எனக்கு முக்கியத்துவம் இல்லாததால்தான் லண்டன் ட்ரீம்ஸ் ஓடல! -அசின்

'லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் எனக்கு முக்கியத்துவம் இல்லாததும்கூட படத்தின் தோல்விக்குக் காரணமாகிவிட்டது' என்று புதிய விளக்கம் கூறியுள்ளார் நடிகை அசின்.
லண்டன் ட்ரீம்ஸ் வெளியான பிறகு அசின் தன் பெற்றோரை விட்டுப் பிரிந்துவிட்டார் என்று பத்திரிகைகளில் செய்தி வந்தது. உடனே இல்லையில்லை அவர் எங்களுடன்தான் வசிக்கிறார் என்று அசின் அப்பா ஜோசப் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்டது. ஆனால் இன்னமும் அசின் தனியாகத்தான வசிக்கிறார்.
தன்னைச் சந்தித்த பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், லண்டன் டிரீம்ஸ் படம் ஓடாதது குறித்த வருத்தத்தைத் தெரிவித்திருந்தார்.
அவர் கூறுகையில், "லண்டன் டிரீம்ஸ் பட ரிசல்ட்டால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. வழக்கம்போல் சந்தோஷமாக இருக்கிறேன். லண்டன் டிரீம்ஸ் கதையை கேட்ட போதே இரண்டு கதாநாயகர்களின் நட்பை முன்னிலைப்படுத்தும் கதை என்பதை புரிந்து கொண்டேன். என்னுடன் நடித்த இருவருமே இந்தியில் பெரிய ஹீரோக்கள். அவர்களை சுற்றித்தான் கதை நகர்ந்தது. எனக்கு முக்கியத்துவம் இல்லை. துணை கேரக்டர் போலத்தான் வந்துபோனேன்...
கஜினி பட கல்பனா கேரக்டர் போல் எல்லா படங்களும் அமையும் என எதிர்பார்க்க முடியாது. கதாநாயகிக்கு சரிவிகித முக்கியத்துவம் இருக்க வேண்டும். அப்போதுதான் படங்கள் ஓடும். என்னை எதிர்பார்த்து வருபவர்கள் ஏமாந்துவிடுவதாலேயே இந்தப் படத்துக்கு வரவேற்பு குறைந்துவிட்டது" என்றார்.
0 Response to "எனக்கு முக்கியத்துவம் இல்லாததால்தான் லண்டன் ட்ரீம்ஸ் ஓடல! -அசின்"
แสดงความคิดเห็น