ஜனாதிபதி இன்று காலை வியட்நாம் விஜயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வியட்நாம் சென்றுள்ளார். அந்நாட்டு அரசின் அழைப்பை ஏற்று அவர் அங்கு விஜயம் செய்திருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லவும் ஜனாதிபதியுடன் வியட்நாம் சென்றுள்ளார்.
இரு நாட்டின் சமூக, பொருளாதார விடயங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் இவ்விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளன என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
0 Response to "ஜனாதிபதி இன்று காலை வியட்நாம் விஜயம்"
แสดงความคิดเห็น