
>கொழும்பு நாரஹென்பிட்டி திம்பிரிகஸ்யாய வீதியில் அமைந்துள்ள நைட் கிளப் ஒன்றுக்கு முன்பாக இன்று அதிகாலை 3.00மணியளவில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலின்போதே இந்த சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், இருரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார். இதுபற்றிய விசாரணைகளை நாரஹென்பிட்டிய பொலீசார் நடத்தி வருகின்றனர். குறித்த இருவரும் இரவு விடுதியிலிருந்து வெளியேறி உந்துருளியொன்றில் புறப்படத் தயாரானபோது மற்றொரு உந்துருளியில் வந்தவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Response to "கொழும்பு இரவுவிடுதியில் துப்பாக்கிப் பிரயோகம், இருவர் படுகாயம்"
แสดงความคิดเห็น