jkr
แสดงบทความที่มีป้ายกำกับ கிரிக்கெட் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ கிரிக்கெட் แสดงบทความทั้งหมด

ரெய்னாவின் சதத்தால் மீண்ட இந்திய அணி


இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மும்முனை சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி இன்று மிர்பூரில் பகலிரவு ஆட்டமாக நடைப்பெறுகின்றது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடும் படி பணித்தது இதன் படி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சு அபாரமாக காணப்பட்டதால் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்டவீரர்களாக களமிறங்கிய செவாக் 42 ஓட்டங்களுடனும், கம்பீர் எவ்வித ஓட்டங்களும் பெறாமல் ஆட்டமிழந்தனர். மேலும் தொடர்ந்து வந்த வீரர்களும் சரியான முறையில் பிரகாசிக்காமல் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களுக்கு முகம்கொடுக்க முடியாது சரமாரியாக ஆட்டமிழந்தனர்.

இந் நேரத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்து கொண்டிருந் போது 6வது விக்கெட்டுக்காக இனைந்துக் கொண்ட ரெய்னா மற்றும் சடேஜா ஆகியோர் நிதானமாக ஆடி தனது அணியின் ஓட்ட எண்ணிக்கையை வலுப்படுத்தினர். ரெய்னா 00 ஓட்டங்களையும், சடேஜா 38 ஓட்டங்களையும் அணிக்காக பெற்றுக் கொடுத்தனர். இவர்கள் இருவரும் இனைப்பாட்டமாக 106 ஓட்டங்களை பெற்றிருந்தபோது சடேஜா 38 ஓட்டங்ளுடன் டில்சானின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ரெய்னாஓட்டங்களை பெற்றதன் மூலம் ஒரு நாள் போட்டியில் 2வது சதத்தை பெற்றார்.

பந்து வீச்சில் சிறப்பாக பந்நு வீசிய குலசேகர 10 ஓவர்களில் 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைபற்றினார். 246 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 01 விக்;கெட் இழப்பிற்கு 19 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதே வேளை இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 3-1 என்ற விகிதத்தில் கைப்பற்றி இருந்தது. 'லீக்' ஆட்ட முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. தற்போது நடைபெற்று வரும் மும்முனைப் போட்டியில் இரு அணிகளும் 2 முறை மோதி இந்தியா ஒரு ஆட்டத்திலும், இலங்கை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது. , , ,
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நாளைய போட்டியில் வெல்லப் போவது இந்தியாவா? இலங்கையா?


மும்முனைக் கிரிக்கெட் போட்டி பங்களாதேஸில் நடைபெற்று வருகிறது. 'லீக்' ஆட்ட முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இறுதிப்போட்டி நாளை (13-ஆந்திகதி) நடைபெறுகிறது. சமீப காலமாக இரு அணிகளும் தொடர்ந்து விளையாடி வருகிறது. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 3-1 என்ற விகிதத்தில் கைப்பற்றி இருந்தது. தற்போது நடைபெற்று வரும் மும்முனைப் போட்டியில் இரு அணிகளும் 2 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா ஒரு ஆட்டத்திலும், இலங்கை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

தற்போதைய இந்திய அணி மிகவும் பலமாக இருப்பதால் கிண்ணத்தைக் கைப்பற்றும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பலமே துடுப்பாட்டம்தான். வீரட்கோக்லி, காம்பீர், தலைவர் டோனி, ரெய்னா ஆகியோர் தொடர்ந்து துடுப்பாட்டத்தில் துடிப்புடன் உள்ளனர்.

கடந்த 2 போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்ட அதிரடி துடுப்பாட்ட வீரர் வீரேந்தர் ஷேவாக் நாளைய இறுதிப் போட்டியில் விளையாடுவார். அவர் அணிக்குத் திரும்புவது மேலும் துடுப்பாட்ட பலத்தை அதிகரிக்கும். கடந்த 2வது ஆட்டத்தில் நன்றாக ஆடிய தினேஷ் கார்த்திக் நீக்கப்படுவார்.

சுதிப் தியாகியின் பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. இதனால் இறுதிப்போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். தியாகி இடம் பெற்றால் நெக்ரா அல்லது ஸ்ரீசாந்த் நீக்கப்படலாம். கடைசி 'லீக்' ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்ட ஜாகீர்கான் இடம் பெறுவார். முன்னணி சுழற்பந்து வீரரான ஹர்பஜன்சிங்குக்கு 2 ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்டது.

அவருக்கு பதிலாக இடம் பெற்ற அமித் மிஸ்ரா இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் கைப்பற்றினார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் விக்கெட் கைப்பற்றவில்லை. இறுதிப்போட்டியில் ஹர்பஜன்சிங்கா? மிஸ்ராவா? என்பதை டோனிதான் முடிவு செய்ய வேண்டும். இதில் ஹர்பஜன்சிங்குக்குதான் அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவுக்கு எல்லா வகையிலும் இலங்கை அணி சவாலாகத் திகழும். அதிரடி துடுப்பாட்ட வீரர் டில்சான் துருப்பு சீட்டாக உள்ளார். அவர் களத்தில் இருக்கும்வரை இலங்கையின் ஓட்டதொகையை கட்டுப்படுத்த முடியாது. தலைவர் சங்ககாரா, தொடக்க வீரர் தரங்கா ஆகியோரும் அதிரடியாக ஆடக்கூடியவர்கள்.

சமரவீர, முன்னாள் தலைவர் ஜெயவர்த்தன, பெரேரா ஆகியோரும் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். பந்து வீச்சில் வெலுகேந்தரா, ரந்தீவ் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளுமே பலம் பொருந்தியவை என்பதால் நாளைய இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் 1.30 மணிக்குப் போட்டி ஆரம்பமாகும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

முத்தரப்பு கிரிக்கெட் போட்டி : இலங்கை, இந்தியா நாளை மோதல்


இந்தியா, இலங்கை, வங்காள தேசம் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இதுவரை 4 “லீக்” ஆட்டங்கள் முடிந்துள்ளன. இலங்கை அணி 3 ஆட்டத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளி பெற்றுள்ளது. வங்காளதேசம் 3 ஆட்டத்தில் தோற்றுள்ளது.

5-வது லீக் ஆட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி ஏற்கனவே இலங்கையிடம் தோற்று இருந்தது. தற்போது 2-வது முறையாக நாளை சந்திக்கிறது. இலங்கையிடம் தோற்றதற்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர்.

வங்காள தேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. கேப்டன் டோனி, வீரட் கோக்லி, சுரேஷ் ரெய்னா முத்திரை பதித்தனர்.

இந்திய வீரர்களின் பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு மிகவும் மோசமாக உள்ளது. இதை சரி செய்தால் வெற்றியை பெற இயலும். பேட்டிங்கையே அதிகமாக நம்ப வேண்டி உள்ளது.

புதுமுக வீரர்களின் காயம் காரணமாக ஜெயவர்த்தனே அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த அணியின் பேட்டிங் பலம் பெற்று இருக்கிறது.

நேற்றைய வங்காள தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவரும், தரங்காவும் சதம் அடித்தனர். இந்தியாவுடன் ஒப்பீடுகையில் அந்த அணி பந்துவீச்சில் பலம் பெற்று காணப்படுகிறது.

இதுவரை நடந்த 4 ஆட்டங்களிலும் 2-வது பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இதற்கு பனி காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதே காரணமாகும். இதனால் எந்த அணி “டாஸ்” வென்றாலும் 2-வது பேட்டிங் செய்வதை விரும்பும்.

இரு அணிகளும் நாளை மோதுவது 120-வது போட்டியாகும். இதுவரை நடந்த 119 போட்டியில் இந்தியா 63 ஆட்டத்திலும், இலங்கை 45 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 11 ஆட்டம் முடிவு இல்லை.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கடைசி 2 போட்டியிலும் யுவராஜ் விளையாடமாட்டார்


மும்பை : இலங்கை அணியுடனான 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டியில், ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மொகாலியில் நடந்த டி20 போட்டியின்போது யுவராஜ் சிங்கின் சுண்டுவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் அவர் விளையாடாமல் ஓய்வெடுத்தார்.
கட்டாக்கில் நேற்று முன்தினம் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய அவர், 40 பந்தில் 23 ரன் எடுத்தார். இந்நிலையில், காயம்பட்ட விரலில் அவருக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தா (டிச.24) மற்றும் டெல்லியில் (டிச.27) நடக்கவுள்ள கடைசி 2 ஒருநாள் போட்டியிலும் யுவராஜ் விளையாடமாட்டார் என பிசிசிஐ நேற்று அறிவித்தது.
அவருக்கு பதிலாக விராத் கோஹ்லி களம் இறங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி


கட்டக்கில் நடைபெற்ற இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது ஒரு நாள் போட்டியில் சேவாக் அருமையான அதிரடி துவக்கம் கொடுக்க, சச்சின் டெண்டுல்கர் இறுதி வரை நின்று 96 ரன்களை எடுக்க இந்தியா 42.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2- 1 என்று முன்னிலை வகித்துள்ளது.

ஸேவாக் அபாரமான துவக்கத்தை கொடுத்து 28 பந்துகளில் 44 ரன்களை எடுக்க, கம்பீரும், சச்சினும் இரண்டாவது விக்கெட்டுக்கு 72 ரன்களையும், யுவ்ராஜ், சச்சின் 3-வக்டு விக்கெட்டுக்கு 42 ரன்களையும் சேர்த்தனர். 169/3 என்ற நிலையில் தினேஷ் கார்த்திக், சச்சினுடன் இணைந்து 73 ரன்களை விக்கெட் இழக்கமல் சேர்த்தனர்.

கம்பீர் விக்கெட்டை ரந்திவ் அபாரமாக வீழ்த்தினார். ரவுன்ட் த விக்கெட்டில் வீசிய ரந்திவ் ஒரு பந்தை நல்ல லெந்தில் வீச அதனை கம்பீர் லெக் திசையில் ஆட முயல பந்து மட்டை வெளி விளிம்பில் பட்டு பௌலரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

யுவ்ராஜ் சிங் 40 பந்துகளில் 23 ரன்களை எடுத்த யுவ்ராஜ் சிங், தன்னை கட்டுப்படுத்தியது பொறுக்காமல் வெலிகேத்ராவின் பந்தை மிக மோசமான ஷாட் ஒன்றை ஆடி சங்கக்காராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால் அதன் பிறகு தினேஷ் கார்த்திக் அபாரமான நிதானத்தையும், ஷாட் தேர்வில் புத்தி சாதுரியத்தையும் காண்பித்து 32 பந்துகளில் 5 பவுண்டர்கள் 1 சிக்சர் சகிதம் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா பவர் பிளேயை எடுத்திருந்தால் சச்சின் தன் சதத்தை எடுத்திருப்பார். ஆனால் ஏனோ பவர் பிளேயை எடுக்கவில்லை. சச்சின் டெண்டுல்கர் அபாரமான கவர் டிரைவ்கள், மிட்விக்கெட் பிளிக்குகள், அஜந்தா மென்டிஸ் பந்துகளை பெடல் ஷாட், தேர்ட் மேனில் தட்டி விடுதல் என்று கள இடைவெளியை அபாரமாக பயன்படுத்தினார்.

104 பந்துகளை சந்தித்த சச்சின் 13 பவுண்டரிகளை அடித்து 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்திய வெற்றியை உறுதி செய்தார்.

இலங்கை அணியில் வெலிகேதரா 8 ஓவர்கள் வீசி 35 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், ஆஃப் ஸ்பின்னர் ரந்திவ் 8 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

மென்டிஸ் மீண்டும் ஏமாற்றம் அளித்தார். அவர் 9 ஓவர்கள் வீசி 67 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. இவர், மற்றும் மலிங்காவின் விக்கெட் எடுக்காத பந்து வீச்சினால் இலங்கை தோல்வி தழுவியது. இல்லையெனில் இந்தியாவிற்கு சற்றே நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் சச்சின் ஒரு முனையில் நின்று இலங்கையின் அது போன்ற சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இது சச்சின் டெண்டுல்கரின் 93-வது ஒரு நாள் கிரிக்கெட் அரை சதமாகும்.

இலங்கை அணி, இந்தியாவின் பேட்டிங் பலத்தை நினைத்து மிகப்பெரிய ரன்களை எடுக்கவேண்டும் என்ற நெருக்கடியில் ஷாட்களை ஆட முயன்று ஆட்டமிழந்தனர். கடைசி 74 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்தனர். இதுவே அவர்கள் தோல்விக்கு மூல காரணமாக அமைந்தது. அதிகமான ஷாட்களை இலங்கை வீரர்கள் முயற்சி செய்து தோல்வியடைந்தனர்.

ரவிந்தர் ஜடேஜாவிற்கு இந்த போட்டியின் சிறந்த பந்து வீச்சாளர் விருது வழங்கப்பட்டது. ஆட்ட நாயகனாகவும் ரவிந்தர் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். அவர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தகது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

டெஸ்ட் தோல்விக்கு பதிலடி கொடுத்தது இலங்கை


-இலங்கை இந்திய அணிகளுக்கிடையே நாக்பூரில் 9/12/2009 நடைபெற்ற இருபது - 20 போட்டியில் ..... ஓட்டங்களால் இந்திய அணி தோல்வியைத் தழுவிக்கொண்டது.

இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவில் அபார துடுப்பாட்டமும் எஞ்சலோ மெத்திவ்ஸ், சனத் ஜயசூரிய ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சும் இலங்கை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தன.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் தோனி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார். அதன் பிரகாரம் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 215 ஓட்டங்களைப் பெற்றது.

குமார் சங்கக்கார 37 பந்துகளில் 78 ஓட்டங்களைப் பெற்றார். கப்புகெதர 47 ஓட்டங்களையும், தில்ஷான் 34 ஓட்டங்களையும் தமது அணிக்கு பெற்றுக்கொடுத்து வலு சேர்த்தனர்.

கடுமையான இலக்கினை அடைவதற்காக களமிறங்கிய இந்திய அணிக்கு குறிப்பிட்ட ஓவர்களுக்குள் அதனை அடைய முடியவில்லை. இந்திய அணியின் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கௌதம் காம்பீர், விரேந்திர ஷேவாக் ஆகியோர் முறையே 55,26 ஆகிய ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் மெத்திவ்ஸ், ஜயசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இவ்விரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த இருபது - 20 போட்டி எதிர்வரும் 12ஆம் திகதி மொஹாலியல் நடைபெறவுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இந்தியா 726ரன்களுக்கு டிக்ளேர்!


மும்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 726ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இந்திய, இலங்கை அணிகளுக்கிடையிலான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்றுவருகிறது.

மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தபோட்டியில்.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்ங்கை தேர்ந்தெடுத்த முதல் இன்னிங்சில் 393 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடத்ததொடங்கிய இந்திய அணி சற்று முன்பு வரை 3விக்கெட் இழப்பிற்கு 497ரன்கள் எடுத்துள்ளது.

தொடக்க ஆட்டக்கரார் முரளி விஜய் 87 ரன்கள்எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். சேவாக் அபாரமாக ஆடி இரட்டை சதம் அடித்தார். 3வது சதத்திற்கு 16 ரன்கள் இருந்த நிலையில் நேற்றைய ஆட்டம் நிறைவடைந்தது. மூன்றாவது நாள் ஆட்டத்தில் 16ரன்கள் எடுத்தால் முச்சதம் என்ற நிலையில் ஆடத்தொடங்கிய சேவாக் 293 ரன்கள்எடுத்திருந்த நிலையில் முத்தையா முரளிதரனின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் மூன்று முச்சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற அரியசாதனையை சேவாக் தவறவிட்டார்.

தொடர்ந்து திராவிடும் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். தெண்டுல்கர் 53ரன்களுடனும், லட்சுமணன் 62 ரன்களுடனும், யுவராஜ்சிங் 23 ரன்களுடனும், ஆட்டமிழந்தனர். டோனி நிதானமாக ஆடி சதம் அடித்தார். இந்தியா 726 ரன்கள் எடுத்திருந்த நிலையில டிக்ளேர் செய்தது. அடுத்து இரண்டாவது இன்னிங்சை ஆடத்தொடங்கிய இலங்கை ஆட்ட நேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி 11ரன்கள் எடுத்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தில்ஷன் மூக்கு பகுதியில் எலும்பு முறிவு


ஆமதாபாத் டெஸ்ட் போட்டி முடிந்த பின் கால்பந்து விளையாடியபோது இலங்கை வீரர் தில்ஷனுக்கு மூக்கு உடைந்ததாக செய்தி வெளியாகி உள்ளது.

ஆமதாபாத்தில் நடந்து வ்ந்த இந்தியா, இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி,கடந்த 20 ஆம் தேதியன்று "டிரா'வில் முடிந்தது.

இதனையடுத்து மாலை நேரத்தில் இலங்கை அணியினர் கால்பந்து விளையாடினர்.அப்போது சகவீரருடன் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டதில் தில்ஷன் மூக்கு உடைந்ததாம்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செலப்பட்டு "எக்ஸ்- ரே' எடுத்து பார்க்கப்பட்டதில், தில்ஷன் மூக்கு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

இது குறித்து அணியின் அணியின் மேனேஜர் பிரண்டனிடம் கேட்டபோது,தில்ஷனுக்கு காயம் ஏற்பட்டது உண்மைதான் என்றும்,ஆனால் பெரிய அளவில் பாதிப்பில்லை என்றும், கான்பூரில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தில்ஷன் நிச்சயமாக பங்கேற்பார் என்றும் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலங்கை அணி 334 ஓட்டங்களுடன் முன்னிலை


இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதலாவது இனிங்சின் முடிவில் 760 ஓட்டங்களை பெற்று இந்தியாவை விட 334 ஓட்டங்களுடன் முன்னிலையில் உள்ளது. அஹமதாபாத்தில் நடைபெற்று வருகிற இப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 426 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதன் போது, நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 591 ஓட்டங்களுடன் வலுவான நிலையில் இருந்தது. மஹேல ஜயவர்த்தன 204 ஓட்டங்களுடனும்;, பிரசன்ன ஜயவர்த்தன 84 ஓட்டங்களுடனும்; ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று (வியாழக்கிழமை) 4-வது நாள் ஆட்டத்தின் போது மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 708 ஓட்டங்கள் பெற்றிருந்தது. இது இந்திய அணி பெற்றிருந்த ஓட்டங்களை விட 282 ஓட்டங்கள்; கூடுதலாகும்.

ஜயவர்த்தன 267 ஓட்டங்களுடனும்;, பிரசன்னா ஜயவர்த்தன 134 ஓட்டங்களுடனும்; ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மஹேல ஜயவர்த்தன ஆட்டம் இழந்தார். 435 பந்துகளில் 27 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 275 ஓட்டங்களை பெற்றார். எனவே இவ் இரு வீரர்களும்; இனைந்து பெற்ற இனைப்பாட்ட மூலம் 351 ஓட்டங்களை பெற்று புதிய உலக சாதனை படைத்தனர்.

இதனை தொடர்ந்து களத்தில் இருந்த பிரசன்னா ஜயவர்த்தனே 150 ஓட்டங்களை பெற்றார்;. இதன் போது இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 756 ஓட்டங்களை பெற்றிருந்தது. 7 விக்கெட்டுகளை இழந்து 760 ஓட்டங்களை பெற்றிருந்த போது இலங்கை முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

பின் 334 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியதையடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை பெற்றுள்ளது. களத்தில் கம்பீர் 74 ஓட்டங்களுடனும் அமித் 12 ஓட்டங்களுடனும் இருக்கின்றனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

டில்சானின் அபார ஆட்டத்தால் இலங்கை வலுவான நிலையில்


சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்தியா அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அஹமதாபாத்தில் நடைப்பெற்று வருகின்றது. இதில் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவின் போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ஓட்டங்களை பெற்றிருந்தது. டிராவிட் மற்றும் ஹர்பதான் களத்தில் இருந்தனர்.

இரண்டாம் நாளின் போது டிராவிட் 177 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க தொடர்ந்து வந்த வீர்ர்களும் சரியான முறையில் துடுபாட்டத்தில் பிரகாசிக்காமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 426 ஓட்டங்களை பெற்றனர்.

பதில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டமுடிவின் போது 70 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 275 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுபாட்டத்தில், ஆரம்ப துடுபாட்ட வீரர்களாக களமிறங்கிய பரனவிதான மற்றும் டில்சான் 16.5 ஓவர்களில் 74 ஓட்டங்களை இனைப்பாட்டமாக பெற்றிருந்த போது பரனவிதான 35 ஓட்டங்களுடன் முதலாவது விக்கெட்டை பறிகொடுத்தார்.

தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டில்சானுடன் 2 ஆவது விக்கெட்டுக்காக இனைந்து கொண்ட சங்ககாரவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி இனைப்பாட்டமாக 107 ஓட்டங்களை பெற்றனர். டில்சான் 12 பவுன்டரிகள் அடங்கலாக 107 ஓட்டங்கள் பெற்றார். இதன் மூலம் 57வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடி, 3443 ஓட்டங்களை கடந்துள்ளதோடு இவர் பெறும் 9 ஆவது சதம் இதுவாகும். மேலும் சங்ககார, 31 ஓட்டங்களை பெற்று சகிர்கானின் பந்துக்கு டெண்டுல்கரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

இலங்கை அணி 3 விக்கெட்டுகள் இழந்துள்ள நிலையில், சமரவீர 45 ஓட்டங்களுடனும், ஜேவர்த்தன 36 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இதனை தொடர்ந்து மூன்றாம் நாள் போட்டி நாளை அஹமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

டெஸ்ட் அணி- ஸ்ரீசாந்த் சேர்ப்பு சரியா..?


மும்பை: பந்து வீச்சை விட சர்ச்சைகளால் பெரும் புகழ் பெற்ற ஸ்ரீசாந்த்தை மீண்டும் இந்திய அணியில் சேர்த்துள்ளது பலரையும் வியப்படைய வைத்துள்ளது. இந்திய அணியின் தேர்வு குறித்தும் காரசாரமான விவாதங்கள் எழுந்து விட்டன.

காயமடைந்தார் என்ற காரணத்தால் கடந்த ஒரு வருட காலமாக அணியில் இடம் பெறவில்லை ஸ்ரீசாந்த். ஆனால் அதற்கு முன்பும் கூட அவர் பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை என்பதே உண்மை. மேலும் விளையாட்டை விட சர்ச்சைகளிலும், கேளிக்கைளிலும் பெரும் ஆர்வம் கொண்டு திரிந்தார் ஸ்ரீசாந்த்.

எதிரணியினருடன் முறைப்பது, வாக்குவாதத்தில் ஈடுபடுவது, கேலி செய்வது என சரமாரியான சர்ச்சைகளில் சிக்கினார். இப்படித்தான் ஐபிஎல் போட்டியின்போது பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை கேலி செய்யப் போக அவர் பளார் என கன்னத்தில் அறைந்து நாட்டையே அதிர வைத்தார்.

கேவிக் கேவி அழுத ஸ்ரீசாந்த்தின் முகம் இன்னும் யாருக்கும் மறந்திருக்காது. இப்படி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த ஸ்ரீசாந்த் காயமடைந்து பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டது.

கடந்த ஒரு வருடமாக அவர் விளையாடவில்லை. உருப்படியாக பயிற்சிகள் எதிலும் கலந்து கொள்ளவும் இல்லை. பிட்னஸ் இருக்கிறது என்பதை முறையாக அவர் தெரிவித்துள்ளாரா என்பதும் தெரியவில்லை. இந்த நிலையில் அவரை தடாலடியாக அணியில் சேர்த்துள்ளது ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக் குழு.

இந்தியத் தேர்வுக் குழு எப்போதுமே சரியான அணியைத்தான் தேர்வு செய்யும் என்பதற்கு இதுவரை உருப்படியான ஆதாரம் எதுவும் இல்லை. எனவே ஸ்ரீசாந்த்தின் தேர்வும் கேள்விகளை எழுப்பியுள்ளதில் ஆச்சரியம் இல்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் ஓரளவு சிறப்பாகவே பந்து வீசிய ஆஷிஸ் நெஹ்ராவை அணியில் சேர்க்காமல், விளாயாடமேலேயே இருந்து வந்த ஸ்ரீசாந்த்தைப் பிடித்து அணியில் போட்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை.

ஒரு வேளை இதுதான் கட்டக் கடைசி வாய்ப்பு. இதில் பிழைத்தால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடலாம், இல்லாவிட்டால் நிரந்தரமாக சேர்க்க மாட்டோம் என்று கூறி அணியில் சேர்த்துள்ளார்களா என்று தெரியவில்லை.

இலங்கைத் தொடருக்கு எதிராக விக்கெட்களை வீழ்த்துவதில் ஸ்ரீசாந்த் சாதிப்பாரா என்பதை விட இலங்கை வீரர்களுடன் சண்டை போடாமல் சமர்த்தாக நடந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்புதான் நிறைய உள்ளது - ரசிகர்களிடம்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சச்சினின் சாதனைக்கு தடைபோட்ட நடுவர்


ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 17 ஆயிரம் ரன்களைக் கடப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின், நடுவரின் தவறான முடிவால் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட தொடரின் முடிவு எப்படி வேண்டுமானால் இருக்கும், ஆனால் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 17 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் நிச்சயம் படைப்பார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆஸ்ட்ரேலிய தொடர் தொடங்குவதற்கு முன்பாக இச்சிறப்பை பெற 87 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் முதல் 3 ஆட்டங்களிலும் (14, 4, 32) அவர் ஜொலிக்கவில்லை.

இந்நிலையில் மொகாலியில் நேற்று நடந்த 4வது ஒருநாள் போட்டியின் போது 47 ரன்கள் சேர்த்தால் 17 ஆயிரம் என்ற இலக்கை கடக்கலாம் என்ற சூழல் இருந்தது. இதனைக் கவனத்தில் கொண்டு சச்சின் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் விளையாடினார். ரசிகர்களும் அவரது சாதனையை காண ஆவலாக இருந்தனர்.

சாதனையை நெருங்கிய நேரத்தில் டெண்டுல்கருக்கு, நடுவரின் வடிவில் தடை ஏற்பட்டது. அவர் 40 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த போது நாதன் ஹவுரிட்ஸ் சுழற்பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டது. இலங்கை நடுவர் அசோகா டி சில்வா இந்த அவுட்டை வழங்கினார்.

ஆனால் டி.வி. ரீப்ளேயில் பந்து எந்த ஸ்டம்பையும் தாக்காமல் லெக்-ஸ்டம்புக்கு வெளியே போவது தெளிவாக இருந்தது. தவறான அவுட் கொடுக்கப்பட்டதால் டெண்டுல்கர் மிகுந்த ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். அவர் சாதனை படைக்க இன்னும் 7 ரன்கள் தேவைப்படுவதால் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் அவர் புதிய சாதனை படைப்பார் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

யுவராஜ் அதிரடி: இந்தியா அசத்தல் வெற்றி


டில்லியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் யுவராஜ், தோனியின் சூப்பர் ஆட்டம் கைகொடுக்க, இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரில் 2-1 என்ற முன்னிலை பெற்றது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டியில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமநிலையை எட்டியது. மூன்றாவது போட்டி டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நேற்று நடந்தது.

மூன்றாவது முறை:
இத்தொடரில் மூன்றாவது முறையாக “டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் டிம் பெய்ன், ஷான் மார்ஷ், வேகப்பந்துவீச்சாளர் ஹில்பெனாஸ் மூவரும் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக முறையே கிரகாம் மானவ், ஹென்ரிக்ஸ், போலிங்கர் தேர்வு செய்யப்பட்டனர்.

நிதான துவக்கம்:
ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரர்களாக கேப்டன் பாண்டிங், வாட்சன் களமிறங்கினர். இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள், நிதானமாக ரன் சேர்த்தனர். முதல் 16 ஓவர் வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.

யுவராஜ் திருப்பம்:
இந்நிலையில் 17வது ஓவரை வீசிய யுவராஜ் சிங் திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது சுழலில் சிக்கிய வாட்சன்(41), கேப்டன் தோனியின் துடிப்பான “ஸ்டம்பிங்கில்’ அவுட்டானார்.

பாண்டிங் அரைசதம்:
பின்னர் மைக்கேல் ஹசியுடன் இணைந்த பாண்டிங், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருநாள் அரங்கில் தனது 72வது அரைசதம் கடந்தார். இவர் 4 பவுண்டரி உட்பட 59 ரன்கள் சேர்த்த நிலையில், ரவிந்திர ஜடேஜா சுழலில் வீழ்ந்தார். அடுத்து வந்த காமிரான் ஒயிட் (0) ஏமாற்றினார்.

ஹசி அபாரம்:
மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மைக்கேல் ஹசி, ஒருநாள் அரங்கில் தனது 27வது அரைசதம் பதிவு செய்தார். இவருடன் இணைந்த வோஜஸ் (17), ஹென்ரிக்ஸ் (12) நீண்டநேரம் நிலைக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. மைக்கேல் ஹசி (81), மிட்சல் ஜான்சன் (9) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் சுழலில் அசத்திய ரவிந்திர ஜடேஜா அதிகபட்சமாக 2 விக்கெட் வீழ்த்தினர்.

திணறல் துவக்கம்:
சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சேவக் துவக்கம் கொடுத்தனர். சொந்த ஊரில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சேவக் (11), ஜான்சன் வேகத்தில் போல்டானார். அவசரப்பட்ட சச்சின் (32), ரன்-அவுட்டானார். மற்றொரு டில்லி வீரர் காம்பிர் (6) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. இதனால் இந்திய அணி 53 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறியது.

சூப்பர் ஜோடி:
பின்னர் கேப்டன் தோனி-யுவராஜ் சிங் இணைந்து அருமையாக ஆடினர். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய யுவராஜ், வோஜஸ் வீசிய 35வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து, ஒருநாள் அரங்கில் தனது 42வது அரைசதம் பதிவு செய்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த தோனி, ஒருநாள் அரங்கில் தனது 33வது அரைசதம் கடந்தார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்த நிலையில், யுவராஜ் (78), ஹென்ரிக்ஸ் பந்தில் சிக்கினார்.

இரண்டாவது வெற்றி:
பின்னர் இணைந்த சுரேஷ் ரெய்னா-தோனி ஜோடி, அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. இந்திய அணி 48.2 ஒவரில் 4 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில், வெற்றி பெற்றது. இதன்மூலம் ஏழு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது. கேப்டன் தோனி (71), ரெய்னா (9) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை யுவராஜ் வென்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பிரபல சர்வதேச கிரிக்கெட் நடுவர் டேவிட் ஷெப்பர்ட் மரணம்


இங்கிலாந்தை சேர்ந்த பிரபல முன்னாள் சர்வதேச கிரிக்கெட் நடுவர் டேவிட் ஷெப்பர்டு மரணம் அடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்தநிலையில் தனது . 68ஆவது வயதில் டேவிட் ஷெப்பர்டு மரணமடைந்தார். 1983ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை 172 ஒரு நாள் போட்டி மற்றும் 92 டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றி இருக்கிறார். இதில் 3 உலக கோப்பை போட்டி இறுதி ஆட்டமும் அடங்கும். 282 முதல் தர போட்டியில் விளையாடி உள்ள ஷெப்பர்டு 1981ஆம் ஆண்டில் முதல் தர போட்டியில் நடுவராக நியமிக்கப்பட்டார். 2005ஆம் ஆண்டில் சர்வதேச நடுவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ,
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

“சூப்பர் ஓவரில்’ ஈகிள்ஸ் அணி வெற்றி


சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′ தொடரின் பரபரப்பான போட்டியில் “சூப்பர் ஓவர்’ மூலம் ஈகிள்ஸ் அணி, சசக்ஸ் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் ஈகிள்ஸ் அணி “சூப்பர்-8′ சுற்றுக்கு அசத்தலாக முன்னேறியது. சசக்ஸ் அணி வெளியேறியது.

சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′ தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று டில்லியில் நடந்த “பி’ பிரிவு லீக் போட்டியில் இங்கிலாந்தின் சசக்ஸ் அணி, தென் ஆப்ரிக்காவின் ஈகிள்ஸ் அணியை சந்தித்தது. இரு அணிகளுமே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின. டாஸ் வென்ற சசக்ஸ் அணி கேப்டன் மைக்கேல் யார்டி, பேட்டிங் தேர்வு செய்தார்.

சசக்ஸ் அணி துவக்கத்தில் திணறியது. அதிரடியாக ஆடிய லூக் ரைட் அதிக நேரம் நீடிக்கவில்லை. இவர் 19 ரன்களுக்கு(1 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார். இதற்கு பின் வந்த நாஷ்(7), ஹாமில்டன்(6), டுவைன் ஸ்மித்(9) ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி ஏமாற்றினர். யார்டி (12) சோபிக்கவில்லை. ஜாய்ஸ் 21 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் கேட்டிங் 25 ரன்கள் எடுத்து அணிக்கு கைகொடுத்தார். சசக்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்தது. பியுஸ் சாவ்லா(9), யாசிர் அராபத்(1) அவுட்டாகாமல் இருந்தனர்.

ரோசாவ் அபாரம்:
சுலப இலக்கை விரட்டிய ஈகிள்ஸ் அணிக்கு ரோசாவ் அசத்தல் துவக்கம் தந்தார். மெக்லாரன்(16), வான் விக்(2), திப்பனார்(7) ஏமாற்றினர். அபார ஆட்டத்தை தொடர்ந்த ரோசாவ் அரைசதம் கடந்தார். இவர் 65 ரன்களுக்கு(7 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார். இதற்கு பின் ரன் வேகம் குறைந்து போனது.

போட்டி “டை’:
கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைமை ஏற்பட்டது. யாசிர் அராபத் பந்துவீசினார். முதல் 3 பந்தில் 3 ரன் தான் எடுக்கப்பட்டது. 4வது பந்தில் மெக்லாரன் ஒரு பவுண்டரி அடித்தார். 5வது பந்தில் ரன் இல்லை. 6வது பந்தில் மெக்லாரன் மீண்டும் ஒரு பவுண்டரி அடிக்க, ஸ்கோர் சம நிலையை எட்டியது. ஈகிள்ஸ் அணியும் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுக்க, சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′ தொடரில் முதல் முறையாக போட்டி “டை’ ஆனது.

“சூப்பர் ஓவர்’:
இதையடுத்து “சூப்பர் ஓவர்’ மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு ஓவர் பேட் செய்ய வேண்டும். ஒரு அணிக்கு 3 பேட்ஸ்மேன், ஒரு பவுலர் தேர்வு செய்யப்படுவர். இரண்டு விக்கெட்டுகளை இழந்தால், அந்த அணி தோல்வி அடைந்ததாக கருதப்படும். அத்தோடு ஓவர் முடிவடைந்து விடும்.

இதன்படி முதலில் ஈகிள்ஸ் அணி பேட் செய்தது. சசக்ஸ் சார்பில் யாசிர் அராபத் பந்துவீசினார். முதலிரண்டு பந்தில் இரண்டு ரன். 3வது பந்தில் ரன் இல்லை. 4வது பந்தில் ரோசாவ் ஒரு சிக்சர் அடித்தார். 5வது பந்தில் ரன் இல்லை. 6வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட, ஈகிள்ஸ் அணி ஒரு விக்கெட்டுக்கு 9 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கியது சசக்ஸ் அணி. அபாரமாக பந்துவீசிய ஈகிள்ஸ் வீரர் டிவிலியர்ஸ் தனது முதல் பந்தில் டுவைன் ஸ்மித்தை(0) போல்டாக்கினார். அடுத்த பந்தில் ஹாமில்டனையும்(0) போல்டாக்கினார். இரண்டு விக்கெட் இழந்ததால், விதிமுறைப்படி சசக்ஸ் அணி தோல்வி அடைந்து, வெளியேறியது. “சூப்பர் ஓவர்’ முறையில் வெற்றி பெற்ற ஈகிள்ஸ் அணி “சூப்பர்-8′ சுற்றுக்கு முன்னேறியது.
ஆட்ட நாயகன் விருதை ஈகிள்ஸ் அணியின் ரோசாவ் தட்டிச் சென்றார்.

ஸ்கோர் போர்டு

சசக்ஸ் அணி

நாஷ்(கே)மெபிட்சாங்(ப)பிரீஸ் 7(10)
லூக் ரைட்(ப)டிவிலியர்ஸ் 19(12)
ஹாமில்டன்(கே)+(ப)டிவிலியர்ஸ் 6(5)
ஜாய்ஸ்-ரன் அவுட்-(டிவிலியர்ஸ்) 21(34)
டுவைன் ஸ்மித்(ப)மெபிட்சாங் 9(15)
யார்டி(ப)பெய்லி 12(14)
கேட்டிங்(கே)மெக்லாரன்(ப)பிரீஸ் 25(22)
சாவ்லா-அவுட் இல்லை- 9(7)
யாசிர் அராபத்-அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 10
மொத்தம்(20 ஓவரில் 7 விக்.,) 119
விக்கெட் வீழ்ச்சி: 1-23(லூக் ரைட்), 2-29(நாஷ்), 3-33(ஹாமில்டன்), 4-49(டுவைன் ஸ்மித்), 5-73(யார்டி), 6-102(ஜாய்ஸ்), 7-113(கேட்டிங்).
பந்துவீச்சு: மெபிட்சாங் 4-0-20-1, பிரீஸ் 4-0-23-2, டிவிலியர்ஸ் 4-0-20-2, மெக்லாரன் 4-0-26-0, தஷாபாலாலா 2-0-10-0, பெய்லி 2-0-11-1.

ஈகிள்ஸ் அணி

ரோசாவ்(கே)ஹாட்(ப)ஹாமில்டன் 65(62)
மெக்லாரன் எல்.பி.டபிள்யு.,(ப)சாவ்லா 16(28)
வான் விக்(கே)ஜாய்ஸ்(ப)சாவ்லா 2(7)
திப்பனார்(ப)ஹாமில்டன் 7(7)
மெக்லாரன்-அவுட் இல்லை- 14(13)
பிரீஸ்-அவுட் இல்லை- 3(3)
உதிரிகள் 12
மொத்தம்(20 ஓவரில் 4 விக்.,) 119
விக்கெட் வீழ்ச்சி: 1-72(மெக்லாரன்), 2-79(வான் விக்), 3-93(திப்பனார்), 4-106(ரோசாவ்).
பந்துவீச்சு: லூக் ரைட் 1-0-8-0, யாசிர் அராபத் 3-0-28-0, கிர்ட்லி 2-0-13-0, டுவைன் ஸ்மித் 3-0-16-0, யார்டி 4-0-13-0, சாவ்லா 4-0-17-2, ஹாமில்டன் 3-0-15-2.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சேவக் அதிரடி: டில்லி அணி வெற்றி


சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′ போட்டியில் சேவக், தினேஷ் கார்த்திக் அதிரடியாக அரைசதம் கடக்க, டில்லி டேர்டெவில்ஸ் அணி, வயம்பா அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் “சூப்பர்-8′ வாய்ப்பை டில்லி அணி தக்க வைத்துக் கொண்டது.

சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′ தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று டில்லியில் நடந்த “டி’ பிரிவு லீக் போட்டியில் இந்தியாவின் டில்லி டேர்டெவில்ஸ், இலங்கையின் வயம்பா அணிகள் மோதின. டில்லி அணியில் பிரதீப் சங்வான் நீக்கப்பட்டு, மெக்ராத் வாய்ப்பு பெற்றார். காயமடைந்த மன்ஹாசுக்கு பதிலாக மனோஜ் திவாரி இடம் பெற்றார். ஏற்கனவே விக்டோரியா அணியிடம் தோல்வி அடைந்த டில்லி அணி, இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. டாஸ் வென்ற கேப்டன் காம்பிர், பேட்டிங் தேர்வு செய்தார்.

சேவக் அரைசதம்:
துவக்கத்தில் வெலிகேதரா, உதானா வேகத்தில் டில்லி அணி திணறியது. உதானா வீசிய ஆட்டத்தின் 4வது ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்து ரன் வேட்டையை ஆரம்பித்தார் சேவக். மறுமுனையில் மந்தமாக ஆடிய தில்ஷன் 10 ரன்களுக்கு(16 பந்தில்) வெளியேறினார். மெண்டிஸ் சுழலில் காம்பிர்(3) வீழ்ந்தார். இதற்கு பின் தினேஷ் கார்த்திக் “கம்பெனி’ கொடுக்க, சேவக் தனது அதிரடியை தொடர்ந்தார். பவுண்டரி மழை பொழிந்த இவர் மின்னல் வேகத்தில் அரைசதம் கடந்தார். இவர் 66 ரன்களுக்கு(10 பவுண்டரி, 1 சிக்சர்) துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார்.

“ஹாட்ரிக்’ சிக்சர்:
பின்னர் தினேஷ் கார்த்திக் கலக்கினார். மெண்டிஸ் வீசிய 19வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் தொடர்ந்து மூன்று சிக்சர் விளாசினார். “வைடாக’ வீசப்பட்ட 5வது பந்தை அடிக்க பார்த்த இவர் தடுமாறி கீழே விழுந்தார். இதனை பயன்படுத்திக் கொண்ட விக்கெட் கீப்பர் டி ஜொய்சா “ஸ்டம்ப்சை’ தகர்க்க, கார்த்திக் 61 ரன்களுக்கு(5 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட்டானார். ஓவேஸ் ஷா 18 ரன்கள் எடுத்தார். டில்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. மனோஜ் திவாரி(3), பாட்டியா(5) அவுட்டாகாமல் இருந்தனர்.

நான்ஸ் அசத்தல்:
சவாலான இலக்கை விரட்டிய வயம்பா அணி, நான்ஸ் பந்துவீச்சில் சரிந்தது. மறுபக்கம் மெக்ராத்தும் போட்டுத் தாக்க கடைசி வரை மீள முடியவில்லை. நான்ஸ் வேகத்தில் உதவாட்டே(2), வாண்டர்ட்(9), மகரூப்(3) வெளியேறினர். மெக்ராத் பந்துவீச்சில் முபாரக்(0), லோகுராச்சி(4) அவுட்டாயினர். போராடிய ஜெயவர்தனா 53 ரன்கள் எடுத்தார். வயம்பா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 120 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
டில்லி சார்பில் நான்ஸ் அதிபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை சேவக் தட்டிச் சென்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பைனலில் தோனி-பத்ரிநாத் அணிகள் மோதல்

சாலஞ்சர் டிராபி தொடரின் லீக் போட்டியில் வாசிம் ஜாபர், அபினவ் முகுந்த் சதம் கைகொடுக்க, தோனி தலைமையிலான இந்தியா புளூ அணி, இந்தியா “கிரீன்’ அணியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பைனலுக்குள் நுழைந்தது. பைனலில் பத்ரிநாத் தலைமையிலான இந்தியா “ரெட்’ அணியுடன் மோதுகிறது. தொடர்ந்து இரண்டு தோல்வியடைந்த ரெய்னாவின் இந்தியா “கிரீன்’ அணி, தொடரில் இருந்து வெளியேறியது.

நாக்பூரில் என்.கே.பி., சால்வி சாலஞ்சர் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா “புளூ’ அணி, இந்தியா “கிரீன்’ அணியை சந்தித்தது. டாஸ் வென்ற இந்தியா “புளூ’ கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.

ஜாபர், முகுந்த் சதம்:
இந்தியா “புளூ’ அணிக்கு வாசிம் ஜாபர், அபினவ் முகுந்த் அசத்தல் துவக்கம் கொடுத்தனர். அபாரமாக ஆடிய தமிழக வீரர் முகுந்த், பவுண்டரிகளாக விளாசி சதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 265 ரன்கள் சேர்த்த நிலையில், முகுந்த் (114) வெளியேறினார். மறுமுனையில் வாசிம் ஜாபரும் தன்பங்கிற்கு சதம் அடித்தார். 17 பவுண்டரிகள், ஒரு சிக்சர் உதவியுடன் 143 ரன்கள் எடுத்த நிலையில் இவர் அவுட்டானார்.

இமாலய இலக்கு:
கேப்டன் தோனியுடன் இணைந்த யூசுப் பதான், விக்ரம்ஜீத் ஓவரில் தொடர்ந்து 4 பவுண்டரிகள் அடித்து மிரட்டினார். 50 ஓவரில் இந்தியா “ரெட்’ அணி 2 விக்கெட்டுக்கு 351 ரன்கள் குவித்தது. தோனி (34), யூசுப் பதான் (34) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஸ்ரீவத்சவா ஆறுதல்:
கடின இலக்கை விரட்டிய இந்தியா “கிரீன்’ அணிக்கு ஸ்ரீவத்சவா, அனிருதா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்த நிலையில், அரைசதம் கடந்த தமிழக வீரர் அனிருதா (63) வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ரெய்னா (1), ரகானே (29) உள்ளிட்ட யாரும் கைகொடுக்கவில்லை. தனி ஆளாக போராடிய ஸ்ரீவத்சவா சதம் (100) கடந்து ஆறுதல் அளித்தார். இந்தியா “கிரீன்’ அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. தொடரில் இருந்தும் வெளியேறியது.

லீக் சுற்றில் இரண்டு வெற்றிகள் பெற்ற தோனி அணி (8 புள்ளிகள்), இன்று நடக்கும் பைனலில் பத்ரிநாத் அணியை (5 புள்ளிகள்) சந்திக்கிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஐசிசி விருதுகள் 2009

கிரிக்கெட் ஆஸ்கார் எனப்படும் ஐசிசி விருதுகள் நேற்று தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த கோலாகல விழாவில் வழங்கப்பட்டது.

விருத்துக்கான வீரர்கள் பட்டியலை மேற்கிந்திய ஜாம்பவான் கிளைவ் லாய்ட் தலைமையிலான 5 பேர் குழு தேர்வு செய்தது. அதில் இந்தியாவின் அனில் கும்ளே, இங்கிலாந்தின் பாப் டெய்லர், பாகிஸ்தானின் முடாசர் நாஸர், நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

2008 ஆகஸ்ட் 13ம் திகதி முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் திகதி வரை நடந்த போட்டிகள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது. இதில் இந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் டோணி தொடர்ந்து இரண்டாவது முறையாக பெற்றுக்கொண்டார். அவர் இந்த ஆண்டு 24 போட்டிகளில் 967 ஓட்டங்களை பெற்றுள்ளார். அதேபோல் இந்த ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணிகளின் கேப்டனாக டோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இரண்டு பட்டியல்களிலும் தலா மூன்று இந்தியர்கள் , கம்பீரும், ஒரு நாள் அணியில் ஷேவாக், யுவராஜூம் இடம்பிடித்துள்ளனர். டெஸ்ட் அணியில் 12வது வீரராக ஹர்பஜன் இடம்பிடித்துள்ளார்.

சிறந்த டுவென்டி-20 வீருத இலங்கையின் திலகரத்னே தில்ஷனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த அம்பயராக பாகிஸ்தானின் அலீம் தார் அறிவிக்கப்பட்டார். சிறந்த வீராங்கனைக்கான விருதை இங்கிலாந்தின் கிளைர் டெய்லர் பெற்று கொண்டார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

யுவராஜ் நீக்கம்


சாலஞ்சர் டிராபி தொடருக்கான “இந்தியா-ரெட்’ அணியில் கேப்டன் யுவராஜ் சிங் காயம் காரணமாக நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக அமேயா ஸ்ரீகாந்தே சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா புளூ, ரெட், கிரீன் அணிகள் பங்கேற்கும் சாலஞ்சர் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை நாக்பூரில் நடக்கிறது. இதில் இந்திய ரெட் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் இருந்தார். இவருக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து யுவராஜ் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில் இவர் வரும் 8ம் தேதி துவங்கும் சாலஞ்சர் டிரபி தொடரிலும் நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக அமேயா ஸ்ரீகாந்தே சேர்க்கப்ட்டுள்ளார். இந்த அணியின் கேப்டன் விரைவில் அறிவிக்கப்பட உள்ளார் என இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தெரிவித்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates