பதவிக்காலத்தில் 2 வருடங்களை அர்ப்பணிக்கத் தயாராகவுள்ளேன் - ஜனாதிபதி

கட்சியின் விருப்புக்கு ஏற்றவாறு நான் அடுத்த தேர்தலை நடத்துவேன். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சம்மேளனத்தில் இது தொடர்பில் ஆராய்ந்து கட்சி கூறுவதை செய்ய தயாராக இருக்கின்றேன்.
எனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் இரண்டு வருடங்களை அர்ப்பணிக்கவும் தயார் என்பதனை தெளிவாக குறிப்பிடுகின்றேன். இந்த தீர்மானத்தை மக்களிடம் ஒப்படைக்கின்றேன். நான் தீர்மானங்களை எடுக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கத்தின் 7 ஆவது தேசிய சம்மேளனத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
0 Response to "பதவிக்காலத்தில் 2 வருடங்களை அர்ப்பணிக்கத் தயாராகவுள்ளேன் - ஜனாதிபதி"
แสดงความคิดเห็น