jkr
แสดงบทความที่มีป้ายกำกับ சச்சின் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ சச்சின் แสดงบทความทั้งหมด

மராத்தி.. சச்சின் மீது பால் தாக்கரே பாய்ச்சல்!


மும்பை: 20 ஆண்டு காலத்தை கிரிக்கெட்டில் கழித்துள்ள சச்சின் டெண்டுல்கரை, சீண்டியுள்ளது சிவசேனா.

கிரிக்கெட் வாழ்க்கையில் 20 ஆண்டுகளைப் பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சச்சின், முதலில் நான் ஒரு இந்தியன், பிறகுதான் மராத்தி.

மும்பை இந்தியாவுக்குச் சொந்தமானது. அப்படித்தான் நான் பார்க்கிறேன். நான் ஒரு மகாராஷ்டிரக்காரன், அதற்காக பெருமைப்படுகிறேன். ஆனால் முதலில் நான் ஒரு இந்தியன் என்று கூறியிருந்தார்.

இது சிவசேனாவை கோபப்படுத்தி விட்டது. உடனடியாக சிவசேனாவின் பத்திரிக்கையான சாம்னாவில் தலையங்கம் போட்டு சச்சினை தாளித்து எடுத்து விட்டனர்.

இதுகுறித்து சாம்னா தலையங்கத்தில் பால் தாக்கரே எழுதியிருப்பதாவது:

சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

அவர் இவ்வளவு எகத்தாளமாக பேச வேண்டிய அவசியமே இல்லை. மராத்திய மக்கள் 105 பேர் உயிர் தியாகம் செய்து மும்பையை பெற்றோம். இதற்காக இன்னும் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டோம் தெரியுமா, அப்போதெல்லாம் நீ பிறந்திருக்கக்கூட மாட்டாய்.

இப்படிப்பட்ட கருத்துக்களை சச்சின் தெரிவிக்க வேண்டிய அவசியமே இல்லை. மராத்தி மக்களின் மன பிட்ச்சில் தற்போது சச்சின் ரன் அவுட் ஆகி விட்டார். கிரிக்கெட்டின் பாட்ஷாவாக சச்சின் இருக்கிறார். அவர் அந்த அளவோடு நின்று கொள்ள வேண்டும். விளையாட்டில் மட்டும் அவர் கவனம் செலுத்தினால் போதும், இதுபோன்ற கருத்துக்களை எல்லாம் அவர் வெளியிடக் கூடாது.

கிரிக்கெட் வாரியம் கண்டனம்...

சச்சினை சிவசேனா கண்டித்திருப்பதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வாரிய நிதிக் கமிட்டி தலைவரும், செய்தித் தொடர்பாளருமான ராஜீவ் சுக்லா கருத்து தெரிவிக்கையில், சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் கருத்து தேவையில்லாதது. இதற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட வேண்டும்.

முகம்மது அலி ஜின்னா போல பேசுகிறார் தாக்கரே. அவரது கருத்து தேவையற்றது. சிவசேனா கட்சியினருக்கு இப்படி பேசுவதைத் தவிர வேறு வேலையே இல்லை போலும். டெண்டுல்கர் இந்தியாவுக்குச் சொந்தமானவர். மகாராஷ்டிராவுக்குச் சொந்தமானவர். தன்னை ஒரு இந்தியன் என்று யாராவது கூறிக் கொண்டால் அது ஒரு குற்றமா?

சிவசேனா இப்படி பேசிக் கொண்டிருந்தால் எந்த மராத்திக்காரரும் அதை ஆதரிக்க மாட்டார். உண்மையான இந்தியனாக பேசியுள்ளார் சச்சின் , ஒரு தேசியவாதியாக பேசியுள்ளார். இதைக் கூட அவர்களால் புரிந்து கொள்ள முடியாதா.

சில ஓட்டுக்களை வாங்க வேண்டும் என்பதற்காக இப்படி இந்தியர்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறது சிவசேனா. இவர்களையெல்லாம் சும்மா விடக் கூடாது. வழக்குப் போட வேண்டும்.

இதுபோன்ற கருத்துக்களை மகாராஷ்டிர மக்கள் விரும்ப மாட்டார்கள். சில இன துவேஷிகள்தான் இதை ரசிப்பார்கள். பெரும்பாலான மகாராஷ்டிர மக்கள் இதை விரும்ப மாட்டார்கள். தங்களை இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்வதைத்தான் அவர்கள் விரும்புவார்கள்.

இப்படித்தான் முன்பு ஜின்னா பேசினார். சிவசேனாவின் இந்தப் பேச்சுக்கு பெரும்பாலான மகாராஷ்டிரர்கள், சில சிவசேனா மற்றும் ராஜ் தாக்கரேவின் கட்சித் தலைவர்கள் தவிர மற்ற அனைவருமே டெண்டுல்கருக்கு ஆதரவாகத்தான் உள்ளனர் என்றார் சுக்லா.

பிதாகமன் படத்தில் லைலா தனது அப்பாவைப் பார்த்து நீ லூசாப்பா என்பார். சாம்னா தலையங்கத்தைப் பார்க்கும்போது அந்த கேள்விதான் மனதில் வந்து போகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சுயநலனுக்காக ஆடும் சச்சின்-அதிருப்தியில் ரசிகர்கள்


சென்னை: ஐந்து உலக கோப்பை ஆட்டங்களை சந்தித்துவிட்ட பிறகும், சச்சின் தென்டுல்கர் ஏன் இன்னும் ஓய்வு பெறாமல் விளையாடுகிறார் என்ற சலசலப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் வலுத்து வருகிறது.

கிரிக்கெட் மேஸ்ட்ரோ எனப் புகழப்படும் சச்சின் தெண்டுல்கர் 1989ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் அறிமுகம் ஆனார். ஸ்ரீகாந்த், அசாருதீன், கங்குலி, டிராவிட், டோனி, ஆகியோரது தலைமையில் விளையாடி உள்ளார். அவரும் கேப்டனாக இருந்துள்ளார்.

154 டெஸ்ட் போட்டிகளில் 12,773 ரன்னும் (42 சதம்), 434 ஒரு நாள் போட்டிகளில் 16,993 ரன்னும் (44 சதம்) எடுத்துள்ளார். இவையெல்லாம் அவரின் சாதனைகளே. பல்வேறு ஆடுகளங்களில் கிரிக்கெட் ரசிகர்களை பரவச வெள்ளத்தில் ஆழ்த்திய பெருமை சச்சினுக்கு உண்டு.

ஆனால், கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்ட சச்சினின் ஆட்டத் திறன் மங்கிவிட்டதாக சமீப காலமாக விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.

ஆனாலும் நல்ல உடல் திறனுடன் இருப்பதாக சச்சினும் கூறுகிறார், அவருடன் ஆடுபவர்களும் கூறுகிறார்கள், கிரிக்கெட் தேர்வுக் குழுவும் சச்சின் இஸ் பெஸ்ட் என்றே தொடர்ந்து கூறி வருகிறது.

ஆனால் அவருடைய ஆட்டத்தைத் தொடர்ந்து கவனித்தால் இவை குறித்து சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. எப்போதாவது பெரிய ஸ்கோர் அடிக்கிறார். சுண்டைக்காய் அணி சிக்கினால் சதம் போடுகிறார்.

ஒரு தொடரில் தொடர்ந்து ஆடுகிறார். அடுத்த தொடரில் ரெஸ்ட் எடுக்கப் போய் விடுகிறார். இவற்றை கண்டுகொள்ளாமல் சச்சின் மெத்தனமாக விளையாடுவதால், அவர் சாதனை முயற்சிகளுக்காகத் தான் ஆட்டங்களில் பங்கேற்கிறார் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் துளிர் விடத் துவங்கிவிட்டது.

தற்போதைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவரது ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. முதல் ஆட்டத்தில் 14 ரன்களும், 2வது ஆட்டத்தில் 4 ரன்களும், 3வது ஆட்டத்தில் 32 ரன்களும் எடுத்தார் சச்சின்.

தொடரின் 4வது போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரராக இருந்தாலும் அவரது ஆட்டம் ஆமை வேகத்தில் இருந்தது. 68 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரியுடன் 40 ரன்கள் எடுத்தார். அப்போதும் கூட சச்சின் 7 ரன்களை எடுத்திருந்தால் ஒரு நாள் போட்டியில், 17 ஆயிரம் ரன்களைக் கடந்திருக்கலாமே என்றுதான் பேசப்பட்டதே தவிர, வெற்றிக்கு சச்சின் உதவினாரா, இல்லையா என்று யாரும் பேசவில்லை.

ரசிகர்களின் அதிருப்தியைப் போக்க ஏதாவது செய்யுங்க சச்சின் ...!

கங்குலி கண்டனம்:

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 4-வது ஒருநாள் போட்டியில் தெண்டுல்கருக்கு கொடுக்கப்பட்ட 'எல்.பி.டபிள்யூ அவுட்' மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இலங்கையைச் சேர்ந்த நடுவர் அசோகா டிசில்வா இந்த 'அவுட்'டை கொடுத்தார். நடுவரின் முடிவுக்கு முன்னாள் கேப்டன் கங்குலி கண்டனம் தெரிவித்துள்ளார்.

'தெண்டுல்கருக்கு நடுவர் அசோகா டிசில்வா கொடுத்த அவுட் தவறான முடிவாகும். தெண்டுல்கர் பலமுறை நடுவர்களின் மோசமான முடிவால் ஆட்டம் இழந்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போதும் நடுவரான அசோகா டிசில்வா எனக்கே 4 முறை தவறான அவுட் கொடுத்தார்' என்று கங்குலி கூறினார்.

முன்னாள் கேப்டன் கவாஸ்கரும் நடுவரின் முடிவு குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சச்சினுக்கு அப்ரிதி சவால்


இந்திய பேட்ஸ்மேன் சச்சின், கடந்த 2003 ம் ஆண்டில் தான் நல்ல பார்மில் இருந்தார். தற் போது அவர் மீது பாகிஸ் தான் அணிக்கு பயம் இல்லை,” என அப்ரிதி தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வரும் 26 ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. உலககோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போன்ற தொடர்களில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பெரிய அள வில் சாதித்தது இல்லை. ஆனால் இந்த முறை வெற்றி பெறுவோம் என்கிறார் பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி. இது குறித்து அவர் கூறுகையில்,”"உலககோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் இதுவரை இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் இருந்திருக்கலாம். ஆனால் இந்த முறை பாகிஸ்தான் வெற்றி பெறும் என நம்புகிறேன். சச்சின் மீது பாகிஸ்தான் அணிக்கு பயம் இல்லை. அவர் கடந்த 2003ம் ஆண்டில் நல்ல பார்மில் இருந்தார். ஆனால் இது 2009. இடையில் 6 ஆண்டுகள் கழிந்து விட்டன. பாகிஸ்தானின் பேட்டிங் மட்டுமல்ல, பவுலிங்கும் பாராட்டும்படியாக உள்ளது,” என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates