கல்லடியில் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் முற்றுகை: இருவர் சந்தேகத்தில் கைது

மட்டக்களப்பு கல்லடியில் இயங்கி வந்த சட்ட விரோத கருக்கலைப்பு நிலையமொன்று நேற்று மாலை பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டது. இதன்போது வைத்தியர் மற்றும் உதவியாளர் உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
ஆயுள்வேத மருத்துவ நிலையம் என்ற போர்வையில் குறித்த இடத்தில் சட்ட விரோத கருக்கலைப்பு இடம்பெற்று வருவதாகத் தமக்கு கிடைத்த தகவலின் பேரிலேயே இந்நிலையம் முற்றுகையிடப்பட்டதாகக் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
தமக்குக் கிடைத்த தகவலின்படி இந்நிலையத்தில் சட்ட விரோத கருக்கலைப்புக்குள்ளான இருவர் உயிரிழந்திருப்பதாகவும் பொலிசார் குறிப்பிட்டனர்.
இந்நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் உடைமைகளையும் மருந்துப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருப்பதாகவும், தன்னை வைத்தியர் எனக் கூறி இந்நிலையத்தை நடத்தி வந்த நபர் பதுளையைச் சேர்ந்தவர் என்றும் பொலிசார் கூறினர்.
0 Response to "கல்லடியில் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் முற்றுகை: இருவர் சந்தேகத்தில் கைது"
แสดงความคิดเห็น