பாகிஸ்தானிய பல்கலைக்கழக வளாகத்தில் இரட்டை குண்டு வெடிப்புகள்; இருவர் பலி

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள இஸ்லாமிய பல்கலைக்கழக வளாக மொன்றில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இரட்டைக் குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது இருவர் பலியானதுடன் 12 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்லாமிய சர்வதேச பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த குண்டுத்தாக்குதலானது கடந்த இரு வார காலப்பகுதியில் தலிபான்களால் மேற்கொள்ளப்பட்ட ஏழாவது பிரதான தாக்குதலாக உள்ளது.
பல்கலைக்கழகத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் வளாகங்களில் இந்த குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதேசமயம் பாகிஸ்தானின் தென் வாஸிரிஸ்தான் பிராந்தியத்தில் தலிபான்கள் செறிந்து வாழும் பிரதேசங்கள் மீது பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 78 போராளிகள் பலியாகியுள்ளனர்.
ராஹ் ஈ நிஜாத்தில் புதிய இராணுவ நடவடிக்கை ஆரம்பமானதையடுத்து படைத்தரப்பில் 9 பேர் பலியானதுடன் 35 பேர் காயமடைந்துள்ளனர். தற்கொலைக் குண்டுதாரிகளுக்கு பயிற்சி வழங்கி வரும் காரி ஹுஸைன் வசிக்கும் கொத்காய் நகரை படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
அதேசமயம் கொட்காயின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியிலுள்ள டோர் குன்டாய் மற்றும் ஷிஷ்வார்ம் பிரதேசங்கள் ஏற்கனவே இராணுவக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
0 Response to "பாகிஸ்தானிய பல்கலைக்கழக வளாகத்தில் இரட்டை குண்டு வெடிப்புகள்; இருவர் பலி"
แสดงความคิดเห็น