யாழ். மணிக்கூட்டுக் கோபுரம் திறந்து வைக்கப்பட்டது.
யாழ் மாநகரில் அமையப் பெற்றுள்ள மணிக்கூடு கோபுரம் புனரமைப்புச் செய்யப்பட்ட நிலையில் இன்றைய (19) தினம் திறந்து வைக்கப்பட்டது.
டயலொக் நிறுவனத்தின் அனுசரணையுடன் புனரமைக்கப்பட்டுள்ள மேற்படி மணிக்கூட்டுக் கோபுரத்தை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் உள்ளுராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் அவர்களும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி அவர்களும் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
மேற்படி நிகழ்வை யாழ் மாநகர சபையின் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.






0 Response to "யாழ். மணிக்கூட்டுக் கோபுரம் திறந்து வைக்கப்பட்டது."
แสดงความคิดเห็น