ஹோம்ஸ் இம்மாதம் இலங்கை வருகிறார்?

இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர் அரச உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அதிகாரிகளையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். மேலும் வவுனியா நலன்புரி முகாம்களுக்கு விஜயம் செய்யவுள்ள ஜோன் ஹோம்ஸ் அங்குள்ள நிலைமைகளை பார்வையிடுவார் என அரசாங்கமட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அரசாங்கம் செய்துகொடுத்துள்ள வசதிகள் மீள்குடியேற்ற வேலைத்திட்டம் மற்றும் நிலக்கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் போன்றவற்றை ஜோன் ஹோம்ஸ் பார்வையிடுவார்.
அண்மைக்காலமாக அரசாங்கம் மீள்குடியேற்ற வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தியுள்ளமை தொடர்பில் ஜோன் ஹோம்ஸுக்கு விரிவாக விளக்கமளிக்கப்படும் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Response to "ஹோம்ஸ் இம்மாதம் இலங்கை வருகிறார்?"
แสดงความคิดเห็น