தமிழ்தேசியக்கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தல் குறித்து அவசரமாக கூடுகிறது!
கட்சிக்குள் தோன்றியுள்ள சி;க்கல்நிலை குறித்தும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பிலும் ஆராய்வதற்காக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றகுழு இவ்வாரம் அவசரமாக கூடுகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட வெளிநாட்டுக்கு சென்றிருந்த எம்பிக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக தற்போது நாடு திரும்பியுள்ளனர். இதேவேளை எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிரதிநிதிகள் இன்று சந்தித்து பேசவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சந்திப்பின் போது கட்சியின் பல கோரிக்கைகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் விவாதிக்கப்படவுள்ளது. இதன் பின்னர் அடுத்துவரும் நாட்களில் ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான இருவேட்பாளர்களின் வட்டாரங்களுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே இந்த விவகாரம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. இதேவேளை கட்சிக்குள் தோன்றியுள்ள சிக்கல்நிலை குறித்தும் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரிவித்த கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கட்சியில் அங்கம் வகிக்கும் ஒருசிலரின் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப் படவுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் அந்த மக்களின் அபிலாஷைகளைப் புறந்தள்ளி எவ்வித முடிவினையும் எடுக்காது. ஒருசிலரின் நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ்மக்கள் குழப்பமான நிலையை அடையத் தேவையில்லை கட்சிக்குள் எழுந்துள்ள நிலை தொடர்பாக ஆராய்ந்து ஒரு சுமூகமான தீர்வு எட்டப்படும் எமது கட்சியை சேர்ந்த அனைவரும் தலைமைத்துவக் கட்டுப்பாட்டை மதிப்பவர்கள் அதனை தொடர்ந்து பேணவேண்டியது எமதுகடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார் .
0 Response to "தமிழ்தேசியக்கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தல் குறித்து அவசரமாக கூடுகிறது!"
แสดงความคิดเห็น