகிறது. இது வரை இருந்ததோடு சேர்த்து இன்னும் சிறிது காலத்திற்கு மௌனமாக இருந்தால் என்ன என்றும் கேட்கப்படுகிறது. குறிப்பாக இப்படி அபிப்பிராயப்படுவோரில் அநேகர் மே 17-ற்கு முன்புவரை விடுதலைப்புலிகளை கடுமையாக விமர்சித்து வந்தவர்கள் என்பதை இங்கு முக்கியமாக சுட்டிக்காட்ட வேண்டும்.

தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு பெரும் போக்கே நிலவுகிறது. விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற முடியாது போனதால் வந்த குற்றவுணர்ச்சியின் பாற்பட்ட ஒரு கழிவிரக்கமே இதுவென்று சிலர் சொல்கிறார்கள். வேறு சிலர் ஈழம் மறுபடியும் தமிழகச் சந்தைகளில் பண்டமாக விற்கப்படுகிறது என்கிறார்கள். எதுவோ எதன் காரணமாக ஈழப்போரில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டார்களோ அதைக்குறித்த வாதப்பிரதிவாதங்களிற்கான ஒரு பகிரங்க அரங்கு பெருந்திரள் ஜனப்பரப்பில் இதுவரையிலும் திறக்கப்படாதிருப்பது மிகவும் மோசமானது.

இப்படியே போனால் ஈழத்தமிழர்கள் தங்களுடைய தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்பது எப்போது? விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் தோன்றியிருக்கும் கழிவிரக்கம், கைவிடப்பட்டதான உணர்வு, எதிர்த்தரப்பிற்கு மேலும் வெற்றிகள் கிடைத்து விடக்கூடாது என்ற தவிப்பு போன்றவைகள் காரணமாக கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாக சமூகத்தின் மீது கவிந்து படிந்திருக்கும் ஒரு கனத்த மௌனம் மேலும் தொடரப்படும் ஓர் ஆபத்து தென்படுகிறது.

தமிழ்ச்சான்றோர், ஆய்வாளர்கள், கலை இலக்கிய கர்த்தாக்கள் மற்றும் ஊடகக் காரர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு இந்த மௌனத்தை உடைத்தெறியவேண்டும். உலகையே வியக்கவைத்த தமிழ்வீரமும், தியாகமும் ஏன் காலாவதியாகின, ஏன் வீணாயின என்ற கேள்விக்கு விடை காணப்படவேண்டும். இந்த கால்நூற்றாண்டுக்கு மேலான மௌனம் உடைக்கப்படாத படியால்தான் ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் துலக்கமற்று காணப்படுகிறது. எனவே ஈழத்தமிழர்கள் இனியும் மௌனமாயிருக்க கூடாது. இப்போது நிலவும் இடைமாறு காலகட்டத்தை சுயவிசாரணைக் காலமாக, சுயவிமர்சனக் காலமாக மாற்றி இறந்தகாலத்தை வெட்டித்திறக்கவேண்டும்.

இறந்த காலத்தில் வாழ்தல் அல்லது மம்மியாக்கம் செய்யப்பட்ட நம்பிக்கைகளுடன் வாழ்தல் என்பது ஒரு சமூகத்தை அந்த இறந்து போன நம்பிக்கைகளோடு சேர்த்து அழுகச் செய்துவிடும். இறந்தகாலத்தில் வாழ்தல் என்பது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை தோல்வியில் வாழ்தல்தான். தோல்விக்கு காரணமான கிருமிகளுடன் சேர்ந்து வாழ்தல்தான். எனவே இறந்தகாலத்தை சரியானபடி எடை போடவேண்டும் அப்படி செய்தால்தான் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் திட்டமிடலாம். அதற்கு முதலில் துணிந்து பிரேதப் பரிசோதனையில் இறங்கவேண்டும். இறந்து போனவர்களை மறந்து போகாமலிருக்கவும் இதை உடனடியாக செய்யவேண்டும். இறந்து போனவர்களுக்கு வரலாற்றில் உரிய இடத்தையும் உரிய கௌரவத்தையும் கொடுப்பதற்காகவும் இறந்தகாலத்தை சரியானபடி எடைபோடவேண்டும்.

தற்பெருமைமிக்க எல்லாச்சிறிய இனங்களிடமும் உள்ளதுபோல ஈழத்தமிழர்களிடமும் ஒரு வியாதி உண்டு. அதாவது வெற்றிகளிற்கெல்லாம் உள்ளேயிருக்கும் சக்திகள் போற்றப்படும். அதே சமயம் தோல்விகளிற்கெல்லாம் புறச்சக்திகள் திட்டித் தீர்க்கப்படும் அல்லது புறச்சக்திகளின் கைக்கூலிகளாக மாறியதாகக் குற்றம் சாட்டப்படும் அகச்சக்திகள் திட்டித் தீர்க்கப்படும். இந்த இடத்தில் ஈழத்தமிழர்கள் ஒன்றை மனந்திறந்து ஒப்புக்கொள்ளவேண்டும். வீழ்ச்சிகளிற்கெல்லாம் காரணம் புறச்சக்திகள் என்பதை விடவும் புறச்சக்திகளால் தோற்கடிக்கப்படும் அளவிற்கு அகச்சக்திகள் தீர்க்க தரிசனமற்றும் சாணக்கியமற்றும் நெகிழ்ச்சியற்றும் மூடுண்டும் காணப்பட்டன என்பதே.

எனவே ஒரு முழு அளவிலான மனந்திறந்த துணிச்சலான பிரேதப் பரிசோதனையே இப்போதுள்ள உடனடித் தேவை. இனியும் இறந்தகாலத்தை ஒரு இராணுவ ரகசியம் போல மூடிவைத்திருக்க முடியாது. குறிப்பாக ஒப்பீட்டளவில் ஜனநாயகச் சூழலில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களும், தமிழ்நாட்டு சான்றோரும் அதை உடனடியாகத் தொடங்கலாம்.

தமிழ்ச்சக்தி சிதறிக்கிடக்கிறது. தமிழ்ப்பலம் சிதறுண்டு கிடக்கிறது. தமிழர்கள் தங்களை புத்திசாலிகள் என்றும் தீரர்கள் என்றும் சுழியர்கள் என்றும் தந்திரசாலிகள் என்றும் தற்பெருமை பேசியதெல்லாம் வீண். எந்தவொரு புத்திசாலியான சிறிய இனமும் தன்பலத்தை இப்படி சிந்திச் சிதறியதில்லை. எந்தவொரு புத்திசாலியான சிறிய இனமும் இப்படி கூறுபட்டுக் கிடந்ததில்லை. எந்த ஒரு புத்திசாலியான சிறிய இனமும் சகோதரர்களைப் பகைத்ததுமில்லை அயலவர்களைப் பிழையாகக் கையாண்டதுமில்லை. எந்த ஒரு புத்திசாலியான சிறிய இனமும் இப்படி இறந்தகாலத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு கிடந்ததும் இல்லை.

அறிவற்ற வீரம் என்றைக்குமே வென்றதில்லை. தன்பலம் எதுவென்று தெரியாத எந்த ஓரினமும் விடுதலைக்கு தகுதியற்றதே.

வீரதீர சாகசங்களின் காலம் எப்பொழுதோ முடிந்துவிட்டது. விளைவுகளே வழிவகைகளை நியாயப்படுத்தி விடும் என்ற வாதமும் தோற்றுப் போய்விட்டது. இது அறிவின் யுகம். இப்பொழுது அறிவுதான் எல்லாமும். உயிரை ஆயுதமாகப் பாவித்த ஒரு சிறிய இனம் இனி அறிவை ஆயுதமாகப் பாவிக்கவேண்டும்.

அறிவுதான் ஆயுதம்
அறிவுதான் சக்தி
அறிவுதான் பலம்
அறிவுதான் நிரந்தரம்
புத்திமான் பலவான்

நன்றி: கீற்று

’’ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? எங்கிருந்து தொடங்க வேண்டும்?’’ எனும் தலைப்பில் கீற்றில் வெளியான கட்டுரை
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பிரிவோம் சந்திப்போம்.. மீண்டும், சந்திப்போம் பிரிவோம்.. (தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பாம், ஐக்கியத்துக்கு முயற்சியாம்.) -வாசகர் கருத்து-


தேர்தல் ஒன்று நடைபெற்று, அதில் மீண்டும் மகிந்தாவின் ஆட்சி நிலைபெற்று, அவர் விரும்பியோ விரும்பாமலோ 13வது திருத்த சட்டத்திற்க்கு அமைய ஒரு தீர்வுதிட்டம் அமைய இருப்பNது யதார்தம், இதில் நாங்கள் ஒற்றையாக இருந்தாலும், ஒற்றுமைப்பட்டு காட்டினாலும் பெரியளவு மாற்றங்களை கொண்டு வரமுடியாது என்பதும் யதார்த்தம். ஐக்கியம் அவசியம் இல்லை என்ற பொருளில்லை, அதற்க்கான அவசரத்தில் நீங்கள் உங்களை களங்கபடுத்த வேண்டிய தேவை இல்லை என்பதே எங்கள் ஆதங்கம்.

நடந்து முடிந்த மாநகர சபை தேர்தல்களில் நேர்மையான உங்களை மக்கள் பெரியளவில் ஆதரிக்கவில்லை எனவே கொலைகாரர்களுடன் கூட்டு சேர்ந்தால் மக்கள் உங்களையும் சேர்ந்து ஆதரிப்பார்கள் என்று நீங்கள் மக்களை எடை போடுவது அது அவர்களை கேவலப்படுத்துவதற்க்கு சமம்.

நடந்து முடிந்த அந்த அவசர தேர்தலில் மௌனித்து இருந்த மக்கள் எண்பது வீதத்திற்க்கு அதிகமானவர்கள், அவர்கள் எண்ணங்களில் எது சரி எது பிழை என்று தீர்மானம் எடுக்கக்கூடிய கால அவகாசம் இல்லை என்பதே நிஜம். சொல்லப்போனால் இந்த எண்பது வீதமான மக்களே தமிழ் மக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும் மாபெரும் சக்தி. அவர்களிடம் உங்களுக்கும் இடம் உண்டு. பாசிசத்தின் இரும்பு பிடிக்குள் இருந்து விடுபட்டு இன்று ஓரளவிற்க்காது நிம்மதி காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கும் அவர்கள் முன்னால் அதே பாசிசத்தின் எச்சங்களை துணைக்களைத்துக்கொண்டு சென்று அவமானப்பட வேண்டாம், புலிகளின் கொலை அச்சுறத்தலுக்குள் மத்தியில் வாழ்ந்து காட்டியவர்கள் நீங்கள், உங்கள் தியாங்கங்களுக்குள் உள்ள நியாயங்களை தாரை வார்த்து கொடுக்க வேண்டாம்.

அன்று முதல் இன்று வரை மக்களின் நலம் சார்ந்தே உங்கள் செயல்பாடுகள் எல்லாம் அமைந்திருந்தன. ஆனால் முதல் முதலாய் உங்களின் நலம் சார்ந்து ஒரு முடிவு எடுப்பதாக என்னைப் போன்றவர்கள் சந்தேகப்படுவதில் தவறு இருந்தால் அதை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பும் உங்களுடையது. ஏனெனில் எது நியாயம்? எது அநியாயம்? என்று ஆராய்ந்து முடிவெடுப்பதை விட மனதில் என்ன தோன்றுகிறதோ அது நியாயமாகத்தானிருக்கும் என்று வாழ்ந்த எமது தோழரின் வழியை ஏற்றுக்கொண்ட என்னை போன்றவர்களின் மனதில் இது வெறும் வலியாக மட்டும் தான் தோன்றுகிறது. மக்கள் இல்லாத மண்ணை நேசிக்காத தோழரின் பாசறையில் வளர்ந்து பின்னர் அந்த மாமனிதனை அழித்தொழித்த பாசிசத்தின் காலை கழுவி வயிறு வளர்த்த அந்த கூட்டத்துடன் மக்கள் நலம் கருதி கூட்டுச்சேர்வது என்பது பல ஆயிரம் காரணங்கள் கொண்டும் நியாயப்படுத்த முடியாது..!!
-மோகன்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நடிப்பின் சிகரம் மனோகணேசன்.., புலிகளுக்கு பாவமன்னிப்பு வழங்கிய ரவூப் ஹக்கீம்.., இரட்டை வேடதாரிகளான தமிழ்க் கூட்டமைப்பு..; யாருடன் ஐக்கிய முன்னணி? எதற்காக ஐக்கிய முன்னணி?? -சாகரன் (கட்டுரை)


ஐக்கிய முன்னணி நல்ல விடயம்தான். பிரதானமாக இன்றைய கால கட்டத்தில் சிறுபான்மையான தேசிய இனங்களின் மக்கள் மத்தியில் உள்ள கட்சிகளுக்கிடையேயான ஐக்கிய முன்னணிக்கான முயற்சிகள் மிகவும் நல்ல விடயமே. இன்று அவசியமும் கூட. ஆனால் யார் யாருடன் ஐக்கிய முன்னணி அமைப்பது!, என்ன இலக்குகளை - நோக்கத்தை அடைவதற்காக அந்த ஐக்கிய முன்னணி!, முன்னணிகான ஸ்தாபனரீதியான உறவுகளை என்ன அடிப்படைகளில் அமைப்பது. ஐக்கிய முன்னணிக்கான வேலைத்திட்டங்கள் என்னென்ன! போன்ற அடிப்படையான - முக்கியமான விடயங்கள் தொடர்பாக ஒரு கருத்தொற்றுமையை ஏற்படுத்திக் கொள்ளாமல் ஓர் ஐக்கிய முன்னணியை ஏற்படுத்த முடியுமா! அப்படித்தான் ஏற்படுத்திக் கொண்டதாக அறிவித்தாலும் அது எத்தனை நாளைக்கு நின்று பிடிக்கும்!

தமிழ்மக்களின் உரிமைகளை அரசுடன் பேச்சு வார்த்தை மூலம் வென்றெடுக்க நமக்கிடையே ஒருமித்த கருத்து நிலைப்பாட்டை உருவாக்குவதற்கான முன்னெடுப்புக்கள் இன்று பிரதானமே,
அதனை நோக்கமாகக் கொண்ட ஓர் ஐக்கிய முன்னணியும் அவசியமே! அதன் மூலமே இன்று பலவீனப்பட்டு நிற்கும் சிறபான்மைத் தேசிய இனங்களுக்கு ஓர் அரசியற் பலம் ஏற்படும் என்பது உண்மையே. தமிழ் பேசும் மக்களின் நலன்களில் உண்மையான அக்கறை உடையவர்களுக்கு இடையில் ஐக்கிய முன்னணியொன்றை அமைப்பது இன்றைய கால கட்டத்தில் அவசியமானதும் சரியானதும் கூட. இதற்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தமிழ் மக்கள் நலன்களின் மீது அக்கறையுடனும் இதய சுத்தியுடனும் அர்ப்பணிப்புடனும் ஏனையவர்களுடன் ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையில், வரையறுக்கப்பட்ட குறிக்கோள்களின் அடிப்படையில், இணைந்து செயற்படத் தயாராக இருக்க வேண்டும்.

சிறபான்மைத் தேசிய இனங்களின் கட்சிகள் உண்மையில் மக்களின் நலன்கள்மீது அக்கறையுடையவர்களானால் இலங்கையில் இருக்கும் ஜனநாயக, இடதுசாரி மற்றும் முற்போக்கு கட்சிகளுடனும் அமைப்புகளுடனும்; இணைந்து செயற்படத்தயாராக வேண்டும். ஒவ்வொரு கட்சியும் தத்தமது இலக்குகள் இலட்சியங்கள் வேலை முறைகள் வேலை செய்யும் தளங்கள் ஆகியவற்றில் வேறுபட்டிருக்கலாம். ஆயினும் இலங்கைவாழ் அனைத்து மக்களினதும் வாழ்வில் சுபீட்சம் ஏற்பட வேண்டும், அனைத்து மக்களுக்கும் இடையில் சமாதானமும் சமரசமும் நிலவ வேண்டும், அனைத்து மக்களும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்ற அடிப்படைகளிலேயே ஒவ்வொரு கட்சியும் இருக்க வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பாருங்கள். அவர்களின் உருவாக்கத்தின் அடிப்படையே போலித்தனம், சுயநலம், தம்மை நம்பிய தலைவர்களுக்கும் தோழர்களுக்கும் துரோகம் இழைத்தமை. இதுவரை எந்த சந்தர்ப்பத்திலாவது உண்மையில் மக்களின் நலன்களில் அடிப்படையில் செயற்பட்டிருக்கிறார்களா? எப்போதும் இரட்டை வேடதாரிகள்தானே! புலிகள் இருந்தவரை புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்காகச் செயற்பட்டார்கள். இப்போது அடுத்த தேர்தலைக் கண்வைத்த தமிழ் மக்களின் மத்தியில் புலிப்பினாமிகளின் நிரல்களுக்காகச் செயற்படுகிறார்கள். அதேவேளை கொழும்பைக் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக நிகழ்ச்சி நிரலில் செயற்படுகிறார்கள்.

இதேபோலவே மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியும் உள்ளது. இது கொழும்புவாழ் தமிழர்களின் வாக்கு வங்கிகளை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படும் ஒரு ‘தனிநபர்’ கட்சியாகும். இவர் பாராளுமன்ற கதிரையை தாம் அலங்கரிப்பதற்காக தமிழ் மக்களின் ‘மனித உரிமை’ களைப்பற்றி பேசுபவர் போல் பாசாங்கு செய்பவர். இவர் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்ட குமார் பொன்னம்பலம் போலவே கொழும்பு மைய அரசியல் நடிகன்.

முஸ்லீம் மக்களின் தலைவர் அஷ்ரப் இற்கு பிறகு முஸ்லீம் காங்கிரசை தலைமை தாங்க வந்தவர் ரவூப் ஹக்கீம். பிழையான தலைமைத்துவ செயற்பாட்டினால் இன்று முஸ்லீம் மக்கள் மத்தியில் உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆனது போல ஆகிக் கொண்டிருப்பவர். முக்கியமாக பிரபா – ரணில் ஒப்பந்த கால கட்டத்தில் புலிகளை சந்தித்து புலிகளின் முஸ்லீம் மக்கள் மீதான அனைத்து செயற்பாட்டிற்கும் பாவமன்னிப்பு வழங்கி முஸ்லிம் மக்கள் மீது புலிகள் கட்டவிழ்தது விட்ட கொலைகளையம் கொடூரங்களையும் சரியென ஏற்றுக் கொண்டவர். இதன் மூலம் முஸ்லீம் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்களையெல்லாம் கேவலப்படுத்தியவர். இவரின் கட்சி முஸ்லிம் மக்களின் உரிமைகள் பற்றி அவ்வப்போது ஒப்புக்கு கூக்குரல் போட்டாலும் எந்தவொரு உருப்படியான அரசியல் கோரிக்கையும் கிடையாது. கட்சித் தலைவர் பதவியையும் பாராளுமன்ற பதவியையும் தவிர இவருக்கு வேறெந்த அரசியல் இலக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியில் தொங்குவதைத் தவிர இவருக்கு வேறு அரசியல் மார்க்கம் இல்லை. அதனால் அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை எப்படியாவது ஆட்சிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற கனவில் இவர் அடாத பாடுபடுகிறார்.

மேற்குறிப்பிட்ட மூன்று கட்சியினரும் எந்த காலத்திலும் சிறுபான்மை மக்களின் நலன்களின் அடிப்படையில் அவர்களின் பிரதிநிதிகளாக செயற்பட்வர்கள் அல்ல. புலிகள் செய்த அதே தவறுகளை துப்பாக்கி ஏந்தாது செய்தவர்கள்தான் இவர்கள். இன்று புத்தளத்திலும், வவுனியாவிலும் அகதிகளாக உள்ள முஸ்லீம், தமிழ் மக்களின் அகதி வாழ்விற்கு புலிகளுக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அவ்வளவு பங்கு இவர்களுக்கும் உண்டு. மனிதக் கேடயங்களாக மக்கள் புலிகளால் சிறைப்பிடிகப்பட்டிருப்பதை எந்த காலத்திலும் தவறு என்று கண்டிக்காதவர்கள். புலிகளால் சாய்த்துச் செல்லப்பட்டு புலிகளாலும் இலங்கை இராணுவத்தினாலும் இறுதி யுத்தத்தில் பலி வாங்கப்பட்ட பல ஆயிரம் மக்களின் மரணங்களுக்கு இவர்களும் ஒரு பிரதான பங்குதாரர்கள்.

இம் மூவரின் முன்னெடுப்புக்களால் தற்போது உருவாக்கப்பட்டு வரும் சிறுபான்மை இனங்களின் கட்சிகளுக்கிடையேயான ஐக்கிய முன்னணி தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அமைக்கப்படுகின்றது என்றால் அது நம்பக் கூடிய ஒன்றா? மேலும் இந்த மூன்று கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நல்ல உறவிலும் கள்ள உறவிலும் உள்ளவர்கள். சிறுபான்மை இனங்களின் கட்சிகளை தம்மோடு வளைத்து போட ஐக்கிய தேசியக் கட்சினால் அனுப்பப்பட்ட முகவர்கள் என்றே இவர்களைப் பார்க்க வேண்டும்.

மேற்கூறிய மூன்று கட்சிகளினதும் உற்ற நண்பனான ஐதேக இலங்கை வரலாற்றில் எப்போதும் தமிழ் மக்களினது மட்டுமில்லாது சாதாரணமான சிங்கள மக்களினதும்; விரோதமாக செயற்பட்டு வந்திருக்கிற கட்சியே. ஏகாதிபத்திய நலன்களின் நிலைப்பாட்டில் நாட்டை அடகு வைத்த கட்சிதானே ஐதேக!. தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு அத்தனை அடித்தளங்களையும் இட்டது ஐதேக என்றால் அது மிகையாகாது. தமிழ் மக்களின் ‘நண்பன்’ என்ற வேடம் போட்டு ‘போர் என்றால் போர்! சமாதானம் என்றால் சமாதானம்’ என்று போர்க்கொடி ஏற்றிய கட்சிதானே ஐதேக.

ஜீஜீ பொன்னம்பலத்தின் கோரிக்கையையும் ஏற்காமல் செல்வநாயகம் அவர்களின் கொள்கையையும் ஏற்காமல் இனமுரண்பாட்டை வளர்த்தவர்களே ஐதேக. பத்து லட்சம் மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமைகளைப்; பறித்து அரசியல் அனாதைகள் ஆக்கியது, தமிழர்களின் இடங்களில் சிங்களக் குடியேற்றங்களை நடத்தியது, பண்டா செல்வா ஒப்பந்தத்தை நடைமுறைத்த விடாமல் பண்ணியது எல்லாமே ஐதேக தானே. தமிழ்மக்களுக்கு அநியாயங்கள் செய்ததோடு நியாயம் கிடைக்க முடியாமல் செய்ததுதுவும் ஐதேகவே. இதனை இலங்கையின் வரலாற்றை புரட்டிப்பார்ப்பவர்கள் அறிந்து கொள்ள முடியும்.

தனிச் சிங்களமே அரசமொழி என ஆக்கியது பண்டாரநாயக்காவே, எனினும் அதற்கான அரசியல் நிலைமைகளை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது ஐதேகவே. 1944 இலேயெ ஜேஆர் சிங்களம் மட்டுமே அரசமொழி என ஆக்க முனைந்ததை வரலாறு மறக்காது. 1956ல் அதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது அதற்கு ஆதரவாக இதே ஐக்கிய தேசிய கட்சியும் வாக்களித்தது. பண்டா செல்வா ஒப்பந்தத்தை இல்லாமல் செய்ய கண்டியாத்திரை போன ஜேஆர். பல்கலைக்கழக அனுமதியில் உள்ள பாகுபாட்டை நீக்குகின்றேன் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியற் தீர்வை வழங்குவேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு பின்னர் 1977, 1981, 1982, 1983 என தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைக்கான கலவரங்களை நடாத்தியவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்களே.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத்திட்டத்தை கொண்டு வந்தது போல் காட்டிக்கொண்டு தமிழ் மக்களுக்கும் இந்தியாவிற்கும் இடையேயான நல்ல உறவை இந்தியப்படையுடன் மோத வைப்பதன் மூலம் இல்லாமல் செய்யும் தந்திர வேலையை நிறைவேற்றிய மேதாவிகளும் ஐதேககாரர்களே. ஜேஆர். இன் இச் சூழ்ச்சிக்கு தமிழர் தரப்பில் இருந்து செயல் வடிவம் கொடுத்தது புலிகளே என்பதுவும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதன் பின்பு வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையை இல்லாது ஒழித்தல் என்ற பிரேமதாசாவின் வேலைத்திட்டத்தை புலிகள் பிரேமதாசாவுடன் இணைந்து செய்து முடித்தனர்.

இலங்கை அரசுத் தலைவர்களிடையே இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒற்றையாட்சி முறையை நீக்கி கூட்டாட்சி அடிப்படையில் ஒரு நியாயமான தீர்வுத்திட்டத்தை வரைந்து அதனை பாராளுமன்றத்தின் ஊடாக அமுல்படுத்த முனைந்த சந்திரிகா அம்மையாரின் அரசியல் முயற்சிகளைத் தோற்கடிப்பதில் ரணில் விக்கரமசிங்காவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருப்பவர்களும் கூட்டமைத்து செயற்பட்டவர்கள் தானே.

தற்போது அமைக்க முயலும் ஐக்கிய முன்னணி சாராம்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தொண்டு செய்து சாமரம் வீசும் ஐக்கிய முன்னணிக்கான முஸ்தீபுக்களே. பலவீனப்பட்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ‘தமிழ் மக்களின் நண்பன்’ என்ற பழைய குருடி கதவைத் திறவடி என்றவாறு வெளிக்கிட்டிருக்கும் செயல்பாட்டின் ஒரு வடிவமாகவே தெரிகின்றது. இது மறு புறத்தில் சிறுபான்மை மக்களின் கட்சிகளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எதிரானதாக திருப்பிவிடும் ஒரு குள்ள நரி வேலையே வெறொன்றுமல்ல. இந்தியாவும் மற்றும் மேலைத்தேய நாடுகளும் மகிந்த அரசின் மூலமாக ஒரு நியாயமான அரசியல் தீர்வைக் கொண்டுவர மேற்கொள்ளும் முயற்சிகள் ஒரு பலாபலனையும் தராமல் இன்னுமொரு பத்தாண்டுகளுக்குத் தள்ளிவிடும் ஒன்றாகவே இந்த ஐக்கிய தேசியக் கட்சி சார்பான வேலைகளின் விளைவு அமையும்.

இச்சூழ்ச்சிகளில் சிக்கிவிடக் கூடாது என்ற ஆதங்கத்தை முன்கூட்டியே வெளிபடுத்தும் நோக்கமே இக்கட்டுரையை வரைந்ததன் முக்கிய காரணம். திம்பு பேச்சு வார்த்தை காலத்தில் ஐக்கிய முன்னணி அமைத்திருந்த விடுதலை அமைப்புக்கள், ஐக்கிய முன்னணிக்கு வெளியே இருந்த விடுதலை அமைப்பு(கள்), மிதவாத தமிழ் கட்சிகள் ஆகியவற்றிற்கிடையே ஏற்பட்ட எழுதப்படாத ஆனால் இறுக்கமான ஐக்கிய முன்னணி பற்றிய அனுபவங்கள் எமக்கு உண்டு. அதனை நாம் பாடங்களாகக் கொள்ளலாம் ஐக்கிய முன்னணிகளை அமைக்க முற்படும் போது. இவ் ஏழுதப்படாத ஐக்கிய முன்னணியின் பலமும் அதனால் அரசியல் தீர்வுத்திட்ட பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட் 4 அம்சக் கோரிக்ககைகளும் எமக்கு நல்தொரு அனுபவப்பாடங்கள்.

அப்போது தமிழ் மக்கள் மிகவும் அரசியற் பலமுடையவர்களாக இருந்த கால கட்டம். இவற்றை நல்லபாடமாக கொண்டு தமிழ்க் கட்சிகள் செயற்படுவார்கள் என நம்புகின்றோம். தவறின் கடந்த காலங்களில் தமிழ் காங்கிரஸில் இருந்து ஆரம்பித்து தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்ட அதே தவறை மீண்டும் விட்டதாகவே அமைந்து விடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மனோ கணேசன். ரவூப் ஹக்கீம் போன்றவர்களின் மாய வலையில் விழாமல் இருப்பதே தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான முன் நிபந்தனையாகும்.

ஆயுத அச்சுறுத்தல் அற்ற நிலைமைகளை தமிழ் பகுதியில் மட்டும் அல்ல சிங்களப் பகுதியில் கூட ஏற்படக் காரணமானவர்கள் இன்றை அரச பீடத்தில் உள்ளவர்களே. பாதகாப்பு தொடர்பாக ஜனநாயகம் அம்சங்கள் தொடர்பாக இன்னமும் சில் பிரச்சினைகள் இருப்பினும் இன்று நாம் அனுபவிக்கும் குறைந்த பட்ச ‘ஜனநாயகத்தை’ ஏற்படுத்துவதில் இன்றைய அரசிற்கு பெரும் பங்குண்டு. மேலும் மேலைத் தேய நாடுகளின் மிரட்டல்களுக்கு அடிபணியாது, இந்தியா சீனா, ரஷ்யா, வியட்நாம், ஈரான் போன்ற நாடுகளுடன் ஒர் நல்லுறவை பேணும் நாடாகவும் தனது வெளிநாட்டுக் கொள்கைகளை ஏற்படுத்திவருகின்றது. இது அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு உறுத்துவதாக அமைவதே ‘மனித உரிமை’, ‘போர் குற்றம்’ என்ற விடயங்களை தூக்கிப்பிடித்து தமது ‘நியாயவாதி’ ‘நீதிபதி’ வேலைகளை செய்ய முனையும் செயற்பாடுகள் ஆகும். இதன் அர்த்தம் இலங்கை அரசின் பக்கம் தவறுகள் ஏதும் இல்லை என்பதல்ல. மாறாக ஈராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் என அமெரிக்க புரிந்த வந்த, வருகின்ற ‘மனித நேய’ ஆகாயமார்க்க பிரச்சாரத்தை (யுசை ஊயஅpயபைn) செய்யும் அமெரிக்காவிற்கு எந்த அருகதையும் இல்லை மனித உரிமைகள் பற்றி பேசுவதற்கு. இன்றும், இன்னும் உலகத்தின் பொலிஸ்காரனாக செயற்பட விரும்பும் செயற்பாடுகளின் வெளிப்பாடுகளே இவைகளாகும்.

மஹிந்த சிந்தனையானது இலங்கையில் சிறுபான்மை தேசிய இனங்களுக்கென கட்சிகள் தேவையில்லை என்ற மறைமுக செயற்பாட்டை கொண்டிருக்கின்றது என்பதும் உண்மையே. சிறுபான்மை மக்களின் நலன்களை உறுதிப்படுத்தும் வரை சிறுபான்மை மக்களிடையே கட்சிகளின் பிரசன்னம் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல தேவையானதும் கூட. இதனை மஹிந்த அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் அமைக்கும் ஐக்கிய முன்னணி அரசுக்கு எதிரான ஐக்கிய முன்னணி என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதில் எந்த பலனுமில்லை.

இவ்விடயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஐக்கிய முன்னணியானது சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பிரநிதித்துவப்படுத்தி; ஒருமித்த கருத்தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் அமைக்கப்படுகின்றது என்ற விடயமே மேலோங்கி இருக்க வேண்டும். இச் செய்தியையே சர்வ தேசங்களுக்கும் சிறப்பாக இந்தியாவிற்கும் இவ் ஐக்கிய முன்னணியின் செய்திகளும் வேலைத்திட்டங்களும் தந்திதோபாயங்களும் எடுத்தியம்பி நிற்க வேண்டும்;. மாறாக அரசை வீழ்த்தும் ஐதேகவினால் உருவாக்கப்படும் ஒரு ஐக்கிய முன்னணி என்ற செயற்பாடு எல்லாவகையிலும் ஐக்கிய முன்னணிக்கான தேவையினை சிதைத்துவிடும் ஒன்றாகவெ அமையும். ஐக்கிய தேசியக் கட்சி தனது அரசியல் லாபங்களுக்காக தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையைப் பயன்படுத்தும் ஒரு நிகழ்வாக இது அமைந்து விடக்கூடாது.

தமிழ் மக்களின் இன்றைய நிலைமைக்கு சிறீ லங்கா சுதந்திரக்கட்சிக்கும் சமபங்குண்டு. வடக்கில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லீம் மக்களை பாதுகாக்க முடியாமல் போனதற்கு இலங்கை அரசும் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும். இலங்கையில் வாழ்ந்து வருகின்ற சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்களைவிட உரிமைகளில் இரண்டாம் பட்சமாக நடத்தப்பட்டு வந்தனர் என்பது உண்மையே. தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக போராடுவதற்கு அவசியமான சகல தார்மீக உரிமைகளை வழங்கிய அனைத்த நிலைமைகளும் இலங்கையில் இருந்தன என்பதுவும் உண்மையே. இன்னும் இருக்கின்றன என்பது இப்போதும் உண்மையே. சாத்வீகப் போராட்டங்கள் சரிவராது, ஆயுதம் ஏந்திய போராடுவது தவிர்க்க முடியாது என்ற நினைப்புக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டதையும் மறுக்க முடியாது.

மாற்று இயங்கங்களை தமது துப்பாக்கியால் ஒடுக்கி தமிழ் மக்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தவர்கள் புலிகள். புலிகளின் தொடர்ச்சியான தவறான ஏகபோக, ஜனநாய மறுப்பு, பாசிச செயற்பாடுகளால் போராட்ட சக்திகள் சின்னா பின்னப்பட்டுப் போனது என்பது நாம் யாவரும் அறிந்ததே. ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு இருந்த தமிழ் தலைமைகளும் தமது நாற்காலி கனவுகளுக்காக தமிழ் மக்களுக்கு வீராவேசம் ஏற்றிவிட்டு பின்னர் தமிழ் மக்களின் உரிமைகளை விற்று பிழைத்ததும் உண்மையே. தமிழ் மக்கள் மத்தியில் மக்கள் நலன் சார்ந்த தலைவர்கள் கட்சிகள் உருவாகி பலம் பெறாதவாறு ஆவதற்கு தமிழ் பிழைப்பவாத அரசியற் சக்திகள் ஒரு பிரதான காரணம். இது தமிழ் காங்கிரஸ் இல் இருந்து ஆரம்பித்து தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு வரை பொருந்தும்.

எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி வெல்லப் போவதில்லை என்பது நிச்சயம்.. ஐக்கிய தேசியக் கட்சியால் தமிழ் மக்களுக்கு எந்தக் காலத்திலும் எந்தவொரு பலனும் கிடைக்கப் போவதில்லை. ஆறு கடக்கும் வரைக்கும் தான் அண்ணன் தம்பி பிறகு நீ யாரோ நான் யாரோ - இதுதான் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை. எதிர்வரும் இரண்டு தேர்தல்களிலும் மஹிந்த ராஜபக்சவும் பொதஜன ஐக்கிய முன்னணியும் தான் வெல்லப் போகின்றார்கள். கடந்த தேர்தலில் புலிகளின் புண்ணியத்தில் மஹிந்த தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமல் பெரும்பான்மையாக சிங்கள மக்களின் வாக்குகளாலேயே வென்றார். நாடாளுமன்றத்தில் சிங்கள இனவாதக் கட்சிகளின் பிடியிலேயே அவர் செயற்பட வேண்டி வந்தது.

மஹிந்த தமிழர்களுக்கு நியாயமான அரசியற் தீர்வைத் தரத்தயாராக இருக்கிறாரா? என்பது பலரிடமும் உள்ள கேள்வியே. ஆனால் மஹிந்த நினைத்தால் மஹிந்தவால் முடியும் என்பதுவும் அனைவருக்கும் தெரிந்த உண்மை. அப்படியொரு துணிச்சலும் திண்ணமும் உடையவர் அல்ல ரணில். ஆனால் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ சிங்கள மக்களின் வாக்குகளால் மட்டும்தான் அரசமைக்கும் நிலையேற்பட்டால் தமிழர்கள் மஹிந்தவிடம் இருந்து அரசியற் தீர்வை எதிர்பார்க்கும் தார்மீக உரிமையை இழந்து விடுவார்கள். மாறாக மஹிந்தவின் வெற்றிக்கு தமிழர்கள் வாக்குகள் கணிசமான காரணி என அமைந்தால் மஹிந்த தமிழர்களுக்கு ஒரு நியாயமான அரசியற் தீர்வை வழங்க வேண்டிய தார்மீக கட்டாயத்துக்கு உள்ளாவார் என்பதை நாம் புரிந்த கொள்ள வேண்டும்.

இன்றைய மகிந்த அரசு புலிகளை வென்ற மமதையில் தன்கருத்தை மட்டும் கருத்தில் எடுத்து ஏதாச்சாகாரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் திசைவழியில் பயணிக்க தொடங்கியுள்ளதா என்ற சந்தேகத்தில் நியாயங்களை நாம் தேடாமல் ‘நினைத்ததை முடிப்பவன்’ என்ற மகிந்தவின் ஆற்றலில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான நல்லதை நினைக்க வைக்கும் கைங்கரியங்களை சிறுபான்மை மக்களின் ஐக்கிய முன்னணி மூலம் சாதிக்க வேண்டும். தமிழ்க் கட்சிகளே ஐக்கிய முன்ணியைக் கட்டியமையுங்கள். அணைந்தோ அல்லது இணைந்தோ சென்று நல்லதை நடக்க வைக்க வேண்டும். அதற்கான பேரம் பேசும் சக்தி வலிமைகளை வளர்த்துக் கொள்ளும் வகையாக தந்திரோபாய ஐக்கிய முன்னணியை அமையுங்கள். எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை நல்ல சந்தர்ப்பங்களாக மாற்றுங்கள். நாமும் வெல்ல முடியும். நமது மக்களும் வெல்ல முடியும் என வரலாறு உங்களை பதிவு செய்யட்டும்!…
-சாகரன்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஒரு பாம்பின் வலி

ஒரு நாள் இரவு உணவு வேட்டையை முன்னிட்டு பாம்பு ஒன்று, மரத்தச்சரின் கூடத்தில் நுழைந்தது. அடர்ந்த இருட்டு. "ஏதேனும் எலி கிடைக்குமா?", என ஏங்கிய பாம்பு தச்சுக்கூடத்தைச் சுற்றி வந்தது.

மரவேலை செய்யும் தச்சர் தனது உபகரணங்களை ஓரிடத்தில் வைக்காமல் கண்டபடி போட்டிருந்தார். உளி, சுத்தியல், ரம்பம் ஆகியவை ஆங்காங்கே தரையில் கிடந்தன.

காரிருள் வேளையில் கூடத்தைச் சுற்றிய பாம்பு, ரம்பத்தின் மேலே ஊர்ந்தது. ரம்பப்பற்கள் கூர்மையாக இருந்ததால், பாம்பின் உடலில் காயமும், வலிவேதனையும் உண்டானது.

யாரோ எதிரி தன்னைத் தாக்குவதாக கற்பனை செய்துகொண்ட பாம்பு ரம்பப் பற்களை எதிரியாகப் பாவித்து, அதைக் கொத்த ஆரம்பித்தது. ஆனால் கொத்தியபோது கூரான ரம்பப்பற்கள் பாம்பின் வாயிலும் காயத்தை உண்டாக்கி மிகுந்த வலியை ஏற்படுத்தின. வாய் முழுவதும் இரத்தம் பெருகி வழிந்தது.

இது அந்தப் பாம்புக்கு மிகப்பெரிய கோபத்தை அளித்தது. மரணவலியுடன் போராடிய பாம்பு இறுதியாக பலம் கொண்ட மட்டும் ஓங்கி ஒரே கொத்தாகக் கொத்திவிடுவதென தீர்மாணித்து பலம் அனைத்தையும் திரட்டி ஒரே போடாக ரம்பத்தில் கொத்தியது.
அத்துடன் பாம்பு உயிரிழந்தது. அடுத்த நாள் தனது கூடத்தினுள் நுழைந்த தச்சருக்கு ஒரே ஆச்சரியம் - "இரத்த வெள்ளத்தில் மிதந்த பாம்பைக் கண்டு".

நீதி : அடுத்தவரைக் காயப்படுத்துபவர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்கிறார்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை நவீன பிரபாகரன் என்று கூறிய இந்த ஈரோஸ் தலைவர்(?) பிரபாகரன் யார்..?? (கட்டுரை)


மீண்டும் ஒரு நவயுக பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றார். அவர்தான் டக்ளஸ் தேவானந்தா. இவரது தலைமையிலான ஈ.பி.டி.பியினர் யாழ்ப்பாணத்தில் செய்யும் கடத்தல்கள், கொலைகள், கொள்ளைகள் கட்டுக்கடங்காதவை. அதேபோன்று புளொட் அமைப்பினர் வவுனியாவில் செய்யும் கடத்தல்கள், கொலைகளும் கட்டுக்கடங்காதவை. இந்த அமைப்புக்கள் இரண்டுமே அராஜக ஆயுதக்குழுக்களாகும். புளொட், ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்திடம் பணம் பெற்றுக்கொண்டு இயங்குபவர்களே. ஆனால் நாம் தனித்தே இயங்குபவர்கள். நாம் வெளிநாட்டில் செய்துள்ள சில முதலீடுகளால் பெறும் நிதிகள் மற்றும் சுயதொழில் மூலமும் பெறும் பணத்தினைக் கொண்டும், வெளிநாடுகளிலுள்ள எமது ஆதரவாளர்கள் அனுப்பும் பணம் என்பவற்றின் ஊடாகவுமே எமது அமைப்பினை நடத்தி வருகிறோம். இவ்வாறு ஈரோஸ் அமைப்பின் தலைவரெனக் கூறிக் கொள்ளும் பிரபா என்கிற ராஐமனோகரன் பிரபாகரன் நேற்று ஊடகமொன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். (இதேவேளை ஈரோஸ் தலைவர் அமரர் சங்கர்ராஐpன் மகனான லண்டனில் உள்ள நேசன் என்வரும் தானே ஈரோஸ் தலைவரென உரிமை கோருவது தனிக்கதை.)

மேற்படி ஈரோஸ்பிரபா என்கிற ராஐமனோகரன் பிரபாகரன் பேட்டிக்காக ஊடகங்களின் பின்னால் கேட்டலைவதொன்றும் புதிய விடயமல்ல. ஊடகங்களுக்கு உதவிகளைப் புரிவது போன்று நடித்துக் கொண்டு ஒரு கல்லில் இரு மாங்காய் அல்ல பல மாங்காய்களை அடிக்க முயலும் இவரை ஊடகங்கள் விரைவில் புரிந்து கொள்ளும். ஈரோஸ் பிரபா தனது பேட்டியில் தாம் விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லையென்பது போலவும், தமது வெட்கக்கேடான தேர்தல் தோல்விகளை இன்னுமே ஒப்புக்கொள்ள முடியாத மனநிலையிலும் இருப்பதையே அவர் வெளியிட்டுள்ள பேட்டி எடுத்துக் காட்டுகின்றது. அவர் தனது பேட்டியில் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாநகரசபையில் போடப்படாத 6ஆயிரம் வாக்குகள் ஈரோஸ் அமைப்பின் வாக்குகளே. அதனையும் புளொட் அமைப்பினரே தடுத்தனர். நாம் புலிகள் எனக் கூறியே அதனைப் புளொட் அமைப்பினர் தடுத்தார்கள். அந்த வாக்குகள் போடப்பட்டிருந்தால் நாம் வவுனியா மாநகரசபையைக் கைப்பற்றியிருப்போம். வவுனியா தமது கோட்டை எனக்கூறும் புளொட் அமைப்பு அங்கு போடப்பட்ட 22ஆயிரம் வாக்குகளில் 4ஆயிரம் வாக்குகளையே பெற்றிருந்தது. இதிலிருந்தே இவர்களது நிலைமை புரிகின்றது என்று குறிப்பிட்டுள்ளார். (வவுனியாவில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள் புளொட் அமைப்பினர் என்பதை இவர் குறிப்பிட மறந்து விட்டார்.) அத்துடன் யாழ்ப்பாணத்தில் குருநகர், பாசையூர் போன்ற பகுதிகளில் ஈ.பி.டி.பியினர் மக்களை வாக்களிக்க விடாது பகிரங்கமாகவே தடுத்தனர். இதன் காரணமாகவே யாழ். நகரிலும் ஈரோஸ் வெற்றிபெற முடியவில்லை. இதற்கு முழுக்காரணமும் ஈ.பி.டி.பியினரே. ஈ.பி.டி.பிக்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடுகள் எமக்கு எழுத்துமூலமாக ஆதாரபூர்வமாக கிடைக்கப் பெற்றுள்ளது. இதுவரையில் 242 குற்றச்சாட்டுக்கள் முழு ஆதாரங்களுடன் எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் பெரும்பான்மையான குற்றச்சாட்டுக்களாக எமக்குக் கிடைக்கப்பெற்ற கடத்தல், கப்பம்பெறுதல், கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டவரே தற்போது யாழ். மாநகரசபையின் பதில் மேயராக பொறுப்பெடுக்கவுள்ள றேகன் என்பவராவார் எனவும் பிரபா தனது பேட்டியில் கூறியுள்ளார். (ஈபிடிபி குறித்து ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்கள் இருந்தால் நீதிமன்றத்தையோ மனிதஉரிமைகள் அமைப்புக்களையோ ஏன் இதுவரை இவர் நாடவில்லை? என்பதும் எமக்குப் புரியாத புதிர் தான்.)

அத்துடன் அவர் தனக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தில் தமது வண்டவாளங்களை வெளிக்கொணர்ந்த ஊடகங்களையும் விட்டுவைக்கவில்லை. ஊடகங்கள் சிலவற்றைப் பற்றி அவர் பேட்டியளிக்கையில், அதிரடி இணையம் உள்ளிட்ட சில இணையங்கள் எமக்கெதிரான சில பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. எனினும் அவை தொடர்பில் ஊடகங்களிலோ, பொலீஸ் நிலையத்திலோ பதிவுகள் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இது மட்டுமல்ல இவர் ஊடகவியலாளரின் ஒவ்வொரு கேள்விகளுக்கும் புளொட் மற்றும் ஈ.பி.டி.பியையும் தாக்கிப் பேசுவதையே தனது பதிலில் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். (யாரைப்பற்றியாவது அன்றில் எந்தவொரு செய்திகளையும் ஊடகங்கள் வெளியிடும் போது அவை தவறென்றால் முதலில் அதனை நாகரீகமான முறையில் அவ்வூடகங்களுக்கே மறுப்புத் தெரிவிக்க வேண்டும் இரண்டாவதாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை விட்டுவிட்டு புலம்பித் திரிவது எந்தவகையில் நியாயம்??)

முன்னர் இந்த ஈரோஸ் பிரபா அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வந்த காலகட்டத்தில் தமது அமைப்பின் அலுவலகத்தில் புலி உறுப்பினர்களை மறைத்து வைத்திருந்த காரணத்தினால் இராணுவத்தினர் அந்த அலுவலகத்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியிருந்தனர். இதன்போது இவர் தனது ஒரு கையையும், தனது மகனாரையும் இழந்திருந்தார். இதனைத் தொடர்ந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சுவிஸ் அரசின் உதவியுடன் சுவிஸ் தூதரகத்தின் அனுசரணையுடன் இவர் தனது மனைவி மற்றும் ஏனைய பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு சுவிஸ்லாந்திற்கு மனிதாபிமான அடிப்படையில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டு அழைக்கப்பட்டிருந்தார்.

இவர் சுவிஸி;ல் இருந்த காலகட்டத்தில் சுவிஸ் சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஏற்பட்ட தொடர்புகளினால் ஏற்பட்ட அதீத நட்பு காரணமாக மீண்டும் ஈரோஸ் அமைப்பைக் கட்டியெழுப்புவது என்று கூறிக்கொண்டு தனது மனைவி பிள்ளைகளை சுவிஸ் சோஷியல் பணத்தில் (கூப்பனில்) அங்கேயே தங்க வைத்து விட்டு, மீண்டும் இலங்கை வந்து விட்டார்.

தற்போதுகூட இவர் சுவீசிலுள்ள வவுனியாவைச் சேர்ந்த குடும்பமொன்றின் 70வயதுக்கு மேற்பட்ட வயோதிபர் ஒருவரை மிரட்டி அவரிடம் பலவந்தமாக கையொப்பம் பெற்றுக் கொண்டு அந்தக் குடும்பத்தின் வவுனியா வீட்டைப் பலவந்தமாகப் பறித்து அந்த வீட்டில் அலுவலகம் அமைத்துள்ளார். இதுபற்றி புளொட் அமைப்புக்கு எழுத்துமூலமான முறைப்பாடும் கிடைக்கப் பெற்றிருந்ததாக கூறப்படுகின்றது. இது குறித்து சுவிஸில் உள்ள குறித்த வீட்டின் உரிமையாளர்கள் இவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இவர் மழுப்பலான பதிலையே வழங்கி வந்துள்ளார். இதன் காரணத்தினால், இவர் எப்போது சுவிஸ் வருவார், இவருக்கு “நல்லபதிலை” வழங்க வேண்டுமென்று குறித்த வயோதிபரின் உறவினர்கள் காத்திருக்கிறார்கள் என்பதும் பகிரங்கத்திற்கு வரவேண்டிய விடயமாகும்..

இலங்கைக்கு வருமுன் இவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவினைப் பெற்றுக் கொண்டு அவர்மூலம் ஏனைய தலைவர்களையும் சந்தித்து நன்மைகளைப் பெற்றுக்கொண்டு தான் சுகபோகமாக வாழலாம் என்ற மிகப்பெரும் கனவுடன், தனது மனைவியையும் பிள்ளைகளையும் சுவிஸ்லாந்தின் சோஷல் (உதவிப்) பணத்தில் வாழட்டும் என நட்டாற்றில் தவிக்க விட்டுவிட்டு, மீண்டும் இலங்கை சென்ற இவர். பெற்ற உதவிகளையும் உதவிகளைப் புரிந்த தலைவர்களையும் மறப்பதற்கு நீண்டநாட்கள் செல்லவில்லை. தனது குடும்பத்தை நட்டாற்றில் விட்ட இவர் தனது குடும்பத்தையே காப்பாற்ற முடியாத நிலையில் எப்படி நாட்டைக் காப்பாற்றப் போகிறார் என்பது புரியவில்லை.

இவர் சுவிஸில் இருந்த காலகட்டத்தில் இவரது உயிர் நண்பராக இருந்த முஸ்லிம் அன்பரொருவரின் சிறு குழந்தையைக் கடத்திச் சென்று காசு பறிக்க முயன்ற குற்றச்சாட்டு இவர்மீது சுமத்தப்பட்டு தற்போதும் பொலீஸ், நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. அதேபோன்று இவர் சுவிஸ்லாந்தின் சூரிச் பிரபல்ய சிவப்புவிளக்குப் பகுதியான லங்ஸ்ராசா என்னுமிடத்தில் அமைந்துள்ள மிகப்பிரபல்யமான இரவு விடுதியை அமைத்து செயற்பட்டு வந்தவர். பின்னர் இவருடன் அதில் இணைந்து செயற்பட்ட நண்பர் ஒருவரை ஏமாற்றி பணம் சொத்து உள்ளிட்ட அனைத்தையும் இவர் சுருட்டிக்கொண்டு இரவு விடுதியையும் மூடிவிட்டு சென்றார். இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இந்தப் பிரபா மீது நிறையவே உள்ளன.

இவர்கள் வவுனியா, செட்டிகுளம் நலன்புரி முகாமிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஆட்களை விடுவித்தமையும் ஆதாரபூர்வமாக பொலீஸ் நிலையத்தில் இருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் நிரூபணமாகியுள்ளது. அந்த ஆதாரபூர்வமான தகவல்களை பெயர் விபரங்களுடன் வெளியிடவும் தயார்நிலையில் உள்ளோம். எனினும் இதனால் பொதுமக்கள் சிலர் பாதிப்புக்கு உள்ளாக்கக் கூடாதென்பதற்காக அது தவிர்க்கப்பட்டுள்ளது. இவர் அரசுடன் சேராமலா வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டவர்? இவரது தேர்தல் பணிகளுக்கு யார் பணம் வழங்கியது? இவரை நாட்டுக்கு அழைத்தவர் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே. டக்ளஸ் தேவானந்தாவின் உதவியிலேயே நாட்டுக்கு வந்து அவரின் உதவியிலேயே தமது அமைப்பையும் பலப்படுத்திக் கொண்டு தற்போது டக்ளஸ் தேவானந்தாவையே தாக்கி வருகின்றார்..

எது எவ்வாறாயினும் ஈரோஸ் பிரபாவுடன் சேர்ந்து கூட்டுஅரசியல் நடத்தலாம் என எதிர்பார்த்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவருடைய பின்புலம் பற்றி அறிந்து கொண்ட போது இவரைக் கைநழுவ விட்டுவிட்டார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முதுகில் சவாரி செய்யச் சென்றிருந்த ஈரோஸ் பிரபா அமைச்சர் டக்ளசினால் கைவிடப்பட்ட நிலையில் புளொட் அமைப்பின் கதவுகளைத் தட்டினார். அவர்களும் கதவுகளை இறுக்கி மூடிய போது இந்திய றோவிடம் ஒட்டிக் கொண்டார். கிழக்கு மாகாணத்தில் தேர்தல்கள் இடம்பெற்ற போது இந்திய றோவின் உதவியுடன் தேர்தலில் குதித்தவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு (அரசுக்கு) எதிராக பிரச்சாரத்தை மேற்கொண்டு மட்டக்களப்பு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஆசனமொன்றைப் பெற்றுக் கொண்டார். பின்னர் கிழக்கு மாகாண தேர்தலில் பங்குகொண்ட போது குறுகியகால இடைவெளியில் இவருடைய சுயரூபத்தை அறிந்து கொண்ட மக்கள் இவரைத் தூக்கி எறிந்தனர்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அரசுடன் இணைந்து கொண்டு வவுனியா உள்ளுராட்சி மன்றம் மற்றும் யாழ் தேர்தல்களில் பங்கு கொண்டு மண்கவ்வினார். தற்போது இவர்களுக்கு மக்களிடம் உள்ள ஆதரவை அறிந்து கொண்ட அரசு இவர்களை எட்டத் துரத்தஉள்ள நிலையில் அரசு போடும் எலும்புத் துண்டுகளுக்காக ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் அவமானம் ஏற்படுத்தும் முகமாக செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இது எப்படியிருக்கு??
திரு.துரியோதனன் -யாழ்ப்பாணம்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நான் வலைப்பூ என்னும் கடலில் முழ்கி எடுத்த முத்துக்கள் .3


மனசுக்கு டானிக் : கைகளில்லை + கால்களில்லை = கவலைகள் இல்லை

“உங்களுக்கு ஒரு பையன் பொறந்திருக்கான்” என நிக்கை (Nick Vujicic) அவனுடைய தந்தையிடம் காட்டியபோது உள்ளுக்குள் குமட்டிக் கொண்டு வர, ஆஸ்பத்திரியை விட்டு வெளியே ஒடி வந்து வாந்தியெடுத்தார் தந்தை !
“இந்தாங்க உங்க பையன்” என தாயிடம் நீட்டியபோது “ஐயோ.. என் முன்னாலிருந்து கொண்டு போங்கள்…” என நான்கு மாதங்கள் அவனைத் தொடாமலேயே அழுது தீர்த்தாள் தாய்.
விஷயம் இது தான். நாளும் கிழமையும் எண்ணி எண்ணி ஆவலுடன் குழந்தையைக் கொஞ்ச காத்திருந்த அந்த பெற்றோருக்குப் பிறந்ததோ கைகளும் கால்களும் இல்லாத ஒரு குழந்தை ! இரண்டு கைகளும், இரண்டு கால்களும் இல்லாத ஒருவனால் என்ன செய்ய முடியும் பிச்சை எடுப்பதைத் தவிர ? என்று தானே நினைக்கத் தோன்றுகிறது ?
அந்தக் கவலைதான் அந்த ஆஸ்திரேலியப் பெற்றோருக்கும் இருந்தது. ஒரு சின்ன குறை இருந்தாலே சமூகத்தில் தாக்குப் பிடிப்பது மிகவும் கடினம். கைகளும் இல்லாமல், கால்களும் இல்லாமல் இல்லாமல் இவனெல்லாம் என்ன வாழ்க்கை வாழப்போகிறான் ? தொட்டதுக்கெல்லாம் யாரோ ஒருவருடைய உதவியில் தானே இவன் வாழ முடியும் என்பதே பெற்றோரின் தலையாய கவலையாய் ஆகிப் போனது.
அன்றைக்கு அவர்களிடம் போய், “கவலைப்படாதீர்கள். உங்கள் மகன் ஒரு நாள் ஓடுவான், குதிப்பான், நீச்சலடிப்பான், கால்ஃப் Nick4விளையாடுவான், புட்பால் விளையாடுவான், கடலில் ஷர்ப் செய்வான் என்றெல்லாம் சொல்லியிருந்தால்” அன்றைக்கே ஒரு கொலை விழுந்தாலும் விழுந்திருக்கும். ஆனால் எல்லாமே ஒரு பரபரப்பான சினிமா போல நிஜமாகியிருக்கிறது இன்று.
தற்போது தனது இருபத்து ஆறாவது வயதில் இருக்கும் நிக், இன்றைக்கு மேலே சொன்ன எல்லாவற்றையும் செய்கிறார். கூடவே கோடானு கோடி மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் சின்னமாகவும் உருவெடுத்திருக்கிறார்.
இப்போது மிகவும் உற்சாகமாய் இருக்கும் நிக் கடந்து வந்த ஆரம்ப வாழ்க்கை ரொம்பவே கொடுமையானது. கைகளும் கால்களும் இல்லையென்றாலும் பெற்றோர் அவனை பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டார்கள். பள்ளிக்கூடத்துக்குச் சென்றால் பிள்ளைகள் நிக்கை நெருங்கி வரவே பயப்பட்டார்கள். ஏதோ ஏலியனைப் பார்ப்பது போலத் தான் நிக்கை பார்த்தார்கள்.
எல்லாரையும் போல சாதாரணமாய் வாழ முடியாத ஏக்கம் நிக்கிற்குள் டன் கணக்காய் கனத்தது. மற்றவர்களின் கிண்டலும், கேலியும், அருவருப்புப் பார்வையும் நிக்கை நிலைகுலைய வைத்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை. டீன் ஏஜ் வயது வரை நிக் செய்த செபம் என்ன தெரியுமா ? “கடவுளே தலைமுடி வளர்வது போல எனக்கு கைகளும் கால்களும் வளர வேண்டுமே” என்பது தான்.
EFG6462
அப்போதெல்லாம் தொட்டதுக்கெல்லாம் தற்கொலைச் சிந்தனைகள் வந்து கொண்டே இருந்தன. எப்படியாவது செத்துப் போகவேண்டும் என்று நினைத்தாலும் அதையும் தனியே செய்ய முடியாத நிலை. “கொஞ்சம் என்னைக் கொல்வீர்களா பிளீஸ்” என யாரிடமாவது கெஞ்ச வேண்டிய நிலையே நிக்கிற்கு.
அப்படியும் ஒருமுறை பாத்டப்பில் தண்ணீரை நிரப்பி மூழ்கிச் சாக முனைத்திருக்கிறார். இன்னொரு கழுத்து உடையட்டும் செத்து விடலாம் என டேபிளில் இருந்து தலைகீழாய் குதித்திருக்கிறார். ! என்ன செய்ய? வாழவேண்டும் எனும் விதி அவருக்கு. எல்லா தற்கொலை முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.
ஆரம்ப காலத்தில் நிக்கின் உருவத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் பின்னர் நிக்கிற்கு தன்னம்பிக்கையை ஊட்டத் துவங்கினர். 18 மாதமாக இருந்தபோதே நீச்சல் பழக்கத் துவக்கிய தந்தை, ஆறு வயதாக இருக்கும் போது கம்ப்யூட்டர் கற்றுக் கொடுத்தார். தாய் பிளாஸ்டிக்கில் ஒரு வளையத்தைச் செய்து அதில் பென்சிலை மாட்டி எழுத கற்றுக் கொடுத்தார். இவையெல்லாம் தான் நிக்கிற்கு நிமிர்ந்து நிற்கும் தைரியத்தைக் கொடுத்தது.
Nick1
நிக்கின் இடது கால் இருக்க வேண்டிய இடத்தில் ஆறாவது விரல் போல நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு பாகம் தான் அவனுடைய வரப்பிரசாதம். அதுதான் அவனுடைய கை, கால், துடுப்பு, எல்லாமே !. நடப்பது, எழுதுவது, நீந்துவது, விளையாடுவது என சர்வமும் அதன் வழியாகவே. இது மட்டும் இல்லாமலிருந்தால் நான் என்ன செய்திருப்பேனோ தெரியாது என சொல்லி சிரிக்கிறார் நிக்.
தனது பதின்மூன்றாவது வயதில் ஊனமுற்ற ஒருவரைப் பற்றிய வரலாறு ஒன்றை நிக் படித்தார். அதுதான் அவருடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. அந்த ஊனமுற்ற மனிதர் கழுத்தையும், நாடியையும் பயன்படுத்தி கால்ப் விளையாடியதைப் படித்தபோது நிக்கிற்குள் ஒரு மின்னல் அடித்தது.
Nick3
“அடடா… தேவையில்லாமல் தற்கொலை செய்யப் பார்த்தேனே” என தன்னையே நொந்து கொண்டவர், “நல்ல வேளை இதுவரை சாகவில்லை” என நினைத்துக் கொண்டு வாழ்க்கையை புதிய உத்வேகத்துடன் எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். அதுவரை கண்ணாடியைப் பார்க்கும் போது கைகளும், கால்களும் இல்லாத சதுர உடம்பு மட்டுமே தெரிந்த நிக்கிற்கு அதன் பின் தான் தனது அழகிய கண்கள் தெரிந்தன என சிலிர்ப்பூட்டும் நம்பிக்கை விதைக்கிறார்.
அதன் பிறகு கடவுளைப் பழிப்பது, சாக நினைப்பது, முனகுவது, அழுவது, கவலை கொள்வது என அனைத்து வேண்டாத விஷயங்களையும் மூட்டை கட்டி தூர எறிந்து விட்டு உற்சாகமாகிவிட்டார் நிக். பிறருக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சுகளையும் மீட்டிங்களையும் நடத்தத் துவங்கிவிட்டார்.
அப்படி ஆரம்பித்த அவரது தெம்பூட்டும் பணி, 24 நாடுகளுக்குப் பயணம் செய்து இலட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தில் உரையாற்றுமளவுக்கு பரந்து விரிந்திருப்பது வியக்க வைக்கிறது ! தற்போது ஊனமுற்றவர்களுக்காக இயங்கும் “லைஃப் வித்தவுட் லிம்ப்ஸ்” எனும் நிறுவனத்தின் இயக்குனராகவும் இருக்கிறார் அவர்.
Nick5
ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்னில் பிறந்த நிக் இப்போது வசிப்பது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில். சோர்வுற்றும், சோகமுற்றும் இருப்பவர்களுக்கு இப்போது உற்சாக டானிக் இவர் தான், இவருடைய பேச்சுகள் தான்.
ஐயோ அது இல்லையே, இது இல்லையே என புலம்பும் மக்கள் எதுவும் இல்லாமல் எல்லாம் இருப்பதை விட மகிழ்ச்சியாய் இருக்கும் நிக்கைப் பார்த்ததும் விளக்கைப் போட்ட இருட்டு அறைபோல சட்டென தெளிவாகி விடுகின்றனராம்.
குறிப்பாக இளம் வயதினரின் தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கைக் குறைவு, மன அழுத்தம் இவையெல்லாம் இவரைப் பார்த்ததும் பனிக்கட்டியில் வரைந்த ஓவியமாய் ஈரமாய் ஒழுகி மறைந்துவிடுகிறதாம்.
“கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை” எனச் சிரிக்கும் நிக் உண்மையிலேயே இந்த நூற்றாண்டின் வியப்புக் குறியீடாய் நிமிர்ந்து நிற்கிறார்.
Nick7


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates