சைவ உணவுக்கு நடிகை பிரசாரம்
சைவ உணவின் நன்மைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. நடிகை நீது சந்திரா அதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.
அசைவ உணவு ரகங்களை விரும்பிச் சாப்பிடும் பலர் இப்போது உடல்நலன் கருதி சைவ உணவுக்கு மாறி வருகின்றனர். அசைவ உணவுகளை விட சைவ உணவுகளில்தான் அதிகமான சத்துகளும், உடலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களும் அடங்கியுள்ளன.
சைவ உணவின் அவசியத்தை வலியுறுத்தி நடிகை நீது சந்திராவுடன் கைகோர்த்து சென்னையைச் சேர்ந்த ஓட்டல் இன்ப்ளூயன்ஸ், பிரசாரத்தை தொடங்கியுள்ளது.
அதன்படி, ஓட்டலில் அறிமுகமாகியுள்ள Ôகிரீன் கார்டுÕ வாங்கிக் கொண்டால், இன்ப்ளூயன்ஸ் ஓட்டலில் சாப்பிடும்போதும், ஸ்பா சேவையைப் பெறும்போதும் பில் தொகையில் 15 சதவீத தள்ளுபடி அளிக்கப்படுகிறது. தவிர, பில் தொகையில் 15 சதவீதத்தை சைவ உணவு ஆதரவு பிரசாரத்துக்கு ஓட்டல் நிர்வாகம் செலவிட முடிவு செய்துள்ளது.
இதுபற்றி ஓட்டலின் நிறுவனர் வர்ஷா ஜெயின் கூறுகையில், ÔÔசைவ உணவின் மீது மக்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. அதன் அவசியத்தை எங்கள் பிரசாரம் வலியுறுத்தும்ÕÕ என்றார்.
0 Response to "சைவ உணவுக்கு நடிகை பிரசாரம்"
แสดงความคิดเห็น