கே.பி.யிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான தகவல்களை மக்களுக்கு அரசு அம்பலப்படுத்த வேண்டும்: ஐ.தே.க

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான சொத்து விபரங்கள் குறித்து தெளிவுபடுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாதன் தொடர்பில் அரசாங்கம் மௌனமான அணுகுமுறையை பின்பற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான சொத்து விபரங்களை மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் இந்த நாட்டில் எவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகள் காணப்படுகின்றன என்பது அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Response to "கே.பி.யிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான தகவல்களை மக்களுக்கு அரசு அம்பலப்படுத்த வேண்டும்: ஐ.தே.க"
แสดงความคิดเห็น