jkr

கனடாவில் தமிழ்ப் பத்திரிகைகள் புலிக்குண்டர்களால் அள்ளிச்செல்லப்பட்டுள்ளது.


ஐனநாயக நாடான கனடாநாட்டில் பத்திரிகைச்சுதந்திரம் கருத்துச்சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் தமிழ்பத்திரிகைகளான சுதந்திரன்; தங்கதீபம் தமிழர்செந்தாமரை, உதயன் ஆகிய ஆயிரக்கணக்கான தமிழ்பத்திரிகைகளின் பிரதிகள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தமிழ்த்தேர்தல் நடத்திய வன்முறை குழுவினரால் பலாத்காரமாக அள்ளிச் செல்லப்பட்டிருக்கின்றது. இச்சம்பவத்தால் கனடாவாழ்தமிழர்கள் விசனம் அடைந்துள்ளனர்.

இந்தப்பத்திரிகைகள் அவர்கள் கொடுத்த தேர்தல் விளம்பரங்களை விபரமாக பிரசுரித்திருந்தனர் ஆனால் இவ்விளம்பரங்கள் இந்த தமிழ்த்தேர்தல் நடத்தியவர்களை திருப்திப்படுத்தாதபடியால் அள்ளிச்செல்லப்பட்டதாக தெரியவருகின்றது.

கனடாவில் கடந்தகாலங்களில் தமிழர்கள்மீதும் தமிழ் ஊடகங்கள்மீதும் வன்முறைகளை பிரயோகித்ததும் கனேடிய அரசினால் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டதுமான உலகத்தமிழர் இயக்கத்தினரது கைவரிசை இதில் உள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.

கனடாவில் அமைதியையும் சமாதானத்தையும் நேசிக்கும் தமிழ் மக்களுக்கும் தமிழ்ஊடகத்துறைக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. மூன்று இலட்சம் தமிழ் மக்கள் வாழும் கனடாநாட்டில் இந்தத்தேர்தலில் 48ஆயிரம் தமிழர்கள் மட்டுமே வாக்களித்திருக்கிறார்கள். ஏனைய பெரும்பான்மைத்தமிழர்கள் இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களின் ஊடகங்களான ரி.வி.ஐ தொலைக்காட்சி சி.எம்.ஆர்; சி.ரி.ஆர் வானொலிகள் பெருத்த எடுப்பில் பிரச்சாரம் செய்தும் தமிழ் மக்கள் வாக்களிக்கச் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

ஐனநாயகமுறையில் தமிழர்களின் கருத்தைப்பெற்றுக்கொள்ளவே இந்தத்தேர்தல் என்று கனேடிய ஊடகங்களுக்கு பேட்டிகொடுத்து போலி ஐனநாயக நாடகம் ஆடிய இந்த குழுவினரின் நடவடிக்கைகளை கனேடிய ஊடகங்களுக்கு அம்பலப்படுத்துவது ஒவ்வொரு தமிழரினதும் கடமையாகும்.

ஐனநாயகம் என்ற போர்வையில் பணநாயகம்தான் இவர்களின் உண்மையான இலக்கு என்பதை கனேடியத்தமிழர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் காரணம் கடந்தகாலங்களில் விடுதலைக்கு என சேர்த்த பணத்தில் வீடுகள் வாங்கியவர்களுக்கும் வியாபாரம் தொடங்கியவர்களுக்கு இப்போது பிழைப்பு இல்லாமல் போய்விட்டது.

அதனால் தமிழ்ஈழத்தை கைவிட்டுவிட்டு இந்த வட்டுக்கோட்டைத்தீர்மானத்தை புதைகுழியில் இருந்து தோண்டி எடுத்திருக்கிறார்கள். இந்த பணநாயகர்களினால்தான் பத்திரிகைச் சுதந்திரம் பறிக்கப்பட்டிருகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "கனடாவில் தமிழ்ப் பத்திரிகைகள் புலிக்குண்டர்களால் அள்ளிச்செல்லப்பட்டுள்ளது."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates