வடமாகாண சமூகசேவைகள் திணைக்களத்தினால் காரைநகரில் அமைக்கப்பட்ட புதிய கட்டடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
சமூகசேவைகள் உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான புதிய கட்டடம் காரைநகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சமூகசேவைகள் திணைக்களத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடத்தில் சமூக பராமரிப்பு நிலையம் என்ற வகையில் சமூகசேவைகள் உத்தியோகத்தர்களுக்கான பணிமனையும் சிறுவர் பாதுகாப்பு நிலையம் என்றவகையில் சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்களுக்கான பணிமனையும் ஒருசேர அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
இன்று காலை காரைநகர் உதவி அரசாங்க அதிபர் ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்படி கட்டடத்தை திறந்து அங்குரார்ப்பணம் செய்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

0 Response to "வடமாகாண சமூகசேவைகள் திணைக்களத்தினால் காரைநகரில் அமைக்கப்பட்ட புதிய கட்டடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது."
แสดงความคิดเห็น