சட்டவிரோதக் குடியேற்றம் - இன்ரபோலின் உதவி கோரப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவிலும் கனடாவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தொடர்பாக இன்ரர்போல் உதவியுடன் விசாரணை நடத்த இலங்கை தயாராகியுள்ளது.
இன்ரபோல் எனப்படும் சர்வதேசப் பொலிசாருடன் இணைந்து இலங்கை குற்றப் புலனாய்வுப் பொலிசார் இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தொடர்பான தகவல்களை இன்ரர்போலூடாகப் பெறவுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் இயங்கும் 'சட்டவிரோதக் குடியேற்றவாசிகளைத் தடுக்கும் பிரிவு' தெரிவித்துள்ளது.
தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுக்கு சர்வதேச ரீதியில் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருப்பதாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இவ்வாறான சட்டவிரோதக் குடியேற்றத்துக்கு முயற்சித்த 265 பேர் இந்தோனேஷியாவிலும், 76 பேர் கனடாவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்தோனேஷியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர் மத்தியில் சட்ட விரோத ஆட்கடத்தலில் ஈடுபடும் பிரபலமானவர் ஒருவர் இருப்பதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
கப்டன் ப்ராம் என அறியப்படும் ஏப்ரகாம் லோஹெனாஸ்பெஸி என்பவர் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுடன் படகில் இருப்பதாக அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்தார்.
இவர் முன்னர் சட்டவிரோத ஆட்கடத்தலுக்காக இந்தோனேஷியாவில் தண்டனை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Response to "சட்டவிரோதக் குடியேற்றம் - இன்ரபோலின் உதவி கோரப்பட்டுள்ளது."
แสดงความคิดเห็น