ஐக்கிய தேசிய முன்னணி இன்று கைச்சாத்து

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான எதிர்க்கட்சிக ளின் பொதுக் கூட்டமைப்பான ஐக்கிய தேசிய முன்னணி இன்று செவ்வாய்க்கிழமை காலை உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்படவுள்ளது. பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் வைத்து முற்பகல் 11.30 மணி வரையிலான சுபநேரத்தில் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டமைப்பில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு, புதிய சிஹல உறுமய உள்ளிட்ட 20 கட்சிகளும், அமைப்புக்களும் கைச்சாத்திட்டுள்ளன.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது உட்பட 10 அம்ச இணக்கப்பாடுகளை கருத்தில் கொண்டே எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டமைப்பான ஐக்கிய தேசிய முன்னணி உருவாக்கப்படுள்ளது.
இதற்கமைய, ஐக்கிய தேசிய முன்னணி என்ற இந்த புதிய அரசியல் முன்னணி ஆட்சியமைத்ததன் பின்னர் 180 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 13ஆம் திகதி விசேட வாகன பவனி மூலமாக கண்டிக்குச் சென்று, தலதா மாளிகையில் விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளனர்
0 Response to "ஐக்கிய தேசிய முன்னணி இன்று கைச்சாத்து"
แสดงความคิดเห็น