தம்மை அவதூறு எழுதிய சண்டேலீடர் ஒருமில்லியன் ரூபா தரவேண்டும் -கோத்தபாய ராஜபக்ஷ

பாதுகாப்புச் செயலாளரை தாக்கிக் கட்டுரை எழுதிய சண்டே லீடர் பத்திரிகை தம்மை அவதூறு செய்து விட்டதாக தெரிவித்து கோத்தபாய ராஜபக்ஷ தமக்கு 1மில்லியன் ரூபாவும் மன்னிப்புக் கடிதமும் கேட்டுள்ளார். ஒக்டோபர் மாதம் 22ம் திகதி சண்டேலீடர் ஆசிரியர்களான பிரெட்ரிக்கா ஜான்ஸ் மற்றும் முன்ஸா முஸ்டக் ஆகியோருக்கு சிவப்பு மையினால் எழுதப்பட்ட கொலை மிரட்டல் கடிதம் தபாலில் அவர்கள் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன. அதில் அவர்கள் இருவரும் எழுதுவதை நிறுத்த வேண்டும் இல்லையேல் சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் நிலமையே தான் நடக்கும் என மிரட்டப்பட்டிருந்தது அக்கடிதங்களிலிருந்த கையெழுத்தானது லசந்த விக்கிரமதுங்கே படுகொலை செய்யப்பட்ட போது அனுப்பப்பட்ட மிரட்டல் கடித்திலிருந்த எழுத்துடன் ஒத்துப் போவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒக்டோபர் 29ம் திகதி சண்டேலீடருக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் வக்கீல்கள் ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் பாதுகாப்புச் செயலாளரின் பெயரை சண்டேலீடர் கட்டுரைகள் அவதூறு செய்து விட்டதால் அவருக்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் செலுத்த வேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் ரூபா அபராதம் செலுத்துவதோடு கோத்தபாய ராஜபக்ஷவின் பெயரை சீரழிப்பதற்கு மன்னிப்பு கடிதம் எழுதி கையெழுத்திட்டு தராவிட்டால் மேலதிக சட்டநடவடிக்கை எடுப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.
0 Response to "தம்மை அவதூறு எழுதிய சண்டேலீடர் ஒருமில்லியன் ரூபா தரவேண்டும் -கோத்தபாய ராஜபக்ஷ"
แสดงความคิดเห็น