சென்னை அருகே அமைந்துள்ள புழல் அகதிகள் முகாமை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று குறை நிறைகளை கேட்டறிந்தார்
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் பெரும் அவதியுறுவதாக தமிழக முதல்வரின் கவனதுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து கடந்த 2.11.09 அன்று அவசர அவசரமாக மாவட்ட கலெக்டர்கள், நிதித்துறை அதிகாரிகள் ஆகிரோரை அழைத்து முதல்வர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களின் வளர்ச்சிக்காக ரூ.12 கோடி முதல் கட்டமாக ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. “தமிழகத்தில் உள்ள முகாம்களை அமைச்சர்கள்,அதிகாரிகள் ஆய்வு செய்து எதிர்வரும் 10ம் திகதிக்குள் அறிக்கைகளை தனக்கு ஒப்படைக்க வேண்டும்” என தமிழக முதல்வர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள முகாம்;களுக்கு தி.மு.க அமைச்சாகள் அதிகாரிகள் விஜயம் செய்து வருகின்றனர். சென்னை அருகே அமைந்துள்ள புழல் அகதிகள் முகாமிற்கு 3.11.09 அன்று துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின்,திருவள்ளுர் மாவட்ட கலெக்டர்,மீன்வளத்துறை அமைச்சர்ஏ.கே.பி.சாமி உட்பட பல அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர் இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டு அதனை அமுல்படுத்துவதற்காக பல எதிர்ப்பகளை முறியடித்து அதற்காக பாடுபட்ட ஈழ மக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி(பத்மநாபா) உறுப்பினர்கள் பலர் இருபது வருடங்களாக புழல் அகதிகள் தங்கியிருக்கின்றனர். துணை முதல்வர் பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உறுப்பினர் ஒருவரின் வீட்டக்குச் சென்று அவரிடம் குறை,சிறைகளை கேட்டு அறிந்து கொண்டார் முகாமில் உள்ள மக்கள் துணைமுதல்வரிடம் பல கோரிக்கைகளை முன்வைத்து அதனை நிறைவேற்றி தருப்படி கேட்டுக் கொண்டனர். கழிப்பிடவசதி,சுத்தமான குடிநீர்,பிள்கைளின் கல்வி,முகாமினுள் ரேசன் கடை,ஓட்டுனர் உரிமம்,மாத கொடுப்பனவை அதிகரித்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். “தான் பார்த்தவற்றை,நீங்கள் சொல்லியவற்றை தமிழக முதல்வரிடம் எடுத்துக் கூறுவேன் அவைகள் நிறைவேற்றப்படும்” என மு.க.ஸ்டாலின் கூறினார்..
0 Response to "சென்னை அருகே அமைந்துள்ள புழல் அகதிகள் முகாமை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்"
แสดงความคิดเห็น