கிழக்கு ஆயுதக்குழுக்கள் ஆயுதங்களை கையளிக்க மற்றொரு பொதுமன்னிப்புக்காலம் அறிவிப்பு!

கிழக்கு ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைவதற்கு மற்றொரு தடவை பொதுமன்னிப்பை அறிவித்து மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்க படையினர் தீர்மானித்துள்ளனர். இதன்பிரகாரம் எதிர்வரும் 03வாரங்களுக்குள் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு ஆயுதக் குழுக்களுக்கு படைத்தரப்பினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வரும் அதேவேளை கிழக்கு முஸ்லிம் ஆயுதக் குழுக்களிடம் பெருந்தொகையான ஆயுதங்கள் காணப்படுவதாகவும், அதில் சிறியளவே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலக்க கூறியுள்ளார். இதேவேளை, முஸ்லிம் ஆயுதக் குழுவொன்றின் தலைவரான கஜூ சமட் என்பவர் ஆயுதங்களை கையளித்து சில தினங்களில் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
0 Response to "கிழக்கு ஆயுதக்குழுக்கள் ஆயுதங்களை கையளிக்க மற்றொரு பொதுமன்னிப்புக்காலம் அறிவிப்பு!"
แสดงความคิดเห็น