வட மாகாண உள்ளுராட்சி மாநாடு இன்று இனிதே நிறைவு பெற்றது!







நேற்றைய தினம் யாழ் மத்திய கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி நிகழ்வின் இரணடாம் நாளான இன்றைய தின வைபவத்தில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் உள்ளுராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் அவர்களும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி அவர்களும் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றைய தின நிகழ்வின் உள்ளுராட்சி சபைகளுக்கான அதிகாரங்கள் போதாது என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாகவும் தற்போது வட மாகாணத்தில் பல உளளுராட்சி சபைகள் மக்களின் பிரதிநிதிகள் இன்றி செயற்பட்டு வருவதாகவும் வெகுவிரைவில் இச்சபைகளுக்கான தேர்தல்கள் நடாத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு இச்சபைகள் மக்கள் சபைகளாக செயற்படும் பட்சத்தில் அவற்றுக்கான அதிகாரங்களை அதிகரிப்பது குறித்து மேன்மைதங்கிய ஜனாபதி அவர்களுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கையை தான் மேற்கொள்ள தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் அவர்கள் உரையாற்றும் போது யாழ் மாவட்ட மக்கள் டக்ளஸ் தேவானந்தா அவர்களைப் போல் ஒரு தலைவரை பெறுவதற்கு அதிர்ஸ்டம் செய்திருக்க வேண்டும் என்றும் மிகுந்த அர்ப்பணிப்புடனும் தியாகங்களுக்கு மத்தியிலும் அவர் இம்மக்களுக்கு அரும்பாடுபட்டு பல்வேறு தேவைகளை நிறைவேற்றித் தருவது தனக்கு மிகுந்த மகிழச்சியை அளிப்பதாகவும் தானும் ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்திலே குருநகர் பகுதி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக பணியாற்றியதாகவும் எனவே தமிழ் மக்கள் குறித்து தனக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாகவும் இதே போன்று இப்பகுதி மக்களும் ஏனைய பகுதி மக்களுடன் சகோதரத்துவத்துடன் இணைந்து சுமுகமாக வாழக் கூடிய ஒரு நிலை விரைவில் வர வேண்டும் என தான் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன் தென்பகுதியைச் சேர்ந்த உள்ளுராட்சி சபைகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.





0 Response to "வட மாகாண உள்ளுராட்சி மாநாடு இன்று இனிதே நிறைவு பெற்றது!"
แสดงความคิดเห็น