அவுஸ்திரேலியக் கடலில் மேலும் ஒரு அகதிகள் படகு!
அவுஸ்திரேலியா நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை 55அகதிகளை ஏற்றிச்சென்ற இன்னுமொரு படகு அவுஸ்திரெலியாவின் கடலில் வைத்து மறிக்கப்பட்டது என அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆஷ்மோர் தீவின் வடமேற்குக் கரையை இந்த படகு அடைவதற்கு முன்னதாக அப்படகை அவுஸ்திரேலியாவின் கரையோர காவல்படையினரும் சுங்க அதிகாரிகளும் கைப்பற்றியுள்ளனர். இந்த படகில் 55 அகதிகளுடன் 4படகோட்டிகளும் இருந்ததாக ஏ.பி.சி.செய்தி தெரிவிக்கிறது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பு உடல்நல மற்றும் அடையாள பரிசோதனைகளுக்காக கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே அவுஸ்திரேலியா நோக்;கி செல்லும் அகதிகள் மறிக்கப்பட்டு கிறி;ஸ்மஸ்தீவில் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இதுவரை இந்த வருடம் மட்டும் அகதிகளை ஏற்றிச்சென்ற 56 படகுகளையும் கப்பல்களையும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதில் சென்றவர்களில் அநேகர் இலங்கை தமிழர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
0 Response to "அவுஸ்திரேலியக் கடலில் மேலும் ஒரு அகதிகள் படகு!"
แสดงความคิดเห็น