jkr
แสดงบทความที่มีป้ายกำกับ திருகோணமலை แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ திருகோணமலை แสดงบทความทั้งหมด

திருமலை மீனவர் கொலை : சந்தேகத்தில் கடற்படை வீரர் மூவர் கைது


திருகோணமலை சீனன்குடா பகுதியில் காணாமல் போன சிங்கள மீனவ இளைஞர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 கடற்படைச் சிப்பாய்கள் பொலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போன இம்மீனவருக்கும் கொட்டியாகுடா கடற்படை முகாம் சிப்பாய்களுக்கும் இடையில் கடந்த வியாழக்கிழமை வாய்த் தகராறு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார் என்றும் கூறுப்படுகின்றது.

குறித்த மீனவர் காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசேட குழுவொன்று விசாரனைகளை மேற் கொண்டதாகவும் இதனையடுத்தே மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து இரகசியப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை, கடற்படையும் தனியான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெருவிக்கப்படுகின்றது.

இறந்தவருக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையிலான பிரச்சினை ஒன்றின் விளைவாகவும் இந்தக் கொலை இடம் பெற்றிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாகக் கடற் படையினர் கூறுகின்றனர். இது தொடர்பாக சில தகவல்கள் தங்களுக்குத் கிடைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கிண்ணியாவில் சிவில் பாதுகாப்பு படையின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி


திருகோணமலை கிண்ணியாவில் இன்று நண்பகல் காளை மாட்டை அடக்க மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பண்ணையொன்றில் கட்டப்பட்டிருந்த காளை மாடு கயிற்றை அறுத்து முரட்டுத்தனமான முறையில் அங்கும் இங்கும் ஓடியதாகவும்,இதனையடுத்து இதனை அடக்குவதற்காக சிவில் பாதுகாப்பு படை மற்றும் பொலிஸாரின் உதவி நாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வேளையில் சிவில் பாதுகாப்பு படை வீரரொருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த நபர் பலியானதாகவும் மற்றவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

புனரமைக்கப்பட்ட இரு பாடசாலைகள் மூதூரில் திறப்பு


அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் எம்.எஸ் பற்றீசியா புட்னிஸ் கடந்த 10 ஆம் திகதி மூதுரில் புனரமைக்கப்பட்ட இரண்டு பாடசாலைகளை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இப்பாடசாலைகள் ஏற்கனவே சேதமான நிலையில் காணப்பட்டன. இதையடுத்து இவற்றை அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி சபை, யுத்த முரண்பாடுகளால் பாதிக்கப்பட்டிருந்த பிரதேசங்களை மீள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் மிகவிரைவாக புனரமைத்தது.

திருகோணமலையில் உள்ள அம்மன் நகர், அரப்பா நகர் ஆகிய இடங்களைச் சேர்ந்த பாடசாலைகளையே அமெரிக்க தூதுவர் திறந்து வைத்தார்.

அதேவேளை திருகோணமலையில் ஐந்து பாடசலைகளும், மட்டகளப்பு மாவட்டத்தில் இரண்டு பாடசலைகளும், வைத்தியசாலை ஒன்றும் அமெரிக்க நிதியுதவியில் புனரமைக்கப்படவுள்ளன.

மேலும் இது குறித்து தூதுவர் கருத்து தெரிவிக்கையில்,

"திருகோணமலையில் உள்ள பாடசாலைகள் நீண்ட காலமாகப் புனரமைக்கப்படவில்லை.எனவே தான் அமெரிக்க அபிவிருத்திச் சபையின் நிதி உதவியின் கீழ் இவை புனரமைக்கப்பட்டன.

இதன்மூலம் இங்குள்ள எதிர்கால சமுகத்தினர் சிறந்த கல்விப் பயனைப் பெற்றுக் கொள்ள முடியும். இதே போன்று மட்டக்களப்பில் புனரமைக்கப்படாத ஏனைய கட்டிடங்களும் மிக விரைவில் புனரமைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates