jkr
แสดงบทความที่มีป้ายกำกับ கிழக்கு மாகாண முதலமைச்சர் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ கிழக்கு மாகாண முதலமைச்சர் แสดงบทความทั้งหมด

சமுகத்தில் முதன்மை பெறுவது கல்வியே : கி.மா. முதலமைச்சர்


ஒரு சமுகத்தின் முதுகெலும்பாக அரசியல் மாத்திரமல்ல சிறந்த கல்வியே முதன்மை பெறுகின்றது. ஒவ்வொருவரும் ஓர் இலக்கைக் குறி வைத்துப் பயணித்து, அதனை அடையும்வரை ஓயாது உழைக்கவேண்டும்" என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மடடக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை அதிபர் பொன் சிவகுரு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்,

"மாணவர்களைப் பொறுத்த வரை ஒவ்வொருவரும் ஓர் இலக்கை நிர்ணயித்துக் கல்வியைத் தொடரவேண்டும். அவ் இலக்கினை அடையும்வரை பயணம் தொடர வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைவதை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படுகின்றார்கள். இந்நிலை மாற வேண்டும்.

பரீட்சையில் சித்தியடைவது மட்டுமல்ல பாடசாலையின் இணைப் பாடவிதான செயற்பாடுகளிலும் புறக்கிருத்திய செயற்பாடுகளிலும் ஈடுபட்டு தமது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.

கிழக்கு மாகாணத்திலே ஏராளமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறுவதில் பின்னடைந்துள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறுகின்ற மாணவர்கள் தவிர்ந்த ஏனைய மாணவர்கள் தங்களது எதிர்காலத் திட்டங்களை எவ்வாறு அமைத்து கொள்ளவேண்டும் என்ற முடிவினை தாங்கள் தெரிவு செய்த பாடங்கள் ஊடாகவே ஏற்படுத்தி கொள்வேண்டும்.

அத்தோடு மாணவர்கள் ஒவ்வொருவரும் எதிர்காலத்திலும் சரி நிகழ்காலத்திலும் சரி சமூக சிந்தனை உடையவர்களாகவும் ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிக்கக் கூடியவர்களாகவும் சமூகத்தில் உயர்ந்த சிந்தனையாளர்களாகவும் திகழ வேண்டும். இதுவே நல்லதொரு மாணாக்கனின் கடமையாக இருக்க வேண்டும்" என்றார்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா , கல்குடா கல்விவலய பிரதி கல்விப்பணிப்பாளர் எஸ்.ஞானராஜா, கோட்ட கல்வி அதிகாரிகளான எஸ்.தங்கராஜா,எ.சுகுமாரன், எஸ்.குணலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் சகல துறைகளிலும் திறமையினை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளும், தங்களது கற்பித்தல் செயற்பாடுகளைச் செவ்வனே செய்த ஆசிரியர்களும் பரிசில்களும் கேடயங்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மாணவர்கள் கல்வியில் மாத்திரமின்றி இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் அதிக அக்கறை காட்ட வேண்டும்- கிழக்கு மாகாண முதலமைச்சர்


கல்குடா வலயத்தின் மட்/வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற செவ்வாழை சஞ்சிகை வெளியீட்டில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாடசாலை அதிபர் கே.தவராஜா தலைமையில் நடைபெற்ற மேற்படி சஞ்சிகை வெளியீட்டில் தொடர்ந்து கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மாணவர்கள் அனைவருக்கும் நேர முகாமைத்துவம் மிகவும் முக்கியமான ஒன்றாகும் பாடசாலைக் காலங்களில் இருந்து நேர முகாமைத்துவத்தினை உணர்ந்து செயற்படுவதன் ஊடாக எதிர்காலத்தில் தொழில்வாய்ப்புக்கள் பெற்று தொழிலாற்றுகின்ற இடங்களிலும் நேர முகாமைத்துவத்தின் பங்கு பாரியளவில் செல்வாக்கு செலத்தும். பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்கள் அனைவருமே எதிர்காலத்தில் சுவீற்சமிக்க எமது நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்புக்குரியவர்கள் பாடசாலைப் பருவத்தில் நாம் பழகுகின்ற ஒழுக்க விழுமியங்கள் எமது எதிர்கால வாழ்விற்கு வழிகோலாக அமைகின்றது என குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், கடந்த காலங்களில் எமது மாணவ சமுதாயம் பல்வேறு இடர்களை சந்தித்து இருக்கின்றது. ஆனால் இன்று நாட்டின் எப்பகுதியிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மாணவர்கள் எதுவித தங்கு தடைகளுமின்றி தாங்கள் விரும்பிய வழியில் கல்வி கற்பதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டிருக்கின்றது. பாடசாலையில் கல்வி பயில்கின்றபோது பரீட்சையில் சித்தியடைவது மட்டும் எமது இலக்கல்ல, அதனோடு இணைந்து இணைப்பாடவிதானங்கள் எனக் குறிப்பிடப்படுகின்ற விளையாட்டு, கவிதை. கட்டுரை, நாடகம், சிறுகதை, தலைமைத்துவப்பயிற்சி விவாதங்கள் போன்ற பல்வேறு துறைகளிலும் சிறந்தவர்களாக விளங்க வேண்டும், பாடசாலையைப் பொறுத்தவரையில் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோரகள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், நலன் விரும்பிகள், பழைய மாணவர்கள் என ஓர் குடும்பம்போல் செயற்படுகின்றது. இதில் கற்பிக்கின்ற ஆசிரியர்களின் செயற்பாடானது ஒவ்வொரு மாணவனையும் பரீட்சைக்கு தயார்படுத்துவதோடு அவர்கள் தமது சொந்த வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களையும் சமுகத்தில் மதிக்கப்படுபவர்களாகவும் மாற்றப்படவேண்டிய பாரிய பொறுப்பு உடையவர்களாக விளங்குகின்றார்கள். பாடசாலை கல்வி தவிர்ந்த ஏனைய இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவதற்கு ஆசிரியர்களே வழிகாட்டியாக இருக்கவேண்டும். இவ்வாறு இருக்கின்ற பட்சத்திலேயே ஒவ்வொரு மாணவனினதும் இயல்பான ஆக்கப்படைப்புக்களை வெளிக் கொணர முடியும். இவ்வாறான ஆக்கப்படைப்புக்களின் தொகுப்புக்களே சஞ்சிகையாக ஒவ்வொரு பாடசாலையிலும் வருடாந்தம் வெளியிடப்படவேண்டும். இதனூடாக மாணவர்களது தனிப்பட்ட திறமை வெளிக்கொணரப்படுகின்றது. இவ்வாறான ஓர் வெளிப்படாகவே இன்று இந்த வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் செவ்வாழை சஞ்சிகையாகும். இச் சஞ்சிகை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதையிட்டு நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன் எனவும் குறிப்பிட்டார். இவ்விழாவில் மாணவர்களின் வரவேற்பு நடனம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம், எனப்பல கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது, இச்சஞ்சிகை வெளியீட்டு விழாவில் கௌரவ அதிதியாக கல்குடா வலையக் கல்விப்பணிப்பாளர் திரமதி சுபாஸ் சக்கரவர்த்தி அவர்களும் விசேட அதிதிகளாக கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு எஸ் .தங்கராஜா, உதவிக்கல்விப்பணிப்பாளர் ஞானராஜா, கோரளைப்பற்று கோட்டக்கல்விப்பணிப்பாளர் சின்னத்தம்பி அவர்களும் பாடசாலை அதிபர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வின்போது முதலமைச்சர் 5ம் தர புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கிழக்கு மக்களின் ஜனநாயகக் குரலை நசுக்கும் ஒரு செயலே ரகுவின் படுகொலை: முதலமைச்சர்


கிழக்கு மாகாண மக்களின் ஜனநாயக குரலை நசுக்க நினைத்தவர்களின் செயலே தமது கட்சியின் முன்னாள் தலைவரான ரகு எனப்படும் குமாரசாமி நந்தகோபனின் படுகொலை" என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறினார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபனின் முதலாவது ஆண்டு நினைவு நாள் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் கட்சியின் அமைப்பாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

"கிழக்கு மாகாண மக்கள் அரசியலில் மட்டுமல்ல, சகல துறைகளிலும் முன்னணி வகிக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் செயல்பட்டவர் எமது மறைந்த தலைவர் குமாரசாமி நந்தகோபன் என்பதை எவரும் மறந்து விட முடியாது.

எமது மக்களின் அரசியல் தனித்துவத்தை தேசிய மட்டத்தில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் எடுத்துக் காட்ட வேண்டும் என்பதற்காக அவரது தூர நோக்கு சிந்தனையில் உருவானதே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு ஆகும்.

அந்த சிந்தனைவாதி, தீர்க்கத்தரிசி, கிழக்கு மக்களின் ஜனநாயகத்தை விரும்பாதவர்களினால் படுகொலை செய்யப்பட்டார்" என்று குறிப்பிட்ட அவர், "அன்னார் கண்ட லட்சியத்தினை நிறைவேற்ற சகலரும் அர்ப்பணிப்புடனும் ஒற்றுமையுடனும் செயல்பட வேண்டும்"என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் சமூக,சமய மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தலைவர் பிரபாகரன் தடாகம் கட்டினார் தம்பி பிள்ளையான் மாளிகை வாங்கினார் எல்லாம் மக்கள் பணம் தான்!!!

அன்று “தன்னைத்தானே திருத்திக்கொள் சமூகம் தானாகவே திருந்தும்“ என்று விபுலாநந்தர் கூறிய விடையம் இன்றைய கிழக்கு அரசியல் வாதிகளுக்கு சுறையாடுவதை தான் உணர்தியதோ தெரியவில்லை!!!. மன்னர் ஆட்சிகாலத்தில் மக்கள் மானத்தோடு வாழ்ந்தார்கள்! ஐனநாயகம் பிறந்த காலத்தில் மக்கள் நடைபிணமாக வாழ்கின்றார்கள்!! பணம் என்னும் மோகத்தில் பாதி தமிழர்களின் பிராணத்தை குடித்த பிசாசுகள் என்று அழிகின்றதோ அன்று தான் தமிழன் வாழ்வான் என்பது தான் இலங்கை தமிழர்களின் துர்பாக்கியம்!!! கிழக்கு மகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பல விதத்தில் பணத்தை சூறையாடி கொழும்பு பத்திரமுல்லை பிரதேசத்தில் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியில் வீடு ஒன்று வேண்டியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் பலருக்கு சச்சையை எழுப்பியுள்ளது. இந்த மாளிகை சந்திரகாந்தன் என்ற பெயருக்கு வேண்டப் பட்டுள்ளதாக வீட்டினை விற்பனைக்காக ஏற்ப்பாடு செய்த தரகர்; மூலம் வெளிவந்த செய்தியை அடுத்தே இந்த விசனம் எழுந்துள்ளது. இத்தனை வசதிகளும் அதிகாரமும் உள்ள ஒரு முதல்லமைச்சர் எதற்கு தன்மாவட்டத்தை விட்டு வேறு ஒரு மாவட்டத்தில் மாளிகை வாங்கவேண்டும் என்ற கேள்வியும் எழுகின்றது. கடந்த காலத்தில் நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடித்த பிரபாகரன் கட்டிய தடாகம் பற்றி பல ஊடகங்களில் வந்த பொழுது அவருக்கு ஆதரவாக இருந்த மக்கள் மற்றும் ஊடகங்கள் அதனை பிரசுரிக்கத் தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் இன்று விடுதலை என்ற பெயரில் தொடங்கிய அத்தனை கூட்டங்களும் கொழும்பில் மற்றும் பல பிரமுகர்களை வைத்து அல்லது அடித்த பணத்தில் பல பிரமுகர்களை உருவாக்கி வியாபாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இது மன வருத்தற்குரிய விடையம் என்பதை பலர் சுட்டிக்காட்டினார்கள் என்பதை நாம் மறந்து விடமுடியாது. இன்று பட்டனியும் இன்னல்களும் நிறைந்த நாடாக இலங்கை இருக்கும் பொழுது சொத்துக்கள் சேர்க்கும் எண்ணத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இயங்கும் அத்தனை நிர்வாகமும் நிர்வானம் ஆக்கப்படவேண்டும். என்பது மக்களின் விருப்பம். இந்த நிலையில் பிள்ளையான் உண்மையில் இது வாங்கியிருந்தால் அதற்கான வருமானத்தையும் அதற்கு குரிய விடைகளையும் மக்கள் மத்தியில் சமர்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அப்படிசமர்பிக்காத பட்சத்தில் கருணாவின் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்தக் கொள்ளும் பொழுது பல ஊடகங்கள் மாற்றுக் கருத்தக் கொண்ட கயவருக்கும் சார்பாகத்தான் எழுதுவர்கள் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை என்று மக்கள் தெரிவித்துவருகின்றார்கள்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு முழு ஆதரவையும் வழங்க தீர்மானம்:கி.மா.முதலமைச்சர்


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது தமது கட்சியாகிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு முழு ஆதரவையும் வழங்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமாகிய சிவனேசத்துரை சந்திரகாந்தன் கூறுகின்றார்.

இருப்பினும் நாடாளுமன்ற தேர்தலின் போது கிழக்கு மாகாண மக்களின் நலனை கருத்திற்கொண்டு வேறு விதமான முடிவு எடுக்கப்படும் என்றும் நேற்று மாலை பேத்தாழைக் கிராமத்தில் முன்பள்ளி பாடசாலைக்கான அடிக் கல்லை நாட்டி வைத்து உரையாற்றிய போது அவர் தெரிவித்துள்ளார்.

கைலாயபிள்ளை கதிர்காமநாதன் (ஆசிரியர் ) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ,

" மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சபைக்குமிடையில் அதிகாரப் பகிர்வு மற்றும் நிர்வாகங்களில் முரண்பாடுகள் இருக்கலாம் .ஆனால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சமாதானச் சூழ்நிலையை ஏற்படுத்தியவர் இன்றைய ஜனாதிபதி என்பதை எவரும் மறந்து விட முடியாது.இதன் காரணமாகவே அவரை ஆதரிக்க எமது கட்சி தீர்மானித்துள்ளது.

ஆனால் பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை எமது கட்சியின் தனித்துவம் மற்றும் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது.தமிழ் பேசும் சமூகத்தின் பேரம் பேசுகின்ற சக்தி அதிகரிப்பதற்கும் ,மாகாண சபைகளில் இயற்றப்படும் சட்ட மூலத்தை பாராளுமன்றத்திக்கு கொண்டு செல்வதற்கும் எமது கட்சியின் தனித்துவமான பிரதிநிதித்துவம் தேவை என்பதால் வேறு விதமான முடிவை எடுக்க வேண்டியுள்ளது" என்றும் குறிப்பிட்டார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கிழக்கில் முன்னாள் போராளிகளை சமூகத்துடன் இணைக்கும் முயற்சியில் அமெரிக்க அரசாங்கம்


கிழக்கு மாகாணத்தில் முன்னாள் போராளிகளை மீண்டும் சமூகத்தில் ஒன்றிணைக்கும் பொருட்டு, சொந்த மற்றும் சிறிய வணிக முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு தேவையான சாதனங்களையும் வளங்களையும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிலையம் (USAID) வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார்.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, முன்னாள் போராளிகள் 1000 பேரை சமூகத்துடன் மீள ஒன்றிணைக்க சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி (USAID), இரண்டு வருட முன்னோடிச் செயற் திட்டமொன்றுக்கு நிதி வழங்கியுள்ளதாக இது தொடர்பாக விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூர் சமுதாயங்களுடன் முன்னாள் போராளிகள் சேர்ந்து பணியாற்றுவதனூடாக, கிழக்கு மாகாணத்தில், மக்களின் பாதுகாப்பையும் திடத்தன்மையையும் அதிகரிப்பதற்கான பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி மேற்கொள்ளும் இச்செயற் திட்டம் பெயர்ச்சிக்கான சர்வதேச அமையத்தினால்( IOM)நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியின் பணிக் குழுப் பணிப்பாளரான ரெபேக்கா கோன்,

"புதிய வாழ்வை ஆரம்பிக்கும் பொருட்டும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கும் பொருட்டும், முன்னாள் போராளிகள் தொழில்சார் பயிற்சி பெறுவதற்கும் அவர்களுக்கு அவசியமான ஆதரவைப் பெறுவதற்கும் மோதல்களுக்குப் பின்னர் சமுதாயங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கும் இச்செயற் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த உதவியுடன், ஆண்களும் பெண்களும் தமது வாழ்வை மாற்றுவதற்கும் புதிய இலக்குகளை அமைப்பதற்கும் புதிய கனவுகளைக் காண்பதற்கும் ஒரு சந்தர்ப்பத்தைப் பெறுவார்கள்"என்றார்.

முன்னாள் போராளிகளுக்கான இச்செயற்திட்டம் தொழிற் பயிற்சிகளுக்கு வழிகாட்டுவதுடன் உள ரீதியான ஆதரவை வழங்கி தொழிற் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

பொருத்தமான அனுபவத்தையும், திறமைகளையும் கொண்ட பங்குபற்றுநர்கள் சிலர், தமது உள்ளூர் சமுதாயங்களில், சொந்த வர்த்தகத்தை ஆரம்பிப்பதற்கு உதவியாக, சிறு கொடைகளைப் பெறுகின்றார்கள். இச்செயற்திட்டத்திற்கு இதுவரை 400 முன்னாள் போராளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுள் சிலருக்கு பயிற்சியும் வேறு சிலருக்கு வாழ்வாதார உதவியும் இதன் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

"மோதல்களுக்குப் பின்னர் மக்கள் தமது வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கும் வாழ்வாதாரங்களை மீட்பதற்கும் உதவும் முகமாகக் கருவிகளையும் பயிற்சியையும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியுடன் கூட்டுச் சேர்ந்து வழங்குவதில், பெயர்ச்சிக்கான சர்வதேச அமையம் மகிழ்ச்சியடைகின்றது" என அமையத்தின் இலங்கை பணிக்குழுத் தலைவர் மொகமத் அப்திக்கர் இந்நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

மேலும்,"நன்மை பெறுவோர் இந்நிகழ்ச்சித் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், தமது குடும்பங்களுடன் பகிர்ந்துகொள்வதற்குப் பெரிதும் அவசியப்படும் வளங்களைப் பெறுவதற்கு ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவை, கிழக்கில் சுபீட்சம் ஏற்படுவதற்கான நம்பிக்கையின் அடையாளங்களாகும்"என்றும் அவர் தொடர்ந்து கூறினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கி.மா.முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனம் விபத்து:மூவர் பலி


கிழக்கு மாகாண முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவினர் பயணம் செய்த வாகனமொன்று விபத்திற்குள்ளானதில் அதில் பயணம் செய்த இராணுவத்தினைச் சேர்ந்த மூவர் ஸ்தலத்திலேயே பலியானார்கள் .

வாகன திருத்த வேலைகளுக்காக குறித்த இராணுவ வீரர்கள் இவ் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த வேளை குருநாகல் மாவட்ட கோக்கரல்ல என்னுமிடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வாகனம் பாதைய விட்டு விலகி மரமொன்றுடன் மோதியுள்ளதாக சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கிழக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு சிற்றூழியர் நியமனம்


கிழக்கு மாகாண வைத்தியசாலைகளிலும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களிலும் பல வருடங்களாக தொண்டர்களாகச் சேவையாற்றிய 240 பேருக்கு, சுகாதார சிற்றூழியர்கள் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நியமனம் வழங்கும் வைபவம் நேற்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.தேவராஜன் தலைமையில் திருகோணமலை விவேகானந்தா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற போது மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு இந்நியமனங்களை வழங்கினார்.

அங்கு உரையாற்றிய முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்,

"கிழக்கு மாகாணம் செயல்படத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை பூதாகரமாகப் பேசப்பட்ட சுகாதாரத் தொண்டர்களின் நிரந்தர நியமனம் தொடர்பான பிரச்சினைக்குத் தற்போது முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இந்நியமனம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டதன் காரணமாகவே இதுவரை காலமும் தாமதம் ஏற்பட்டது.

இநநியமனம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு வதந்திகளையும் பிரச்சினைகளையும் தோற்றுவித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவற்றுக்கொல்லாம் இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றால் அது எமது மாகாண சபைக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும்.

அத்தோடு இன்று நியமனம் பெற்றிருக்கும் அனைவரும் தமது குடும்ப வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்ற தொழிலாக இதனைக் கருதாமல் சேவை மனப்பான்மையோடு பணியாற்றி கிழக்கு மாகாண சுகாதாரத்துறையில் ஒரு புதிய திருப்பத்தினை ஏற்படுத்த வேண்டும்"என்றார்.

இந்நிகழ்வில் மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா, வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மாணவர்கள் திடீர் சுகவீனமுற்றது குறித்து ஆராய கிழ.மா. முதலமைச்சர் நேரில் விஜயம்


மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் பாடசாலை சுகாதார மற்றும் வைத்திய பரிசோதனையின் போது வழங்கப்பட்ட விட்டமின் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகளை உட்கொண்ட மாணவர்கள் திடீர் சுகவீனமுற்ற சம்பவம் தொடர்பாக நேரில் ஆராயும் பொருட்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் நேற்று மாலை அந்த பிரதேசத்திற்கு நேரடி விஜயம் செய்துள்ளார்.

மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் இது தொடர்பாக மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில்,"மாகாண சுகாதார அமைச்சு உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய உயர் மட்டக் குழுவொன்று இதற்காக நியமிக்கப்பட்டு ,விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும்." என்றும் வலியுறுத்தி கேட்டிருந்தார்.

இதனையடுத்து இப் பிரதேசத்திறகு நேற்று மாலை விஜயம் செய்த மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஏறாவூர் வைத்தியசாலையில் சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகள் உள்ளடக்கிய கூட்டமொன்றையும் கூட்டினார்.

இக் கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் ,வலய கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஜெய்னுதீன் ,மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.சி.எம். பலீல், சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச.எம். தாரிக் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் குறித்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே நிலவும் சந்தேகங்கள் காரணமாக உண்மை நிலை கண்டறியப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

"உண்மை நிலை கண்டறியப்டப்டு வெளிப்படுத்தப்படாது விட்டால் பாடசாலை சுகாதார வைத்திய சேவையில் பெற்றோரும் ,மாணவர்களும் நம்பிக்கை இழக்க வேண்டி நேரிடும்."என்பதையும் சுட்டிக் காட்டினார்.

பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரினால் இச் சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்கு தற்போது குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரியினால் இக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து அக் குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிப்பது என இக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

கடந்த புதன்கிழமை முதல் சம்பவம் இடம்பெற்ற மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்து தடைப்பட்டிருப்பது குறித்தும் பாடசாலை அதிபருக்கு விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தல்கள் குறித்தும் இக் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டது.

பாடசாலையை சுமூகமாக இயங்க வைப்பதற்காக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரையும் பெற்றோர்களையும் சந்தித்து இதற்கான ஒழுங்குகளை செய்யும் பொறுப்பு வலய கல்விப் பணிப்பாளரிடம் இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் பேரில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் நாளை திங்கட்கிழமை முதல் பாடசாலையை வழமை போல் இயங்க வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பசுமை அபிவிருத்தி கிராமமாக கிழ.மாகாணத்தில் பாவற்கொடிச்சேனை தெரிவு


மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய கிராமமான பாவற்கொடிச்சேனை கிராமம் கிழக்கு மாகாண சபையினால் மாகாண பசுமையான கிராமமாக அபிவிருத்தி செய்ய தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இவ்வாறான மூன்று பசுமையான முன்மாதிரி கிராமங்கள் உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக நேற்று வவுணதீவு பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற இது தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கூறினார்.

பாவற்கொடிச்சேனை கிராமத்தில் இத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து பிரதேச சபை உறுப்பினர்கள் ,பிரதேச செயலக அதிகாரிகள் ,கிராமிய , சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

வீடமைப்பு ,வீதி அபிவிருத்தி ,கல்வி ,சுகாதாரம் ,போக்குவரத்து என பல்வேறு துறைகளில் இக் கிராமத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாக ஆலோசனைகளை முதலமைச்சர் இக்கூட்டத்தில் கேட்டறிந்து கொண்டார்..

ஒரு வருட காலத்திற்குள் 10 கோடி ரூபா செலவில் முதற்கட்ட பணிகளை ஆரம்பித்து பூர்த்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், இத் திட்டமானது 5 வருட திட்டம் என்றும் முதலமைச்சர் இது தொடர்பாக கூறினார்.

இங்கு உரையாற்றிய முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் "கடந்த கால யுத்த சூழலில் எல்லைக் கிராமங்களே மிகவும் பாதிக்கப்பட்டன.இந் நிலையில் எல்லைப் கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் " என்றார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அதர்மம் ஒழிந்தாலும் தர்மம் நிலை நாட்டப்படவில்லை-தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கிழ.மா.முதலமைச்சர்


தீபத் திருநாளானது வெறுமனே பட்டாசு கொளுத்தி வேடிக்கை கொண்டாடும் ஒரு கேளிக்கை நிகழ்வு அல்ல. அனைத்து மக்களுக்கும் மிகப் பெரும் தத்துவத்தைப் பறைசாற்றுகின்றது.அதர்மம் அழிந்து தர்மம் எப்போதும் வெல்லும் என்ற பொய்பிக்காத தத்துவம் அது .

எமது சமூகத்தைப் பொறுத்தவரை தமது சுயநலன்களுக்காக செயல்பட்டு மக்களின் நலன்களை மதியாத அடைக்குமுறைக்கு உட்படுத்திய பல அதர்மவாதிகள் அழிந்து விட்டார்கள் .இருந்த போதிலம் இம் மக்களின் துயரங்கள் இன்னமும் முழுமையாக துடைக்கப்படவில்லை." என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தனது தீபாவளி வாழத்து செய்தியில் தெரிவித்துள்ளார். அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது."போர் முடிவடைந்து விட்ட போதிலும் தமிழ் மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை.

"அதர்மம் ஒழிந்து தர்மம் நிலை நாட்டப்பட்ட இந் நன்நாளில் தீபத் திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதில் மட்டற்ற ஆனந்தம் அடைகின்றேன்.

மழை நின்றாலும் தூறல் நின்றபாடில்லை என்பது போல யுத்தம் முடிந்துவிட்டபோதிலும் தமிழ் மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.

இத்தீபத் திருநாளானது அல்லல் படுகின்ற எமது மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவதுடன் அரசியல் ரீதியான உரிமைக்காக ஏங்கி நிற்கும் எம் சமுதாயத்திற்கு நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைத்திட வாய்ப்புக்கள் பிறக்கட்டும். மனங்களில் மாறுதல் உண்டாகட்டும் என பிரார்த்திக்கின்றேன்."என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தனது தீபாவளிச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கிழ. மாகாண முதலமைச்சர் இந்திய எம்.பிக்கள் குழுவுடன் சந்திப்பு


தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வான உறுதியான அரசியல் தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதற்கும் மாகாண சபை முறைமையை பலப்படுத்துவதற்கும் இந்தியா பாரிய பங்களிப்பு செய்ய வேண்டும் என இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்ற குழுவினரை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் தமிழகத்தை சேர்ந்த ரி.ஆர் பாலு தலைமையிலான இந்திய நாடாளுமன்ற குழுவினரை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான குழுவினர் நேற்று கொழும்பு இந்திய இல்லத்தில் சந்தித்தபோதே இந்த தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலவரம், அங்குள்ள மக்களின் மீள்குடியேற்ற விடயங்கள், மாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னரான மக்களின் வாழ்வாதார முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சரினால் இந்திய தூதுக்குழுவினரிடம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இந்திய தூதுக்குழுவினரினால் கிழக்கு மாகாணம் பற்றியும், மாகாண சபை எதிர்நோக்கும் நடைமுறை சவால்கள் குறித்தும் முதலமைச்சரிடம் கேட்கப்பட்டது. இதுகுறித்தும் முதலமைச்சரினால் தெழிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் மத்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டம் குறித்தும் விளக்கினர்,

இந்திய அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் சில வேலைத்திட்டங்கள் குறித்தும் தனது நன்றியினை முதலமைச்சர் தெரிவித்துக்கொண்டார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates