கனேடிய புலிகளின் நாடுகடந்த தமிழீழ தேர்தல் துண்டுபிரசுரத்தை பத்திரிகைக்குள் வைக்க மறுத்த தமிழ் பத்திரிகைக்கு கனேடிய புலிகள் ஆப்பு!
இதேவேளை புலிகளின் மேற்படி கற்பனை தமிழீழ தேர்தலிற்கு முழுமையான ஆதரவினை கனடாவில் வாரம் ஒருமுறை வெளிவரும் இலவச தமிழ்பத்திரிகை ஒன்;று வழங்கவில்லை என்று தெரிவித்து, கனடா புலிகளால் மேற்படி பத்திரிகை வர்த்தக நிலையங்களில் இருந்து அகற்றப்பட்டதாக பத்திரிகையின் ஆசிரியர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.
இலவச பத்திரிகையான அவ் பத்திரிகை கடந்த காலங்களில் புலிகளின் பலவந்த பணசேர்ப்பு, அடாவடிதனங்களை கண்டிக்காது புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவினை தெரிவித்துவந்ததுடன் தனது ஆசிரியர் தலையங்கத்தில் கூட புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நியாயம்தேடியது. இவ்வாறான நிலையில் தமது கற்பனை தமிழீழத்திற்கு ஆதரவு வழங்கவில்லை என்று தெரிவித்து மேற்படி பத்திரிகையை வர்த்தக நிலையங்களில் இருந்து அகற்றி பத்திரிகையின் வெளியீட்டுக்கு கனேடிய புலிகளால் ஆப்புவைக்கப்பட்டுள்ளது. இவ் பத்திரிகை கடந்த காலங்களில் ஏனைய ஊடகங்கள் தாக்கப்பட்டும், பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டபோது மௌனம் காத்து தனது ஊடக வியாபாரத்தை கற்சிதமாக மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எஸ்ஆரூரான்
கனடா
0 Response to "கனேடிய புலிகளின் நாடுகடந்த தமிழீழ தேர்தல் துண்டுபிரசுரத்தை பத்திரிகைக்குள் வைக்க மறுத்த தமிழ் பத்திரிகைக்கு கனேடிய புலிகள் ஆப்பு!"
แสดงความคิดเห็น