jkr
แสดงบทความที่มีป้ายกำกับ தமிழ் தேசியக் கூட்டமைப்பு แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ தமிழ் தேசியக் கூட்டமைப்பு แสดงบทความทั้งหมด

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் தேசிய மாநாட்டில் எடுத்துரைப்பு


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வருடாந்த தேசிய மாநாடு இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம்,சட்டநாதர் கோவிலடி இளங் கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா தலைமையேற்று நடத்தினார்.

தமிழ்த் தேசயக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கல நாதன், சுரேஸ் பிரேமசந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோர் உரையாற்றினர். இலங்கை தமிழரசுக் கட்சியின் 60 ஆம் ஆண்டு நிறைவு மலர் ஒன்றும் இதன்போது வெளியிடப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய வருடாந்த தேசிய மாநாட்டில் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் எதிர்காலத்தில் அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மாநாட்டில் கலந்துகொண்டிருந்த பலரும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி எடுத்துரைத்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் வருங்காலத்திலான அகிம்சை வழியிலான கொள்கைகள் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குதல் மற்றும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பான தீர்வுகளைப் பெறுவதற்காகப் போராடுதல் போன்ற விடயங்கள் பற்றிக் கட்சி உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜனாதிபதி தேர்தல் குறித்து த.தே.கூ. நாளை மீண்டும் சந்திப்பு


ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தீர்மானம் எடுப்பதில் நெருக்கடிகளை எதிர் நோக்கியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை மீண்டும் கொழும்பில் கூடி எடுக்க வேண்டிய தீர்மானம் குறித்து ஆராயவிருக்கின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ள போதிலும் எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் என்.ஸ்ரீகாந்தா ஆகியோருக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை என தெரிய வருகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ,ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோருக்கும் ,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குமிடையில் சந்திப்புகள் இடம்பெற்ற பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாளை கூடவிருக்கின்றது.

நாளைய கூட்டத்தில் இச்சந்திப்புகளில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதோடு இது பற்றி தலைவர் விளக்குவார் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிய வருகின்றது.

மேலும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக எம்.கே.சிவாஜிலிங்கம் (டெலோ) கட்சியின் தீர்மானத்தை மீறி போட்டியிடுவது, தேர்தல் பகிஷ்கரிப்பு என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கொண்டுள்ள நிலைப்பாடு மற்றும் ஆட்சி மாற்றத்திற்காக பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது தொடர்பாக சில நாடாளுமன்ற உறுப்பினர்களினால் முன் வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படவிருக்கின்றது.

இருப்பினும் நளைய கூட்டத்திலும் இத்தேர்தல் தொடர்பாக தீர்மானமொன்றை எடுக்கக் கூடிய வாயப்புகள் இருக்காது போல் தெரிகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரொருவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

இதே வேளை தமது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இத்தேர்தலில் போட்டியிடுகின்ற போதிலும் ,அவருக்கு எதிராக தமது கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்க முடியாதிருப்பது குறித்து டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தனிப்பட்ட ரீதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தரை சந்தித்து தெளிவு படுத்தியதாகவும் தெரிய வருகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

த.தே.கூட்டமைப்பு ஐ.தேகட்சிகளுக்கிடையான பேச்சுவார்த்தைகள் வெற்றி?!


இடம்பெறபோகும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு தனது ஆதரவை வழங்கப்போகிறது என்பது குறித்து பல வட்டாரங்கள் பலகட்டங்களாக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஆளும் இலங்கை சுதந்திர கட்சி ஆகியவற்றுடன் பேச்சுக்களை த.தே.கூட்டமைப்பு நடத்திவருகிறது இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் மற்றும் அதன் பொதுவேட்பாளர் சரத்பொன்சேகா ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்ததாக தெரிவிக்கப்படுகிறது இப்பேச்சுக்களில் த.தே.கூட்டமைப்பு சார்பில் அதன் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றம் ஜனநாயக மக்கள் முன்னணி கட்சித் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர். ஐ.தே.கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வசிப்பிடத்தில் இப்பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. ததேகூட்டமைப்பினரின் முடிவே தேர்தல் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தும் காரணியாக இருக்குமெனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தமிழ்தேசியக்கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தல் குறித்து அவசரமாக கூடுகிறது!


கட்சிக்குள் தோன்றியுள்ள சி;க்கல்நிலை குறித்தும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பிலும் ஆராய்வதற்காக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றகுழு இவ்வாரம் அவசரமாக கூடுகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட வெளிநாட்டுக்கு சென்றிருந்த எம்பிக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக தற்போது நாடு திரும்பியுள்ளனர். இதேவேளை எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிரதிநிதிகள் இன்று சந்தித்து பேசவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சந்திப்பின் போது கட்சியின் பல கோரிக்கைகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் விவாதிக்கப்படவுள்ளது. இதன் பின்னர் அடுத்துவரும் நாட்களில் ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான இருவேட்பாளர்களின் வட்டாரங்களுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே இந்த விவகாரம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. இதேவேளை கட்சிக்குள் தோன்றியுள்ள சிக்கல்நிலை குறித்தும் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரிவித்த கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கட்சியில் அங்கம் வகிக்கும் ஒருசிலரின் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப் படவுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் அந்த மக்களின் அபிலாஷைகளைப் புறந்தள்ளி எவ்வித முடிவினையும் எடுக்காது. ஒருசிலரின் நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ்மக்கள் குழப்பமான நிலையை அடையத் தேவையில்லை கட்சிக்குள் எழுந்துள்ள நிலை தொடர்பாக ஆராய்ந்து ஒரு சுமூகமான தீர்வு எட்டப்படும் எமது கட்சியை சேர்ந்த அனைவரும் தலைமைத்துவக் கட்டுப்பாட்டை மதிப்பவர்கள் அதனை தொடர்ந்து பேணவேண்டியது எமதுகடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார் .
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மக்கள் கருத்தை பரிசீலிக்க த.தே.கூட்டமைப்பு தீர்மானம்


"ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் கருத்துக்களை உள் வாங்கி அதற்கு அமையவே தீரமானம் எடுக்கும்."; என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவிக்கின்றார்

"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மர்றுபட்ட கருத்துக்களையும்; செய்திகளையும் வெளியிட்டு வந்தாலும் அது அவர்களின் சொந்த கருத்தேயன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து அல்லஎமது கட்சி பாராளுமன்ற உறுப்பினரக்ளைப் பொறுத்த வரை கொள்கை ரீதியாக ஒன்று பட்டு உறுதியுடன் இருக்கின்றார்கள். இந் நிலையில் இது தொடர்பாக தமிழ் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை " என்றும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளள சில விடயங்கள் வருமாறு:-

"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே பல தடவைகள் கூடி பல்வேறு கருத்துக்களை ஆராய்ந்துள்ளார்கள்.இதன் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்டங்களுக்கு சென்று மக்களின் கருத்துக்களை அறியும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்

தமிழ் மக்களின் கருத்துக்களின் அடிப்படையிலேயே இறுதி முடிவு எடுக்கப்படும்.தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனியான வேட்பாளரொருவரை நிறுத்துவதில்லை என்று ஏக மனதாக முடிவெடுத்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்த வரை எந்த வேட்பாளரை ஆதரிப்பது ?அல்லது தேர்தல் பகிஸ்கரிப்பா ? அல்லது வாக்கு சீட்டு நிராகரிப்பா ? போன்ற விடயங்கள் குறித்தும்

பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது ?என்பது குறித்தும் ஆழமாக பரிசீலித்துமே இறுதி முடிவு எடுக்கப்படும் .

மக்களுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களே தவிர பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக மக்கள் இல்லை என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.." என்றும் கூறப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜனாதிபதித் தேர்தல் குறித்து ததேகூ திங்களன்று மீண்டும் ஆராயும்


ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் கூடி ஆராயவிருக்கின்றனர்.

நேற்று மாதிவெலையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில், கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இது தொடர்பாகக் கூடி ஆராயப்பட்ட போதிலும் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.

இத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தெடர்பாகவும் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற சந்திப்பு தொடர்பாகவும், இச்சந்திப்பில் சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை என்பது குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கிக் கூறினார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தும் அங்கு முன்வைக்கப்பட்டது.

இதற்கிடையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த, ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சந்தித்துப் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அனுப்பியுள்ள கடிதம் குறித்து இங்கு ஆராயப்பட்ட போதிலும், அப்படி தனித்தனியாகச் சந்தித்து பேச வேண்டியதில்லை என்றும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஏ-9 நெடுஞ்சாலையூடாக பயணிக்க த.தே.கூட்டமைப்புக்கு அனுமதி


தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ - 9 நெடுஞ்சாலை ஊடாக யாழ்ப்பாணம் செல்வதற்கான அனுமதி பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் நேற்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் கிளிநொச்சி ஊடாக தனது வாகனத்தில் யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளார். மதவாச்சியிலிருந்து இவரது வாகனத்திற்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டதாக அறிய முடிகின்றது.

ஏ- 9 நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தரைவழியாக யாழ்ப்பாணம் சென்றுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை விமான மூலமே மேற்கொண்டுவந்தனர் . மாதத்தில் 3 தடவைகள் இலங்கை விமானப் படைக்கு சொந்தமான விமானத்தில் இலவச பயண வசதிகளும் அரசாங்கத்தினால் இவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates