jkr
แสดงบทความที่มีป้ายกำกับ கனடா แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ கனடா แสดงบทความทั้งหมด

கனடவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 50 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்


கனடாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 76 சட்டவிரோத இலங்கை அகதிகளில் 50 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.. கடந்த அக்டோபர் மாதம், கனேடிய அதிகாரிகளால் இவர்கள் கைதுச்செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் 23 பேரை விடுவிப்பதற்கான உத்தரவு தற்சமயம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, ஏற்கனவே 15 பேர் கனனேடிய அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், விடுவிக்கப்படவுள்ள ஏனைய இலங்கை அகதிகளின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 76 சட்டவிரோத இலங்கை அகதிகளில் 50 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.. கடந்த அக்டோபர் மாதம், கனேடிய அதிகாரிகளால் இவர்கள் கைதுச்செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் 23 பேரை விடுவிப்பதற்கான உத்தரவு தற்சமயம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, ஏற்கனவே 15 பேர் கனனேடிய அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், விடுவிக்கப்படவுள்ள ஏனைய இலங்கை அகதிகளின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கனடாவில் தமிழ்ப் பத்திரிகைகள் புலிக்குண்டர்களால் அள்ளிச்செல்லப்பட்டுள்ளது.


ஐனநாயக நாடான கனடாநாட்டில் பத்திரிகைச்சுதந்திரம் கருத்துச்சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் தமிழ்பத்திரிகைகளான சுதந்திரன்; தங்கதீபம் தமிழர்செந்தாமரை, உதயன் ஆகிய ஆயிரக்கணக்கான தமிழ்பத்திரிகைகளின் பிரதிகள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தமிழ்த்தேர்தல் நடத்திய வன்முறை குழுவினரால் பலாத்காரமாக அள்ளிச் செல்லப்பட்டிருக்கின்றது. இச்சம்பவத்தால் கனடாவாழ்தமிழர்கள் விசனம் அடைந்துள்ளனர்.

இந்தப்பத்திரிகைகள் அவர்கள் கொடுத்த தேர்தல் விளம்பரங்களை விபரமாக பிரசுரித்திருந்தனர் ஆனால் இவ்விளம்பரங்கள் இந்த தமிழ்த்தேர்தல் நடத்தியவர்களை திருப்திப்படுத்தாதபடியால் அள்ளிச்செல்லப்பட்டதாக தெரியவருகின்றது.

கனடாவில் கடந்தகாலங்களில் தமிழர்கள்மீதும் தமிழ் ஊடகங்கள்மீதும் வன்முறைகளை பிரயோகித்ததும் கனேடிய அரசினால் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டதுமான உலகத்தமிழர் இயக்கத்தினரது கைவரிசை இதில் உள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.

கனடாவில் அமைதியையும் சமாதானத்தையும் நேசிக்கும் தமிழ் மக்களுக்கும் தமிழ்ஊடகத்துறைக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. மூன்று இலட்சம் தமிழ் மக்கள் வாழும் கனடாநாட்டில் இந்தத்தேர்தலில் 48ஆயிரம் தமிழர்கள் மட்டுமே வாக்களித்திருக்கிறார்கள். ஏனைய பெரும்பான்மைத்தமிழர்கள் இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களின் ஊடகங்களான ரி.வி.ஐ தொலைக்காட்சி சி.எம்.ஆர்; சி.ரி.ஆர் வானொலிகள் பெருத்த எடுப்பில் பிரச்சாரம் செய்தும் தமிழ் மக்கள் வாக்களிக்கச் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

ஐனநாயகமுறையில் தமிழர்களின் கருத்தைப்பெற்றுக்கொள்ளவே இந்தத்தேர்தல் என்று கனேடிய ஊடகங்களுக்கு பேட்டிகொடுத்து போலி ஐனநாயக நாடகம் ஆடிய இந்த குழுவினரின் நடவடிக்கைகளை கனேடிய ஊடகங்களுக்கு அம்பலப்படுத்துவது ஒவ்வொரு தமிழரினதும் கடமையாகும்.

ஐனநாயகம் என்ற போர்வையில் பணநாயகம்தான் இவர்களின் உண்மையான இலக்கு என்பதை கனேடியத்தமிழர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் காரணம் கடந்தகாலங்களில் விடுதலைக்கு என சேர்த்த பணத்தில் வீடுகள் வாங்கியவர்களுக்கும் வியாபாரம் தொடங்கியவர்களுக்கு இப்போது பிழைப்பு இல்லாமல் போய்விட்டது.

அதனால் தமிழ்ஈழத்தை கைவிட்டுவிட்டு இந்த வட்டுக்கோட்டைத்தீர்மானத்தை புதைகுழியில் இருந்து தோண்டி எடுத்திருக்கிறார்கள். இந்த பணநாயகர்களினால்தான் பத்திரிகைச் சுதந்திரம் பறிக்கப்பட்டிருகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கனேடிய புலிகளின் நாடுகடந்த தமிழீழ தேர்தல் துண்டுபிரசுரத்தை பத்திரிகைக்குள் வைக்க மறுத்த தமிழ் பத்திரிகைக்கு கனேடிய புலிகள் ஆப்பு!

Flag Canada animated gif 120x90கனடாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழத்திற்கான தேர்தலை கனடாவில் வாழும் தமிழ்மக்களில் 85 வீதத்திற்கு மேற்பட்டோர் நிராகரித்துள்ளனர். இருந்தபோதிலும் வசூல் புலிகளால் நடாத்தி முடிக்கப்பட்ட மேற்படி தேர்தல் பெரு வெற்றி என்று வசூல்புலிகள் உரிமைகோரியுள்ளனர். வாக்களித்த சிறு தொகையினர் கூட மோசடிகள், போலி அடையாளத்தை காண்பித்தும், வாக்களிக்கும் வயதினை அடையாத சிறுவர்கள் கூட வாக்களித்துள்ளதுடன் வாக்களித்தவர்கள் மீண்டும் மீண்டும் தோன்றியதையும் காணமுடிந்தது.


இதேவேளை புலிகளின் மேற்படி கற்பனை தமிழீழ தேர்தலிற்கு முழுமையான ஆதரவினை கனடாவில் வாரம் ஒருமுறை வெளிவரும் இலவச தமிழ்பத்திரிகை ஒன்;று வழங்கவில்லை என்று தெரிவித்து, கனடா புலிகளால் மேற்படி பத்திரிகை வர்த்தக நிலையங்களில் இருந்து அகற்றப்பட்டதாக பத்திரிகையின் ஆசிரியர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

இலவச பத்திரிகையான அவ் பத்திரிகை கடந்த காலங்களில் புலிகளின் பலவந்த பணசேர்ப்பு, அடாவடிதனங்களை கண்டிக்காது புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவினை தெரிவித்துவந்ததுடன் தனது ஆசிரியர் தலையங்கத்தில் கூட புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நியாயம்தேடியது. இவ்வாறான நிலையில் தமது கற்பனை தமிழீழத்திற்கு ஆதரவு வழங்கவில்லை என்று தெரிவித்து மேற்படி பத்திரிகையை வர்த்தக நிலையங்களில் இருந்து அகற்றி பத்திரிகையின் வெளியீட்டுக்கு கனேடிய புலிகளால் ஆப்புவைக்கப்பட்டுள்ளது. இவ் பத்திரிகை கடந்த காலங்களில் ஏனைய ஊடகங்கள் தாக்கப்பட்டும், பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டபோது மௌனம் காத்து தனது ஊடக வியாபாரத்தை கற்சிதமாக மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ்ஆரூரான்
கனடா

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கனடாவில் புலிகளின் பண மோசடி கும்பல் நடாத்தும் தேர்தல் நாடகம்! : வாக்களிக்க நிர்ப்பந்திக்கப்பட்டால் பொலிஸாரிடம் முறையிடலாம்!!

Flag Canada animated gif 240x180புலிகள் ‘தமிழ் ஈழம் காண்கிறோம்’ என பெரும் படை பட்டாளங்களை கட்டியமைத்து, தமிழ் மக்களின் சொத்துக்களையும், அவர்களது பிள்ளைகளையும் கொள்ளையடித்து நாசமாக்கி, இறுதியில் தம்மையும் அழித்துக் கொண்ட பின்னர், தாயகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் ‘சூடு கண்ட பூனைகளாக’ இப்பொழுது சரியான திசைவழியில் தகவமைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் புலிகளின் புண்ணியத்தால் வேலை வெட்டிக்குப் போகாமல், புலம்பெயர் தமிழர்களின் பணத்தில் சுகசீவியம் நடாத்தி வந்த ‘ருசி கண்ட பூனைகளான’ புலம்பெயர் புலி வால்கள், இன்னமும் தமது பண கொள்ளையை விட்டபாடாக இல்லை. இப்பொழுது அவர்கள் தூக்கிக் கொண்டு திரிவது ‘வட்டுக்கோட்டை தமிழீழத் தீர்மானம் ;என்ற செத்து பல வருடங்களாகி, புழுத்துப் போன தமிழீழ பிரேதத்தையாகும். அந்தப் பிரேதத்தை வைத்து, தமிழர்கள் வாழும் ஒவ்வொரு புலம்பெயர் நாடுகளிலும் ஒப்பாரிப் பிலாக்கணம் வைத்துத் திரிகின்றனர்.

‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டத்தை பிரட்டப் போகிறேன்’ என்ற கணக்காக, ஆனானப்பட்ட பிரபாகரனால் ஆக முடியாத தமிழீழத்தை, இந்த காசு கறக்கும் விண்ணன்கள் ஏற்படுத்தப் போவதாக பிதற்றித் திரிவது சுத்த ‘ஹம்பக்’ ஒழிய வேறொன்றும் அல்ல.

புலிகளின் கோட்டை என வர்ணிக்கப்படும் நோர்வேயில் வாழுகின்ற தமிழர்களில் 87 வீதம் பேர், இந்த சுத்துமாத்து பேர்வழிகளின் தேர்தல் பம்மாத்தை நிராகரித்துவிட்ட நிலையில், இப்பொழுது தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவில் நாளைய தினம் (டிசம்பர் 19) தமது கைவரிசையை காட்ட புறப்பட்டுள்ளனர். ஆனால் புலி வால்களின் மோசடிகளால் கடந்த காலத்தில் பல துன்பங்களை அனுபவித்துவிட்ட கனடிய தமிழ் மக்கள் இம்முறை இவர்களுக்கு செப்பமான பாடம் புகட்டக் காத்திருக்கின்றனர்.

கனடாவில் நாளைய தினம், தமது தேர்தல் கோமாளி கூத்தில் பங்குபற்ற வரும்படி, யாராவது புலி வால்கள் பொதுமக்களை மிரட்டினால், அவர்கள் எவ்வித பயமோ தயக்கமோ இன்றி கனடிய பொலிசாரிடம் முறைப்பாடு செய்யலாம். அதற்கான ஏற்பாடுகளை இங்குள்ள தமிழ் சமூகத்தின் மத்தியில் செயற்படுகின்ற ஜனநாயக சக்திகள் செய்த வைத்துள்ளன.

புலிகளின் பெயரால் தொடர்ந்து புலம்பெயர் தமிழர்களிடம் பணம் கொள்ளையடிப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படும் இந்த மோசடி கும்பலின் சதிக்கு ஆளாகாமல் தவிர்த்துக் கொள்வது, ஒவ்வொரு கனடிய தமிழனினதும் கடமையாகும். இனிமேலாவது நீங்கள் குளிரில் நடுங்கி, நித்திரையின்றி வேலைசெய்து உழைக்கும் பணத்தை இந்த மோசடிக் கும்பல் அபகரித்த கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த தேர்தல் மோசடி நாடகத்தை முற்றாக பகிஷ்கரித்து புலி வால்களுக்கு தகுந்த பாடம் புகட்டுங்கள்!
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சுற்றுலாப் பயணக் கட்டுப்பாட்டை கனடா தளர்த்தியது

Flag Canada animated gif 120x90 நாட்டில் சமாதானச் சூழல் காணப்படுவதுடன், பாதுகாப்பு நிலவரம் சீரடைந்துள்ளதால் கனடா அரசாங்கம் இலங்கை தொடர்பாகப் பேணிவந்த சுற்றுலாப் பயணிகளுக்கான பிரயாணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது.

இது தொடர்பான அறிக்கையில்,

அவதானமாகப் பயணங்களை மேற்கொள்ளலாம் என்று கனடா அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும், இங்கு வரும் அந்நாட்டுப் பிரஜைகள், இலங்கைக்குள் அநாவசியப் பிரயாணங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கூறியுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள கொழும்பிலுள்ள கனடா தூதுவர் புரூஸ் லெவி, விடுதலைப் புலிகளுடனான தீவிர யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, இலங்கை புதிய யுகம் ஒன்றுக்குள் பிரவேசித்துள்ளதை இது எடுத்துக் காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் இலங்கையர்கள் மிகக்கூடுதலாக கனடாவில் குடியேறியுள்ள நிலையில், அதிக எண்ணிக்கையிலான கனேடிய மக்கள் இலங்கைக்கு வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கனேடிய பிரஜாவுமை பெற்ற அநேகமான இலங்கையர்கள், அவர்களது குடும்பத்தினரைச் சந்திக்கவும் முதலீடுகளை மேற்கொள்ளவும் இலங்கைக்கு வரலாமெனத் தாம் நம்புவதாகவும் லெவி கூறினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கனடாவில் உள்ள மஹா புத்தவிகாரை தீயிடப்பட்டுள்ளது


கனடாவில் இருக்கும் ஸ்காபரோ நகரில் உள்ள மஹா புத்த விகாரை நேற்றைய தினம் இரவு தீயிடப்பட்டதாக அறியப்படுகிறது. தமிழீழ தேசிய தலைவரின் பிறந்த நாளான நேற்றைய தினம் இச் சம்பவம் நடந்ததால், இதற்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளருக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை தூதரகம் குற்றஞ்சாட்டியுள்ளது. இரண்டு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் இத் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக கனடா பொலிசர் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாவீரர் தினத்தில், மற்றும் தேசிய தலைவரின் பிறந்த நாள் தினங்களில் இவ்வான அசம்பாவிதங்கள் நடப்பதாக சிங்களப் பேரினவாதிகள் காட்டிக்கொள்கின்றனர். காப்புறுதிப் பணத்தைப் பெற்று விகாரையை மேலும் விஸ்தரித்து கட்டுவதற்க்காக வேண்டும் என்றே புத்த பிக்குகள் தமது விகாரைக்கு தாமே தீயிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை நடத்தவேண்டும் என கனடிய தமிழர்கள் தெரிவித்தனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

புலிகளின் சீமான் கனடாவில் இருந்து நாடு கடத்தல்!



இலங்கையில் புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டதை அடுத்து கைவிடப்பட்ட நிலையில் உள்ள புலிகள் இயக்கத்தை புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலி முக்கியஸ்தர்கள் பண வருவாயை நோக்காக கொண்டு அதை தொடர்ந்தும் செயற்படுத்த முனைப்பு கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் சீமானை அழைத்து அவர் மூலம் செத்துப்போன புலிகளுக்கு உயிரூட்டும் முயற்சிக்கு கனேடிய அரசு உடனடியாக ஆப்பு வைத்துவிட்டதாக கனேடிய பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர்ந்த மக்களை ஏமாற்றி பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்று போலி பரப்புரை செய்யும் முயற்சியில் இறங்கியிருந்த டைரக்டர் சீமான் கனேடிய குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டதாக கனடாவில் இருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கனேடிய தமிழர்களிடம் பணவசூலிப்பு பலாத்காரமாக புலிகளால் மேற்கொண்டுவரப்பட்டதை நன்கு அறிந்து கொண்ட கனேடிய அரசு கனேடிய தமிழ்மக்கள் புலிகளால் மேலும் தொந்தரவுக்கு உள்ளாவதில் இருந்து காப்பாற்றும் முகமாகவே மேற்படி சீமானின் நாடுகடத்தல் மேற்கொள்ளப்பட்டதாக கனேடிய பாதுகாப்புதுறை வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

செத்துபோன பிரபாகரனை வைத்து பண பிழைப்பு நடத்தலாம் என்ற சீமானின் கனவும் கனேடிய புலி பிரமுகர்களின் கனவும் கனேடிய அரசினால் துறைத்தெறியப்பட்டுள்ளது என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கனடாவில் தரித்துள்ள கப்பலில் இருந்து மேலும் வெடிப்பொருட்கள் மீட்பு


அண்மையில் கனடாவில் கைதான 78 இலங்கையர்கள் சென்ற ஓசியன் டேடி கப்பலில் இருந்து மீண்டும் ஆர் டீ எக்ஸ் மற்றும் சைக்லோ ஓக்சிஜன் போன்ற பாரிய வெடிப்புகளை ஏற்படுத்தக் கூடிய பொருட்கள் மீட்ககப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பொருட்கள் கப்பலின் முக்கிய பல மூன்று பகுதிகளில் மறைத்து வைக்கபட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த கப்பலில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, இரண்டு வெவ்வேறு வகையான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டன.

இதற்கிடையில் தற்போது வென்குவார் சிறையில் உள்ள 76 பேரில் குறிப்பிட்ட ஒரு குற்றவாளியை தேடும் விசாரணைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அகதி கப்பலில் இருந்த புலி உறுப்பினர் அடையாளம் காணப்பட்டுள்ளார்!


ஓசன் லேடி(Ocean Lady) என்ற பெயருடைய கப்பலில் சென்று கனேடிய அரசிடம் அரசியல் அடைக்கலம் கோரியிருந்த 78 இலங்கை தமிழர்களில் ஒருவர் சிறிலங்கா மற்றும் சர்வதேச பொலிசாரினால் தேடப்படுவர் என்பதினை இலங்கை பொலிசார் கனேடிய அதிகாரிகளுக்கு உறுதிப்படுத்தி உள்ளனர். 26 வயதுடைய கார்தீபன் மாணிக்கவாசகர் என்பவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார். இதேவேள அந்த கப்பலில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் புலி உறுப்பினர்கள் என்று கனேடிய தமிழர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது. அந்த கப்பலில் பணியாற்றிய பொறியியலாளர் மற்றும் கப்பல் தலைவர் ஆகியோர் புலிகளுக்கு ஆயுதம் கடத்தி வந்த கப்பலில் பணிபுரிந்தவர்கள் என மொன்றியால் நகரில் வாழும் தமிழர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலங்கையர்கள் என்று நம்பப்படும் 76பேருடன் தாம் கடும்போக்கை கடைப்பிடிக்க இருப்பதாக கனேடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனடி தெரிவிப்பு!

canada-01-june1 கனடாவில் புகலிடம் கோருவோர் மீது மென்போக்கு கடைப்பிடிக்கப் படுவதாக நிலவும் அபிப்பிராயத்துடன் அரசாங்கம் போராடிக் கொண்டிருக்கும் இவ்வெளையில், நாட்டின் மேற்கு கரையோரத்தில் துருப்பிடித்த படகு ஒன்றில் வந்து சேர்ந்த இலங்கையர்கள் என்று நம்பப்படும் 76பேருடன் தாம் கடும்போக்கை கடைப்பிடிக்க இருப்பதாக அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனடி தெரிவித்துள்ளார். தமிழ் கனடியர்கள் இந்த படகு மக்கள்மீது கருணை காண்பிக்குமாறு கனடிய அதிகாரிகளை வற்புறுத்திவரும் அதேவேளை, இந்த குடியேற்றவாசிகளின் சட்டவிரோத படகுப்பயணம் அதிகரித்துவரும் சட்டவிரோத ஆட்கடத்தல் பிரச்சினைரயை சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது என்று அமைச்சர் கெனடி ஊடகச் செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். அநேகமான புகலிடக் கோரிக்கைகள் பொய்யானவை என்று நம்பப்படுவதாகவும் அவை தொடர்பாக கடும் சட்டங்களை கொண்டு வரப்போவதாகவும் கனடாவின் கொன்சர்வேற்றிவ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கனடாவில் கைதானவர்கள் விசாணைக்காக வன்கூவர் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்- (விரிவான செய்தி)


கனடாவின் மேற்கு கரையோரப்பகுதியில் கப்பல் ஒன்றுடன் கடந்தவார இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கை அகதிகளென சந்தேகிக்கப்படும் குழுவினர் கப்பலுடன் விக்டோரியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பஸ்களில் மேல்விசாரணைக்காக வன்கூவர் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை போட்றென்ஃபுஸ் துறைமுகத்திற்கு அருகில் வைத்து ஓசன் லேடி என்ற இந்த கப்பலை கனடிய பொலிஸார் சோதித்தபோது அதற்குள் 76 ஆண்கள் இருந்துள்ளனர். கனடிய எல்லைச்சேவை நிறுவன அதிகாரிகளும் பொலிஸாரும் இக்குழுவினரைப் பற்றியோ அவர்கள் எவ்வாறு கனடா கடற்பரப்புக்குள் காணப்பட்ட கப்பலுக்குள் வந்தார்கள் என்பது பற்றியோ அவர்களது சொந்த நாடு எது என்பது பற்றியோ எதுவும் தெரிவிக்கவில்லை. இதிலிருந்து, சட்டவிரோதமாக ஆட்கள் கனடாவுக்கு கொண்டு வரப்படுகிறார்கள் என்றும் அவர்கள் அகதிஅந்தஸ்து கோர இருக்கும் இலங்கைத் தமிழர்களாக இருக்கலாம் என்றும் ஊகங்கள் எழுந்துள்ளன. ஆனால் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் இவற்றில் எதையும் உறுதிப்படுத்தவில்லை. வான்கூவரில் உள்ள விசாரணைப்பிரிவு ஒன்றுக்கு இவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்த எல்லைச் சேவைகள் முகவர்நிலைய அதிகாரி றோப் ஜோன்ஸன், இவர்களை கனடாவிற்குள் அனுமதிப்பது பற்றி தொடர்ந்து விசாரணை நசடத்தப்படும் என்றும் ஞாயிற்றக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இவர்களது உடனடித் தேவைகள் பற்றியும் சுகாதாரநிலை பற்றியும் விரைந்து ஆராயப்படுவதாக தெரிவித்த ஜோன்ஸன் கனடிய சட்டதிட்டங்களுக்கு அமைய அவர்கள் உன்னிப்பாக விசாரிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை பிற்பகல் ஓசன் லேடி கப்பலை கனடிய கடற்படையினர் கண்டதும் ஆயுதமேந்திய கனடிய பொலிஸார் கப்பலுக்குள்ஏறி அதனை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தனர். பொலிஸார் பிடித்த படங்களில் கப்பலுக்குள் இருந்தவர்கள் சிவில்உடைகளில் காணப்பட்;டனர். சிலர் சேர்ட்டுக்கள் அணிந்திருக்கவில்லை. அவர்கள் மேலே பறந்துகொண்டிருந்த ஹெலிகொப்டரை பார்த்து கைகளை அசைத்தமை படங்களில் தெரிந்தது. நல்ல தேகாரேக்கியத்துடன் காணப்பட்டார்கள். கப்பல் இலங்கையிலிருந்து புறப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து நம்பப்படுவதாக கனடிய பொதுப்பாதுகாப்பு அமைச்சர் பீற்றர் வேன்லோன் தெரிவித்தபோதிலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. கனடிய தமிழ் காங்கிரஸை சேர்ந்த டேவிட் பூபாலபிள்ளை அளித்த பேட்டி ஒன்றில், ஊடகங்களில் வெளியான படங்களில் கப்பல் அகதிகளை பார்த்தபோது அவர்கள் தமிழர்களாக இருக்கலாமென தாம் கருதுவதாக தெரிவித்துள்ளார். அவர்களது முகங்களையும் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளையும் பார்த்தபோது அவை தமிழர்கள் அணியும் பைஜாமா ஆடைகள்போலத் தெரிவதாக அவர் கூறியுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates